Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் இந்த ராசியினரின் மதிப்பு உயரும்.. 19.11.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan November 18, 2022 & 14:10 [IST]
Nalaya Rasi Palan: விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் இந்த ராசியினரின் மதிப்பு உயரும்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 3 ஆம் நாள் சனிக்கிழமை (2022 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 வரை
மாலை: 04.45 - 05.45 வரை

ராசிபலன்:

துலாம் -  ஏமாற்றம்

விருச்சிகம் - அனுகூலம்

தனுசு - அலைச்சல்

மகரம் - நஷ்டம்

கும்பம் - பொறுமை

மீனம் - சிறப்பு

Part-1: மேஷம் முதல் கன்னி (நவம்பர்.19.2022 ராசிபலன்)

Nalaya Rasi Palan: விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் இந்த ராசியினரின் மதிப்பு உயரும்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகளால் ஒற்றுமை குறையும். 

எதையும் பேசுவதற்கு முன்பும் செய்வதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து நல்லது. பணியிடத்தில் சில தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் இந்த ராசியினரின் மதிப்பு உயரும்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் காத்திருக்கிறது. மாணவர்களின் படிப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு பொன், பொருள் வாங்கு யோகம் கிட்டும்.

மற்றவர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. பணியிடத்தில் மேலதிகாரிகளின் நற்பெயர் பெறுவீர்கள். பணவரவு அமோகமாக இருக்கிறது. சேமிப்பு உயரும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் இந்த ராசியினரின் மதிப்பு உயரும்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று வியாபாரம் சுமாராக தான் இருக்கும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும்.

சிலவிஷயங்களில் அனுசரித்து போவதன் மூலம் வீண் பிரச்சனைகளை தடுக்கலாம். துணையுடன் கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் இந்த ராசியினரின் மதிப்பு உயரும்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உடன் பிறந்தவர்கள் மூலம் உதவி தேடி வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் இடையூறுகள் தோன்றும். சிலர் மனைவியிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். 

பணியிடத்தில் சக பணியாளர்களுடனான உறவு திருப்திகரமாக இருக்காது. பணவரவும் சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள துணையுடன் அனுசரித்து போவது நல்லது. நஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் இந்த ராசியினரின் மதிப்பு உயரும்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

பணவரவு  சுமாராக தான் இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை மேம்படும். கால், தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு செயல்பட்டால், நல்ல பலன்களை பெறலாம். சில விஷயத்தில் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் இந்த ராசியினரின் மதிப்பு உயரும்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் குடும்பத்திலும், பிற இடத்திலும் உங்களின் மதிப்பு உயரும். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும். 

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலர் வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். எந்த செயலும் இன்று ஒரு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்