Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | ரிஷபத்திற்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு.. 07.01.2023 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | ரிஷபத்திற்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு.. 07.01.2023 ராசிபலன்!Representative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 23 ஆம் நாள் சனிக்கிழமை [07 ஜனவரி 2023] நாளுக்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்! 

ராசிபலன்:

மேஷம் - உற்சாகம்

ரிஷபம் - லாபம்

மிதுனம் - நட்பு

கடகம் - உயர்வு

சிம்மம் - போட்டி

கன்னி - எதிர்ப்பு

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

Nalaya Rasi Palan | ரிஷபத்திற்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

பணியிடத்தில் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். உயர் அதிகாரிகளை அனுசரித்து நடந்துக் கொள்ளவும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்காலம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எந்த காரியத்தையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். சுப விரைய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் இருந்த சில சிக்கல்கள் விலகும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | ரிஷபத்திற்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

எந்த காரியத்திலும் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் அஜாக்கிரதை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்துக் கொள்வது நல்லது. கணவன் - மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி திருப்தி நிலவும். உறவினர்கள் வழியில் மதிப்பு மேம்படும். உங்க திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பயணத்தின் போது பணத்தை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளவும். வியாபாரம் எப்பவும் போலவே இருக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | ரிஷபத்திற்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Mithunam]

அனைத்து விஷயத்திலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பீர்கள். சிறப்பான பலன்களை பெற உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுஇடத்தில் கோபப்படுவதை தவிர்க்கவும். சிறந்த வாய்ப்புகள் கைநழுவி போக வாய்ப்புள்ளது; எச்சரிக்கை வேண்டும். ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பணவரவு சுமாராக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | ரிஷபத்திற்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

நினைத்த காரியம் நிறைவேற தடை ஏற்படும். வாகன பயணங்கலில் நிதானம் தேவை. எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பதை நல்லது. பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபார பணியில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். மற்றவர்களை பற்றி குறைக்கூறுவதை தவிர்க்கவும். துணையிடத்தில் சுமுகமான பேச்சுவார்த்தை சில பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். நிதிநிலைமை மோசமாக இருக்கும். தேவையற்ற செலவுகளும் அதிகமாக காணப்படும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | ரிஷபத்திற்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

சிறிய வாய்ப்புகளைக்கூட தவறவிட வேண்டாம். கடன் சம்பந்தமான பிரச்சனைகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் சுபகாரியங்கள் கைகூடும். இதுவரை இழுத்தடித்த பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். மனதை உறுத்திக்கொண்டிருந்த சில கவலைகள் விலகும். தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வீர்கள். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | ரிஷபத்திற்கு அற்புதம்.. ஆனா கன்னி ராசியினருக்கு.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழிலில் தொடர்ந்து முயற்சித்தால் அனுகூலமான பலன்களை பெறலாம். நெருக்கமானவர்களிடம் இருந்த சலசலப்பு விலகும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். இதனால், கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். துணையிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. தனவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்பாலினத்தவரிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்த்துக் கொள்ளவும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [07.01.2023]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்