Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்றைக்கு சந்தோஷத்திற்கு குறையே இல்லை... 22.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 21, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: இன்றைக்கு சந்தோஷத்திற்கு குறையே இல்லை... 22.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 6 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (22.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- ஆர்வம்

விருச்சிகம்- போட்டி

தனுசு- உயர்வு

மகரம்- பெருமை

கும்பம்- சோர்வு

மீனம்- அன்பு

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 7:30- 8:30 வரை 

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (22.11.2022, செவ்வாய்)

Nalaya Rasi Palan: இன்றைக்கு சந்தோஷத்திற்கு குறையே இல்லை... 22.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் உற்சாகமான மனநிலை இன்று புதிய விஷயத்தை முயல பார்க்கும். வேலையில் ஆர்வமாக செயல்படுவர். பணியிடத்தில் திறம்பட பணியாற்றுவீர். செலவு அதிகமாக செயல்படும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வீட்டில் பெரியவரின் அறிவுரை மகிழ்ச்சியான மனநிலை அளிக்கும். கல்வியில் நல்ல புரிதல் இருக்கும், மாணவர்கள் முழு கவனத்துடன் செயல்படுவர். ஆரோக்கியத்தில் தலைவலி, காய்ச்சல் போன்ற சிறு தொல்லைகள் ஏற்படும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: இன்றைக்கு சந்தோஷத்திற்கு குறையே இல்லை... 22.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் போராட்டமான நாளாக இருக்கும், தொழிலில் பல சங்கடங்களைக் கடக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் நண்பர்களின் உதவியால் வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. 

குடும்ப வாழ்வில் சச்சரவு கொஞ்சம் கொஞ்சமாக தீரும். மனம் விரும்பும் நபருடன் பயணம் செய்வீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சுறுசுறுப்பாக இருப்பீர் விளையாட்டில் ஆர்வம் கூடும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இன்றைக்கு சந்தோஷத்திற்கு குறையே இல்லை... 22.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களின் உயர்ந்த எண்ணத்திற்கு ஏற்ற நற்பலன் புதிய மனிதர் மூலம் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல அதிகாரம் கிடைக்கும், முக்கிய பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். பண வரத்து நன்றாக உள்ளது.

இல்லற வாழ்வில் நிதானம் தேவை, பேச்சின் மூலம் பிரச்சனை வரும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும், புதிய வேலை கிடைக்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இன்றைக்கு சந்தோஷத்திற்கு குறையே இல்லை... 22.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களின் செயலாற்றல் இன்று நல்ல புகழ் அளிக்கும். புதிய மனிதரின் அறிமுகம் கிடைக்கும். அலுவலக வேலையில் பதட்டமான சூழலை நிதானமாக கையாளுவர்.  செலவு அதிகரிக்கும். 

குடும்ப வாழ்வில் சகஜமாக நட்பான அணுகுமுறை விட்டில் மகிழ்ச்சியை அதிகமாக்கும். காதல் வாழ்வில்  நெருக்கம் கூடும், முக்கியமாக முடிவு எடுக்க முடியும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்:  5

Nalaya Rasi Palan: இன்றைக்கு சந்தோஷத்திற்கு குறையே இல்லை... 22.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று இருக்கும் வேலை அழுத்தம் உங்களுக்கு ஆரோக்கியக் கேடு விளைவிக்கும். பணியில் ஓரளவு வளர்ச்சி இருக்கும். கல்வியில் மந்தன்மை நிலவும். நிதி நெருக்கடி இருக்கும்.

குடும்ப வாழ்வில் நிதானம் தேவை. வீட்டில் கோபத்தால் பலவித  மன வருத்தம் உண்டாகும். உணவு பழக்கத்தால் வயிறு சார்ந்த தொந்தரவு உண்டாகும், மருத்துவ செலவு கூடும். சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இன்றைக்கு சந்தோஷத்திற்கு குறையே இல்லை... 22.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் நடத்தை இன்று நல்ல பரிமாற்றம் அளிக்கும், சுற்றத்தாரின் நட்பு கிடைக்கும். அலுவலக வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணப்புழக்கம் உண்டு ஆனால் வரவை விட செலவு கூடும். 

வாழ்க்கை துணையுடன் மனம் திறந்து வெளிப்படையாக இருப்பீர், அன்பு கூடும். நண்பர்கள் மூலம் சந்தோஷம் அதிகமாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு, மனம் தெளிவாக இருக்கும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 7


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்