Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 19.11.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan November 18, 2022 & 14:05 [IST]
Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 3 ஆம் நாள் சனிக்கிழமை (2022 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

நல்ல நேரம்:

காலை: 10.45 - 11.45 வரை
மாலை: 04.45 - 05.45 வரை

ராசிபலன்:

மேஷம் - அதிர்ஷ்டம்

ரிஷபம் - நிதானம்

மிதுனம் - கவனம்

கடகம் - செலவு

சிம்மம் - பணிச்சுமை

கன்னி - கவலை

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தைரியமும் உண்டாகும் நாள். சிலருக்கு குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடித்து காட்டுவீர்கள். 

முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பணியிடத்தில் திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு அஜாக்கிரதை காரணமாக பண நஷ்டம் ஏற்படலாம்.

நெருங்கிய நண்பர்கள் கூட நம்பிக்கை துரோகம் செய்வார்கள். எச்சரிக்கையோடு இருங்கள். பணியிடத்தில் சோர்வு, சலிப்பு காணப்படும். மனைவியிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது உத்தமம். கண் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து போவதால் அனுகூலப் பலன்களை பெறலாம். 

பணியிடத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். பணப்புழக்கும் குறைந்து காணப்படும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எண்ணெய் உணவுகளை தவிர்ப்பது நல்லது. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். பணவரவும் செலவும் ஒரே மாதிரி இருக்கும் நாள். சிலருக்கு நண்பர்களால் மனநிம்மதி குறைய வாய்ப்புள்ளது. குடும்பத்தில் கோபத்திய குறைத்து பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு உண்டான பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவே உள்ளது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 5
 

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

திறமையாக செயல்பட்டால் நல்ல பலன்களை பெறலாம். இன்று  முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரித்து காணப்படும். சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க நேரிடும்.

வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வீடு தேடி வரும். சுபகாரியங்கள் கைகூடும். பணிச்சுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 19.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சிலர் வண்டி, வாகனம் வாங்குவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நிலவும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் நன்மை நடக்கும். 

இருப்பினும், தன்னம்பிக்கை இன்மை காரணமாக கவலைக்கு ஆளாகுவீர்கள். பணியிடத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்ப பொறுப்புகளை சமாளிக்க சிலர் கடன் வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Part-2: துலாம் முதல் மீனம் (நவம்பர்.19.2022 ராசிபலன்)
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்