Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : குழப்பங்கள் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.... 23.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : குழப்பங்கள் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.... 23.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை 7 ஆம் நாள் புதன்கிழமை (23.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:15- 10:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை 

ராசிபலன் 

துலாம்- இன்பம்

விருச்சிகம்- நன்மை

தனுசு- பெருமை

மகரம்-  நிம்மதி

கும்பம்- வெற்றி

மீனம்- நிறைவு

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (23.11.2022, புதன்)

Nalaya Rasi Palan : குழப்பங்கள் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.... 23.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்றாலும் மனதில் மகிழ்ச்சி குறையாது. அலுவலகத்தில் புத்துணர்ச்சியாக பணியாற்றுவீர். சக பணியாளரின் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். 

குடும்பத்தினர் உடன் வெளியே செல்லுவீர். சிலருக்கு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்வில் அன்பு அதிகரிக்கும், முக்கியமான ஆலோசனை இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : குழப்பங்கள் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.... 23.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இன்று புதிய மாற்றம் இருக்கும், தொழிலில் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர். பணியிடத்தில் வழக்கத்தை விட வேகமாக செயல்படுவீர். நிதி நிலையில் கவனம் தேவை, பணம் கையில் நிற்காது. 

வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக உரையாடுவீர், வெளிப்படையான பேச்சு இருக்கும். குடும்பத்தில் புரிதல் அதிகமாகும். உறவினர் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மூட்டு வலி போன்ற உடல் தசை வலி உண்டாகும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : குழப்பங்கள் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.... 23.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் முக்கியத்துவம் அதிகமாகும், தொழிலில் அசுர வளர்ச்சி உண்டு. சக பணியாளர் மூலம் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர், பாராட்டு கிடைக்கும். பண வரவு.

வீட்டில் அன்பாக நடந்து கொள்ளுவீர். பூர்வீக வழியில் ஆதாயம் உண்டு, சிலருக்கு குடும்ப சொத்து கிடைக்கும். மனமும் உடலும் சிறப்பாக செயல்படும், ஆரோக்கியமாக செயல்படுவீர். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : குழப்பங்கள் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.... 23.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கவலை இல்லாமல் செல்லும், தொழிலில் எந்த இடையூறும் இருக்காது.  வியாபாரத்தில் புதிய முயற்சிகள் இருக்காது, வழக்கமான திட்டத்தில் செயல்படுவீர். பணத்தை சேமிக்க முடியும், ஆனால் ஆடம்பர செலவும் இருக்கும். 

குடும்பத்தில் உணர்ச்சிவசத்தால் சில ஊடல் பிறக்கும்.  வாழ்க்கை துணையுடன் கருத்தை ஏற்று கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்:  4

Nalaya Rasi Palan : குழப்பங்கள் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.... 23.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களின் பல நாள் முயற்சிக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். அலுவலகத்தில் பொறுமையாக செயல்பட்டால் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சில சூடான விவாதங்கள் இருக்கும், இறுதியில் சாதகமான பலன் கிடைக்கும். நிதி நிலையில் தீவிர திட்டமிடல் வேண்டும். 

குடும்ப வாழ்வில் நேரம் ஒதுக்க முடியாது, அதிக நேரம் இலட்சியத்தை நோக்கியே இருக்கும். நண்பர்களின் ஆலோசனை இருக்கும். தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : குழப்பங்கள் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.... 23.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் ஆறாத வடுவாக இருந்த காரியம் இன்று சரியாகும். தொழிலில் இருக்கும் பிரச்சனை சரி செய்ய முடியும். தொழில் மாற்றம் உண்டாகும். போதுமான அளவு பணப்புழக்கம் கிடைக்காது நிதி நெருக்கடி உண்டாகும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். கணவன் மனைவி உறவு நிம்மதியாக நகரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, இரத்த அழுத்தம் பிரச்சனை உண்டாகும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்