Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது உத்தமம்.. 07.01.2023 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது உத்தமம்.. 07.01.2023 ராசிபலன்!Representative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 23 ஆம் நாள் சனிக்கிழமை [07 ஜனவரி 2023] நாளுக்கான துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்! 

ராசிபலன்: 

துலாம் - இரக்கம்

விருச்சிகம் - பொறுமை

தனுசு - ஏமாற்றம்

மகரம் - வரவு

கும்பம் - ஜெயம்

மீனம் - உழைப்பு

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [07.01.2023]

Nalaya Rasi Palan | எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது உத்தமம்.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். துடிப்புடன் செயல்பட தேவையற்ற கவலைகளை விட்டொழிக்க வேண்டும். துணை உங்களிடம் கோபமாக நடந்துக்கொள்வார், நீங்க விட்டுக்கொடுத்து போவது நல்லது. சகபணியாளர்களுடன் கனிவான பேச்சு நன்மை அளிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது உத்தமம்.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

எதிர்பார்த்த தனவரவு கைக்கு கிடைக்க காலதாமதாகும். பணியிடத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. துணையுடன் விளையாட்டான பேச்சை தவிர்த்துக்கொள்ளவும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும் போது மற்ற வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்கவும். எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவும். இறைவழிபாட்டின் மூலம் நாளை சிறப்பானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் ஆக்கலாம். பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது உத்தமம்.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

நீண்ட நாட்களாக இழுபறியான சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். எழும் எந்தவிதமான சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல், அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். உங்க துணையிடம் இருந்து ஒரு பரிசு காத்திருக்கிறது. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வியாபாரம் சம்பந்தமான பயணம் அனுகூலப் பலன்களை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். ஏமாற்றம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது உத்தமம்.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

எந்த காரியத்தையும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலன்களை கொடுக்கும். பணியிடத்தில் சக பணியாளர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். உங்கள் திறமைகள் பாராட்டப்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதுவிதமான புத்துணர்ச்சி பிறக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கிய பிரச்சினைகள் ஏதும் காணப்படாது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது உத்தமம்.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

சிறப்பான நாளாக இருக்காது. இருப்பினும், இறைவழிபாட்டின் மூலம் இன்றைய நாளை சமாளிக்க முடியும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணியிடத்தில் தவறுகள் ஏற்படலாம், இதனால் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள். எனவே, எச்சரிக்கையுடன் பணியை மேற்கொள்வது நல்லது. இருப்பினும், நினைத்த சில காரியங்கள் வெற்றியை கொடுக்கும். உங்க தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள். பதட்டம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை தவிர்க்க வேண்டும். ஜெயம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது உத்தமம்.. 07.01.2023 ராசிபலன்!Representative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

அமைதியாக இருக்க வேண்டிய நாள். பணிகளில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். துணையிடம் ஈகோவை தவிர்ப்பது நல்லது. முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் மனக் கவலைகளை தவிர்த்தல் நல்லது. அரசு தொடர்பான பணிகளில் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். சிலர் பொன், பொருள் வாங்கி மகிழ்விர்கள். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்