Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.. 09.01.2023 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை [09 ஜனவரி 2023] நாளுக்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்! 

ராசிபலன்:

மேஷம் - பாராட்டு

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - நலம்

கடகம் - பரிசு

சிம்மம் - சாந்தம்

கன்னி - கீர்த்தி

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 07.30 - 08.30 வரை

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டை பெறுவீர்கள். அம்மா வழி உறவினரால் அனுகூலப் பலன் உண்டு. செலவுகள் அதிகரித்து காணப்படுவதால் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. ஆன்லைன் வர்த்தகங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும். எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சை முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

வெற்றிகரமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு அனுபவமிக்கவர்களிடம் கலந்தோசிப்பது நல்லது. பணியிடத்தில் வேலை குறைந்து காணப்படும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் நினைத்து கொண்டிருந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சிகரமான செய்தி வரும். தொழிலுக்கு எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். ஆன்மீக வழிபாடு மேலும் நல்ல பலன்களை பெற்று தரும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Mithunam]

அனுகூலப் பலன்களை அனுபவிக்க சினத்தை தவிர்க்கவும். பணியிடத்தில் சகஊழியர்களின் உதவி கிட்டும். பெயர் தெரியாத எதிர்பாலினத்தவரால் பிரச்சனை வரலாம். தொழிலில் கூட்டாளிகளுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து நீங்கும். குழந்தைகளால் பெருமை கிட்டும். தந்தை வழியில் ஆதரவு பெருகும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பயணத்தின் போது எச்சரிக்கையாக இருங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

நெருங்கியவர்களிடம் இருந்து மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கும். பணியிடத்தில் உங்க கடின உழைப்பிற்கான பாராட்டு கிடைக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலன்களை கொடுக்கும். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். துணையுடன் இருந்த கருத்து மோதம் விலகி, அன்பு, பாசம் அதிகரிக்கும். இருப்பினும், பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைப்பதோடு, பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணவரவு கைக்கு வரும். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டை பெறுவார்கள். கண் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். எந்த காரியத்திலும் பொறுமை தேவை. சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

தொழில், வியாபாரம் அற்புதமாக இருக்கும். நண்பர்களுடன் வெளியில் சென்று வரவாய்ப்புள்ளது. எதிர்காலம் சார்ந்த எண்ணங்களால் மனதில் குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். பிள்ளைகளிடம் கோபம் காட்டுவதை தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும். வாகனப் பயணத்தின் போது வேகத்தை குறைப்பது நல்லது. கீர்த்தி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [09.01.2023]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்