Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும்.. 27.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும்.. 27.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 12 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - அனுகூலம்

ரிஷபம் - சுபம்

மிதுனம் - சிக்கல்

கடகம் - வருத்தம்

சிம்மம் - பாராட்டு

கன்னி - லாபம்

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும்.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் | Mesham Nalaya Rasi Palan

சிறப்பான நாள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். எந்த செயலையும் உறுதியுடன் செயலாற்றுவீர்கள். அனைவரிடமும் நட்பாக பழகுவீர்கள். பணியிடத்தில் நன்மதிப்பு கிடைக்கப் பெறுவீர்கள். துணையிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு நீண்ட ஆசைப்பட்ட பொருள் வாங்கக்கூட யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிறரிடம் அனாவசிய தவிர்ப்பது நல்லது. அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும்.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் | Rishabam Nalaya Rasi Palan

அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். இரும்பு சம்பந்தமான தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் நல்ல பலன்களை அடைய கோபத்தை குறைத்துக் கொள்ளவும். நீண்ட நாள் எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். ஆன்மீக சுற்றுலா வாய்ப்புள்ளது. பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும். சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும்.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் | Mithunam Nalaya Rasi Palan 

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும். எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் கோபத்தை காட்ட வேண்டும். பணியிடத்தில் கவனக்குறைவால் தவறுகள் எழ வாய்ப்புள்ளது. பெரிய பிரச்சனையை தவிர்க்க எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். பணவிஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். செலவுகள் தேடி வரும். ஆக மொத்தம் பிரச்சனை மிகுந்த நாள். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும்.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் | Kadagam Nalaya Rasi Palan

எதிர்மறையான எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. இதனால், வருத்தத்தில் இருப்பீர்கள். பணம் அல்லது விலையுயர்ந்த பொருட்களை தொலைப்பதற்கான வாய்ப்புள்ளது. பொது இடங்களில் கவனமாக இருங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் வேலை அதிகமாக இருக்கும். இதனால், தலைவலி மற்றும் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. துணையின் பிடிவாதத்தால் வீண் பிரச்சனைகள் அரங்கேறும். அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட வேண்டாம். வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும்.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் | Simmam Nalaya Rasi Palan

சாதகமான நாள். கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். எல்லா செயலும் சுறுசுறுப்புடனும், தைரியத்துடனும் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் புதிய யுக்தியை கையாண்டு உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சிலருக்கு பரிசுக்கூட கிடைக்க வாய்ப்புள்ளது. பல நாட்களாக இழுத்தடித்த சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும்.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி | Kanni Nalaya Rasi Palan

புதிய முயற்சிகளின் மூலம் அனுகூலமான பலன்களை கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அனைவரிடமும் அன்பாக நடந்துக்கொள்வீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரித்து காணப்படும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆசைப்பட்ட பொருள் வாங்கி மகிழ்வீர்கள். லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [27.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்