Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சனி பெயர்ச்சி 2023 பலன்கள் | Sani peyarchi 2023

Manoj Krishnamoorthi Updated:
சனி பெயர்ச்சி 2023 பலன்கள் | Sani peyarchi 2023Representative Image.

கர்ம வினையைச் சரியாக கொடுக்கும் தர்ம தேவனான சனி பகவன் ஜனவரி 17 2023  அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்க உள்ளார். 17 ஜனவரி 2023 முதல் 2025 மார்ச் வரை கும்ப ராசியில் சஞ்சரிக்க உள்ளார். பின்னர் மீன ராசியில் பயணிப்பார், இதனால் 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

சனி பெயர்ச்சி 2023 பலன்கள் | Sani peyarchi 2023Representative Image

சனி பெயர்ச்சி 2023

மேஷம் 

எண்ணிய செயல் வெற்றி அளிக்கும், தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். திருமண தடை நீங்கும். திருமண வாழ்க்கை இன்பமாக இருக்கும். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் நல்ல பணப்புழக்கம் உண்டு. 

முழுமையாக அறிய 

ரிஷபம்

10 வீட்டில் குடியேறும் சனி பகவான் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து நல்ல வளர்ச்சி உண்டாகும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் விருத்தி அடையும், கைவைத்த இடமெல்லாம் வெற்றி என்பது போல மாறும்.

முழுமையாக அறிய 

மிதுனம்

இவ்வளவு நாட்களாக  இருந்த கவலைகள் நீங்கும், மனம்தெளிவு ஆகும். இவ்வளவு நாட்களாக நீங்கள் அனுபவித்த துயரமும் துன்பமும் நீங்கி இன்பம் எட்டிப் பார்க்கும் தருணமாக அமையும்.  இனி வருமானம் அதிகரிக்கும்.

முழுமையாக அறிய 

கடகம்

இந்த அட்டம சனி காலம் வாழ்க்கை தேவையான அனுபவத்தை அளிக்கும். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டும், சவாலான தருணங்களை சந்திக்க நேரிடும். திருமண பந்தத்தில் அவசர முடிவு வேண்டாம். 

முழுமையாக அறிய 

சிம்மம்

ஜென்மத்தில் சனி பார்வை இருப்பது ஓரளவு நன்மைகள் மட்டுமே அளிக்கும். முக்கியமாக இந்த காலகட்டத்தில்  தேவையில்லாத சொல்லுக்கு ஆளாவீர். கண்டக சனி காலம் என்பதால் வீட்டில் மனஸ்தாபம் உண்டாகலாம். 

முழுமையாக அறிய 

கன்னி

பிரச்சனைகள் நீங்கினாலும் விரையத்தையும் அளிக்கும், ஆனால் நிச்சயம் வாழ்வில் இருக்கும் சிக்கல்  குறையும் நேரமாக மாறும்.  கடன்களை குறைக்க முடியும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் அதேநேரம் செலவுகள் அதிகமாக இருக்கும். 

முழுமையாக அறிய 

துலாம்

இந்த சனி பெயர்ச்சி அதிர்ஷ்டமாக மாறக்கூடும். செல்வ வரவு நன்றாக இருக்கும், என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு மனதில் பிறக்கும். உத்தியோகத்தில் திறம்பட செயல்படுவீர்.  

முழுமையாக அறிய 

விருச்சிகம்

அர்த்தாஷ்டம சனி இருப்பதால் சில தொந்தரவு வரும், அதை சமாளிக்கும் மனப்பக்குவம் இருக்கும். செய்யும் செயலில் தடைகள் ஏற்பட்டு தான் நிறைவேற்றும். இந்த காலக்கட்டம் மன உறுதியை சோதிக்கும்.

முழுமையாக அறிய 

தனுசு 

இத்தனை நாட்களாக அனுபவித்த துயரங்கள் இன்பமாக மாறும். பணியில் முன்னேற்றம் அளிக்கும். நல்ல திருமண பந்தம் உருவாகும். வருமானம் உயரும், செல்வ வரவு இருக்கும். சேமிக்க முடியும்.  மன அழுத்தம் நீங்கி நிம்மதி பிறக்கும். 

முழுமையாக அறிய 

மகரம்

இதுவரை இருந்த பிரச்சனை கொஞ்சம் குறையும், மனம் தெளிவாக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும், கடன் கொடுக்க வேண்டாம். தொழில் ஓரளவு சுமுகமாக இருக்கும்.

முழுமையாக அறிய 

கும்பம்

இந்த சனி பெயர்ச்சி சவாலான தருணமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி இருக்காது. பணப்பரிவர்த்தனையில் நிதானமாக இருக்க வேண்டும். பயணத்தில் கவனம் தேவை. சில ஆரோக்கிய பிரச்சனை ஏற்படும்.

முழுமையாக அறிய 

மீனம்

செய்யும் காரியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  விரைய செலவு இருக்கும்.   வேலை அழுத்தம் அதிகரித்தாலும் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். பயணம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். 

முழுமையாக அறிய 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்