Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இனிமையான பேச்சால் எல்லோரையும் இழுக்கும் அதிர்ஷ்டம் இவருக்கு தான்.... 3.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: இனிமையான பேச்சால் எல்லோரையும் இழுக்கும் அதிர்ஷ்டம் இவருக்கு தான்.... 3.12.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 17 ஆம் நாள் சனிக்கிழமை (3.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- வெற்றி

விருச்சிகம்- லாபம்

தனுசு- அமைதி

மகரம்- பொறுமை

கும்பம்- தேர்ச்சி

மீனம்- ஊக்கம்

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1:  மேஷம்- கன்னி ராசிபலன் (3.12.2022, சனி)

Nalaya Rasi Palan: இனிமையான பேச்சால் எல்லோரையும் இழுக்கும் அதிர்ஷ்டம் இவருக்கு தான்.... 3.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும், கடினமான விஷயத்தை தெளிவான திட்டமிடல் மூலம் வெற்றியாக்குவீர். அலுவலகத்தில் சக பணியாளரின் பாராட்டு கிடைக்கும். பணத்தை சேமிக்க வாய்ப்பு கிடைக்கும்.

வாழ்க்கை துணையுடன் நல்லுறவு உண்டாகும். உங்களின் கலகலப்பான நடத்தை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, குளுமையான உணவைத் தவிர்த்து கொள்வது நல்லது. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இனிமையான பேச்சால் எல்லோரையும் இழுக்கும் அதிர்ஷ்டம் இவருக்கு தான்.... 3.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் அதிர்ஷ்டம் எங்கு இருந்து வருகிறது என்பது தெரியாத நிலை தான். தொழிலில் அதிகமாக மெனக்கெட வேண்டியதாக இருக்கும். பணியில் வெற்றியை பல போராட்டங்கள் கடந்து அடைவீர். பண வரவு உண்டு. 

வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். இரத்த சொந்தத்தின் மூலம் ஆதாயம் உண்டு. நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டியதாக இருக்கும். பாதம் அல்லது முட்டி சார்ந்த தொல்லை உண்டாகும். லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இனிமையான பேச்சால் எல்லோரையும் இழுக்கும் அதிர்ஷ்டம் இவருக்கு தான்.... 3.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று சாந்தமான மனநிலையில் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. தொழிலில் ஏற்படும் சிக்கலை லேசாக எடுத்து கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும். செலவு அதிகரிக்கும். 

குடும்பத்தினருடன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள், அது தேவையற்ற சண்டையைத் தடுக்கும். காதல் வாழ்வில் முக்கிய முடிவு எதுவும் எடுக்க வேண்டும். கல்வியில் கவனம் தேவை. உஷ்ணம் சார்ந்த தொல்லை உடலில் உண்டாகும்.  அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம் 

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இனிமையான பேச்சால் எல்லோரையும் இழுக்கும் அதிர்ஷ்டம் இவருக்கு தான்.... 3.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று நடக்கும் சம்பவம் பொறுமையை சோதிப்பதாக இருக்கும். பணியில் புதிய வாய்ப்பு கிடைக்கும். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது. 

வீட்டில் தனிமையில் நேரத்தை செலவிட நினைப்பீர். உங்களுக்கு நண்பர்கள் மூலம் பிரச்சனை உண்டாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, ஆனால் மனதில் மட்டும் ஒருவித பதட்டம் இருக்கும். பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் 

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan: இனிமையான பேச்சால் எல்லோரையும் இழுக்கும் அதிர்ஷ்டம் இவருக்கு தான்.... 3.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சாமர்த்தியத்தை சோதிக்கும் நாளாக அமையும், பணியிடத்தில் கருத்து வேறுபாடு உருவாகும். குறித்த வேலையை தனியாக முடிக்க வேண்டியதாக இருக்கும். வீணான செலவு தான் அதிகமாக இருக்கும். 

வீட்டில் நேரம் செலுத்த முடியாது. சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர். காதல் வாழ்வில் சண்டையும் நெருக்கமும் இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிய தொல்லை இருக்காது. தேர்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்  

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இனிமையான பேச்சால் எல்லோரையும் இழுக்கும் அதிர்ஷ்டம் இவருக்கு தான்.... 3.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் பலவித எண்ணங்கள் நிம்மதியைக் குலைக்கும். தொழிலில் பதட்டம் உண்டாகும். வேலையை முடிக்க முடியாது. பண வரவு குறையும், செலவு கூடும்.

குடும்பத்தினரின் ஆதரவால் பல் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் தகவல் தொடர்பு குறையும். நண்பர்கள் மூலம் நம்பிக்கை பிறக்கும். மனதில் இருக்கும் பதட்டம் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஊக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்