Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,896.13
-47.55sensex(-0.07%)
நிஃப்டி22,134.85
-13.05sensex(-0.06%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இவருக்கு உருவாகும் யோசனையால் தான் பிரச்சனை... 5.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: இவருக்கு உருவாகும் யோசனையால் தான் பிரச்சனை... 5.12.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் நாள் திங்கட்கிழமை (5.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்-  நன்மை

விருச்சிகம்- சலனம்

தனுசு- அசதி

மகரம்- இன்பம்

கும்பம்- ஆர்வம்

மீனம்- சோர்வு

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1:  மேஷம்- கன்னி ராசிபலன் (5.12.2022, திங்கள் )

Nalaya Rasi Palan: இவருக்கு உருவாகும் யோசனையால் தான் பிரச்சனை... 5.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று மனதில்  உற்சாகம் அதிகமாக இருக்கும், மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் படிப்பர், நல்ல ரிசல்ட் கிடைக்கும். வியாபாரத்தில்  புதிய முயற்சி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். செலவும் அதிகரிக்கும்.

குடும்ப வாழ்க்கையில் அலட்சிய போக்கால் சிறிய கருத்து வேறுபாடு உருவாகும். வெளிப்படையான நடத்தை வீட்டில் இயல்பு நிலையை மீட்டுவிடும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இவருக்கு உருவாகும் யோசனையால் தான் பிரச்சனை... 5.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் தெளிவான மனநிலை மற்றவர்களின் கருத்தால் திக்கற்று நிற்கும். தொழிலில் உங்கள் வேகம் குறையும். வியாபாரத்தில் கவனக் குறைவால் வேலை நீடிக்கும். பணப்புழக்கம் ஓரளவு நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல வேண்டும். காதல் வாழ்வில் வருங்கால சார்ந்த எண்ணம் அதிகமாக இருக்கும். சக மாணவர்களின் உதவி அதிகமாக தேவைப்படும். தூக்கமின்மை போன்ற பிரச்சனை உடலை சோர்வாக மாற்றும். சலனம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம் 

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இவருக்கு உருவாகும் யோசனையால் தான் பிரச்சனை... 5.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று நினைத்த இலக்கை அடைய அயராது உழைப்பீர். தொழிலில் அசைக்க முடியாத நிலை உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகமாகும். பண வரவு உண்டு. செல்வத்தை சேமிக்க முடியும்.

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். மனதிற்கு விருப்பமான பயணம் மேற்கொள்ளுவீர். குளிர்மையான உணவை தவிர்த்து கொள்வது நல்லது.  அசதி! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இவருக்கு உருவாகும் யோசனையால் தான் பிரச்சனை... 5.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்கள் மனம் இன்று ஒருவித தேடலிலே இருக்கும். புதிய ஞானம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைகள் விரைவாக முடியும். ஓய்வு நேரம் அதிகமாக இருப்பதுபோல்  தோன்றும். போதுமான அளவு பணம் கையில் புழங்கும்.  அனைவரிடமும் பாசமாக நடந்து கொள்ளுவீர், உங்கள் மீது நல்ல மதிப்பு கூடும்.  கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும், வெளிப்படையான பேச்சு நல்ல புரிதலை அளிக்கும். உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். இன்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan: இவருக்கு உருவாகும் யோசனையால் தான் பிரச்சனை... 5.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று உங்கள் எண்ணம் செயல் முழுவதும் தொழிலே இருக்கும். குறித்த வேலையை எளிதில் முடிக்கும் வழியை அறிவீர். கல்வியில் முழுமூச்சாக செயல்படும் ஆர்வம் இருக்கும். செலவை திட்டமிட்டு கொள்வது நல்லது. 

வீட்டில் கனிவாக நடந்து கொள்ளுவீர். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். காதல் வாழ்வில் அன்பு கூடும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. உடலுக்கு ஓய்வு தேவைப்படும். ஆர்வம்! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இவருக்கு உருவாகும் யோசனையால் தான் பிரச்சனை... 5.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று மனதில் உருவாகும் எண்ணம் உங்கள் நேரத்தை விரையமாக்கும். அலுவலகத்தில் நிதானமாக இருந்தால் பணியில் பிர்ச்சனை வராது. நிதி நிலை உயரும், ஆனால் சேமிக்க முடியாது. 

உங்களின் வெளிப்படையான பேச்சு உறவினர் மத்தியில் பகைமையை உருவாக்கிவிடும். நண்பர்களுடன் உரையாடும் போது பொறுமையாக இருக்க வேண்டும். உடல்நலத்தில்  பிரச்சனை இல்லை,உடல்நலத்தில் கவனம் தேவை, சோர்வாக இருக்கும். சோர்வு! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்