Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,917.31
268.69sensex(0.36%)
நிஃப்டி22,409.95
73.55sensex(0.33%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | எந்த செயலிலும் முந்தி நிக்காதீங்க தனுசு ராசியினரே.. 27.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | எந்த செயலிலும் முந்தி நிக்காதீங்க தனுசு ராசியினரே.. 27.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 12 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - கவலை

விருச்சிகம் - இழப்பு

தனுசு - ஆனந்தம்

மகரம் - சிரமம்

கும்பம் - செலவு

மீனம் - உழைப்பு

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [27.12.2022]

Nalaya Rasi Palan | எந்த செயலிலும் முந்தி நிக்காதீங்க தனுசு ராசியினரே.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் | Thulam Nalaya Rasi Palan

பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எந்தச் செயலையும் யோசித்து செய்ய வேண்டும். சகஊழியர்களிடம் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. முக்கியமான வேலைகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பத்தில் உறவினரால் தேவையில்லாத சலசலப்பு ஏற்படும். இதனால், துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆத்திரப்படாமல் அனுசரித்து நடந்துக் கொண்டால் நல்லது. தேவையற்ற செலவுகள் காணப்படும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan | எந்த செயலிலும் முந்தி நிக்காதீங்க தனுசு ராசியினரே.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் | Viruchigam Nalaya Rasi Palan

பயணங்களின் போது பாதகமான விளைவுகளை தடுக்க கவனமாக செல்லுங்கள். சாதகமான நாள் அல்ல. எனவே, பணியிடத்தில் சகஊழியர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்ப்பது உத்தமம். அஜாக்கிரதை காரணமாக சிறிது பணத்தை இழப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அவ்வளவாக இருக்காது. தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய வாய்ப்புள்ளது. சிலருக்கு தாய்மாமன் வழியில் எதிர்பாராத குடும்ப பிரச்சனை வரலாம். இழப்பு!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | எந்த செயலிலும் முந்தி நிக்காதீங்க தனுசு ராசியினரே.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு | Dhanusu Nalaya Rasi Palan

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பொது இடங்களில் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரித்துக் காணப்படும். இதனால், சேமிப்பு உயரும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. தந்தை வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆனந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | எந்த செயலிலும் முந்தி நிக்காதீங்க தனுசு ராசியினரே.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் | Magaram Nalaya Rasi Palan

பிறருடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். நண்பர்களை சந்திப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக பணிகள் காரணமாக பணியில் தாமதம் காணப்படும். இதனால், மேலதிகாரியின் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். சின்ன விஷயத்தை பெரியதாக எடுத்துக் கொள்வதன் காரணமாக உங்க துணையுடன் சண்டை ஏற்படும். பயணத்தின்போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பணத்தை கவனமாகக் கையாள வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். சிரமம்! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | எந்த செயலிலும் முந்தி நிக்காதீங்க தனுசு ராசியினரே.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் | Kumbam Nalaya Rasi Palan

சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். எனவே, எந்த செயலிலும் முந்தி நிற்காதீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் குறித்த பயம் காரணமாக பணியிடத்தில் பதட்டம் காணப்படும். தேவையில்லாத குழப்பங்களை மனதில் இருந்து நீக்குவது நல்லது. மருத்துவ செலவுகள் அதிகரித்து காணப்படும். எனவே, அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | எந்த செயலிலும் முந்தி நிக்காதீங்க தனுசு ராசியினரே.. 27.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் | Meenam Nalaya Rasi Palan

எண்ணத்தில் தெளிவு வேண்டும். கண்டதையும் நினைத்து கொண்டு, முக்கியமான காரியங்களில் கோட்டைவிட்டு விட வேண்டாம். பணியிடத்தில் நற்பெயர் சம்பாதிக்க கடினமான உழைக்க வேண்டியிருக்கும். தாராளமாக தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்