Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள்.. 09.01.2023 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை [09 ஜனவரி 2023] நாளுக்கான துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்! 

ராசிபலன்: 

துலாம் - உதவி

விருச்சிகம் - போட்டி

தனுசு - ஆர்வம்

மகரம் - பக்தி

கும்பம் - நன்மை

மீனம் - மேன்மை

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 07.30 - 08.30 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [09.01.2023]

Nalaya Rasi Palan | வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்கள் அனைத்தும் சாதகமான பலன்களை கொடுக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எதிர்பாராத உதவி கிடைக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். சிலருக்கு கடிதம் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். பணியிடத்தில் சகபணியாளர்களுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

பிள்ளைகள் உங்க பேச்சை கேட்டு நடப்பார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். சிலர் புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள். சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். இழுபறியாக இருந்த சில விஷயங்கள் சாதகமாக முடியும். இருப்பினும், பணியிடத்தில் சகஊழியர்களிடம் பார்த்து நடந்துக் கொள்ளவும். அதேசமயம், போட்டிப் போட்டி வேலை செய்வீர்கள். ரகசியத்தை பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடம் செயல்படுவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அதேபோல், மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்க முடியும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan | வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடி நீங்கி விறுவிறுப்படையும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். சிலருக்கு நினைத்த காரியம் நிறைவேற சற்று தாமதாகும். குடும்பத்தில் மரியாதை கூடும். திடீர் ஆன்மீக வழிபாடு செய்வீர்கள். பணவரத்து அமோகமாக இருக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

உத்தியோகத்தில் நன்மதிப்பு பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும். பார்ட்னர்ஷிப் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கூடும். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஊழியர்களால் நன்மை ஏற்படும். தனவரவு தாராளமாக இருக்கும். துணையுடன் இருந்த கருத்து மோதல் விலகும். பெயர் தெரியாவதர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள்.. 09.01.2023 ராசிபலன்!Representative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

அரசாங்க ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. வியாபாரம் எப்போதும் போலத்தான் இருக்கும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கியமான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகலாம். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பாமல் நீங்களே செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்