Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Dhanush Horoscope | ஹாலிவுட் வரைக்கும் போன தனுஷின் வருங்காலம் என்ன சொல்லுது தெரியுமா?

Gowthami Subramani Updated:
Dhanush Horoscope | ஹாலிவுட் வரைக்கும் போன தனுஷின் வருங்காலம் என்ன சொல்லுது தெரியுமா?Representative Image.

தனது தந்தை பிரபல கிராமக் கதைகளின் இயக்குநர், சகோதரர் இயக்குநர் செல்வராகவன், மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படி எத்தனையோ பலச் சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், தன்னுடைய திறமையால் இந்திய அளவில் IMDB-ல் அதிக பார்வையாளர்களைக் கொண்டு முதலிடத்தில் இருப்பவர் தனுஷ். இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நடிகர் தனுஷின் ஜோதிடம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Dhanush Horoscope | ஹாலிவுட் வரைக்கும் போன தனுஷின் வருங்காலம் என்ன சொல்லுது தெரியுமா?Representative Image

பன்முக கலைஞர்

இவர், 2002 ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் நடிகர் மட்டும் அல்ல. பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என படிப்படியாக சினிமா துறையில் தன்னை வளர்த்துக் கொண்டார். இது இவருக்கு சினிமா துறையின் மீது இருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியதுடன், ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. அது மட்டுமல்லாமல், இவர் எழுதிய பாடல், பாடிய பாடல், இயக்கிய படம் உள்ளிட்ட அனைத்துமே இவருக்கென ஒரு தனிச்சிறப்பைத் தந்துள்ளது.

Dhanush Horoscope | ஹாலிவுட் வரைக்கும் போன தனுஷின் வருங்காலம் என்ன சொல்லுது தெரியுமா?Representative Image

உலகளவில் அடையாளம்

அந்த வகையிலேயே இவர் இயக்கிய “3” படம் ஹிட் ஆனதுடன், அதில் இவர் எழுதிய பாடலான “ஒய் திஸ் கொலவெறி” பாடல் உலகளவில் இவரை அடையாளப்படுத்தி உள்ளது. இவர், பாலிவுட், ஹாலிவுட் போன்றவற்றிலும் நடிகனாக நிரூபித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். மேலும், இவர் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம், இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

Dhanush Horoscope | ஹாலிவுட் வரைக்கும் போன தனுஷின் வருங்காலம் என்ன சொல்லுது தெரியுமா?Representative Image

அண்ணன் தான் காரணம்

1984 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் நாள் சென்னையில் இயக்குனர் கஸ்தூரி ராஜா, ராஜேஸ்வரி தம்பதியருக்கு பிறந்த இவருக்கு இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் உள்ளனர். இவர் தனது மேல்நிலைப்பள்ளியை முடித்த பின்பு, சினிமாவில் இணைய இவருடைய அண்ணன் செல்வராகவன் வற்புறுத்தியதால் இவர் தனது படிப்பை நிறுத்திக் கொண்டு சினிமாவுக்குச் சென்றார். அதன் படியே, செல்வராகவன் எழுதி, இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் வெற்றி அடைந்த பிறகு, இருவரும் இணைந்து காதல் கொண்டேன் திரைப்படத்தை எடுத்தனர். இந்தப் படமும் இவர்களுக்கு வெற்றியைத் தந்தது. எனவே, தனுஷ் சினிமா துறையில் நுழைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இவருடைய அண்ணன் செல்வராகவன் அவர்கள் தான்.

Dhanush Horoscope | ஹாலிவுட் வரைக்கும் போன தனுஷின் வருங்காலம் என்ன சொல்லுது தெரியுமா?Representative Image

சூப்பர்ஸ்டாரின் மருமகன்

இவர், 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்குநர் ஆவார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் தனுஷ் நடித்துள்ளார். அந்த வரிசையிலே “3” படம் உள்ளது. இப்படி வாழ்க்கை நன்றாக ஓடிக் கொண்டிருக்க, 2022 ஆம் ஆண்டில் தலையில் இடி விழுந்தாற் போல, இவர்கள் இருவரும் பிரிவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. எத்தனையோ சமாதானங்கள் செய்தும் சேராத இவர்கள் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

Dhanush Horoscope | ஹாலிவுட் வரைக்கும் போன தனுஷின் வருங்காலம் என்ன சொல்லுது தெரியுமா?Representative Image

தனுஷ் பெற்ற விருதுகள்

2008 ஆம் ஆண்டு நயன்தாராவுடன் நடித்த யாரடி நீ மோகினி படத்திற்காக சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருதை வென்றார்.

அடுத்து, 2011 ஆம் ஆண்டு, ஆடுகளம் படத்தில் நடித்ததற்கு இவருக்கு சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டது.

பிறகு, 2011 ஆம் ஆண்டு மயக்கம் என்ன படத்திற்கு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தென்னிந்திய சர்வதேச விருதை, ஓட ஓட ஓட ஒன்னும் புரியல என்ற பாடலுக்காக வென்றார்.

அடுத்த ஆண்டே அதாவது 2012 ஆம் ஆண்டு 3 படத்தின் சிறந்த நடிகருக்கான விஜய் விருது வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆடுகளம், அசுரன் படங்களுக்கு தேசிய விருது பெற்றார்.

இவ்வாறு விருதுகளைக் குவித்த இவர், 2022 ஆம் ஆண்டின் இந்திய அளவில் IMDB-ல் அதிகமாகத் தேடப்பட்ட முதல் நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Dhanush Horoscope | ஹாலிவுட் வரைக்கும் போன தனுஷின் வருங்காலம் என்ன சொல்லுது தெரியுமா?Representative Image

தனுஷின் ஜாதகக் கணிப்பு

ஒருவரது திறமையைக் கொண்டு அவர்களின் வாழ்வைக் குறிப்பிட்டாலும், அவர்களது கிரக நிலை, ஜோதிட அமைப்பு என்பதும் அதற்குக் காரணமாக இருக்கிறதல்லவா? அதன் படி, நடிகர் தனுஷ் அவர்களிடம் ஜோதிடத்தைக் காண்போம்.

பிறந்த நாள்: ஜூலை 28, 1983, வியாழக்கிழமை

பிறந்த ராசி: கும்பம்

பிறந்த நட்சத்திரம்: சதயம்

லக்னம்: கன்னி

உதய நட்சத்திரம்: ஹஸ்தா

பிறந்த நேரம்: பிற்பகல் 2.00 PM

Dhanush Horoscope | ஹாலிவுட் வரைக்கும் போன தனுஷின் வருங்காலம் என்ன சொல்லுது தெரியுமா?Representative Image

ஜோதிடத்தின் படி, தனுஷின் இயல்பு குணங்கள்

தனுஷின் ஜாதகத்தின் படி, இவர் மிகவும் கனிவான மனது மற்றும் இரக்க குணம் கொண்டவராக இருப்பார். இவர் நடைமுறையில் வாழ்க்கையைப் புரிந்து அதன் படி வழி நடந்து வருவதாகவும், புத்திசாலித்தனம் மற்றும் தத்துவ குணம் படைத்தவராகவும் இருக்கலாம்.

மேலும் இவர் பயணம் செய்வதையும், புதிய இடங்களை ஆராய்வதையும் விரும்புபவர் ஆவார். இவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார். கடின உழைப்பை மேற்கொண்டு அதில் வெகுமதியையும் பெறுவார்.  இவர், மற்றவர்களை ஈர்க்கும் தோற்றத்தையும், கவர்ச்சிகரமான கண்களைக் கொண்டவராகவும் இருக்கிறார். இவர் எப்போதும் இளமைத் தோற்றத்திலேயே காணப்படுவார்.

இவரது லக்ன அதிபதியின் நிலைப்படி, இவர் பெரும் நிதி வெற்றியைப் பெறுவார் என்றும், பெயரும் புகழும் நிறைந்த வணிக நிறுவனத்தை உருவாக்குவார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இவர் இயற்கையாகவே கலை மற்றும் இசையை விரும்பும் காரணத்தால், அதில் அதிக கவனம் செலுத்துவதாக இருப்பார்.

Dhanush Horoscope | ஹாலிவுட் வரைக்கும் போன தனுஷின் வருங்காலம் என்ன சொல்லுது தெரியுமா?Representative Image

உலகளவில் சாதனை படைப்பவராக

இவர் வயதில் முன்னேறும் பகுதி இவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் ஆரம்ப கால வாழ்க்கையை விட அருமையாக இருக்கப்போவதாகக் கூறப்படுகிறது. இவரது தொழில், வியாபாரம் இவரது மூத்த சகோதரனால் பலன் பெறலாம் என்பதைக் குறிப்பதாக உள்ளது. இவர் பிறந்த நேரம், ராசி, நட்சத்திரம், லக்னம் என இவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைப்படி, இவர் தலைமைத்துவ திறன்களைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இவரது ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அம்சங்கள் இவரது குழந்தைகளுக்கு சாதகமாக இருப்பதைக் குறிக்கிறது.

இந்த 2022 ஆம் ஆண்டில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த இவர் வரவிருக்கும் காலங்களில் உலகளவிலும் மிகப்பெரிய சாதனை படைப்பார் என்றும் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்