Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சுப காரியம் கை கூடி வரும் ராசிகாரர்கள் இவர்கள் தான்...இன்று மகிழ்ச்சியான நாளாகும்!

Priyanka Hochumin November 17, 2022 & 17:30 [IST]
சுப காரியம் கை கூடி வரும் ராசிகாரர்கள் இவர்கள் தான்...இன்று மகிழ்ச்சியான நாளாகும்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 2 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (18.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி தெரிந்துகொள்வோம். இந்தப் பதிவில், மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை 

கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன்

மேஷம்- ஆதரவு

ரிஷபம்- சினம்

மிதுனம்- வெற்றி

கடகம்-  சிக்கல்

சிம்மம்- நன்மை

கன்னி- விருத்தி

நல்ல நேரம்

காலை: 9:15 – 10:15 வரை

சுப காரியம் கை கூடி வரும் ராசிகாரர்கள் இவர்கள் தான்...இன்று மகிழ்ச்சியான நாளாகும்!Representative Image

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்களின் குடும்பத்தினர் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும், இருப்பினும் கவனம் அதிகம் தேவை. தன வரவில் இழுத்துக் கொண்டிருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். பணியில் ஏற்படும் சிக்கல்களை புரிந்து கொண்டு சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்.  ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சுப காரியம் கை கூடி வரும் ராசிகாரர்கள் இவர்கள் தான்...இன்று மகிழ்ச்சியான நாளாகும்!Representative Image

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

நீங்கள் எதிர்பார்க்காத உறவினர்களிடம் இருந்து உதவி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனையில் சிந்தித்து செயல் பட வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் இருக்கணும். வேலை மாற்றம் போன்ற சிந்தனைகள் ஏற்படலாம். மொத்தத்தில் எது செய்வதாலும் தீர யோசித்து செய்ய வேண்டும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

சுப காரியம் கை கூடி வரும் ராசிகாரர்கள் இவர்கள் தான்...இன்று மகிழ்ச்சியான நாளாகும்!Representative Image

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இதுவரை உங்கள் வெற்றிக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்பத்திற்கு இருக்கும் தேவையை தெரிந்து கொண்டு நிறைவேற்றி வைப்பீர்கள். இத்தனை நாளாக இழுத்துக் கொண்டிருந்த வரவு உங்களை வந்து சேரும். எழுத்தாளர்களின் கற்பனைத் திறன் அதிகரித்து சிறப்பாக செயல் படுவீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

சுப காரியம் கை கூடி வரும் ராசிகாரர்கள் இவர்கள் தான்...இன்று மகிழ்ச்சியான நாளாகும்!Representative Image

கடகம் (Cancer 2022 Horoscope)

தீராத கவலைகள் மனதில் இருந்தால் நிச்சயம் நீங்கும். படிப்பில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் அமையும். சுப காரியங்கள் கை கூடும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உயர் அதிகாரிகள் ஆலோசனையை ஏற்ற செயல்பட்டால் நல்ல மாற்றம் ஏற்படும். சாதகமான உதவி எதிர்பாராத நபரிடம் இருந்து கிடைக்கும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

சுப காரியம் கை கூடி வரும் ராசிகாரர்கள் இவர்கள் தான்...இன்று மகிழ்ச்சியான நாளாகும்!Representative Image

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்களின் புதிய முயற்சிகளில் எதிர்பாராத முடிவு கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து நடக்க வேண்டும். பணியில் வேலை ஆட்களின் ஒத்துழைப்பு மேம்பட்டு, நல்ல வளர்ச்சி கிடைக்கும். மனதில் ஏற்படும் குழப்பம் பெரியவர்களின் ஆலோசனையால் குறையும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

சுப காரியம் கை கூடி வரும் ராசிகாரர்கள் இவர்கள் தான்...இன்று மகிழ்ச்சியான நாளாகும்!Representative Image

கன்னி (Virgo 2022 Horoscope)

பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு நீங்கும். உடன் பிறந்தவர்களுடன் சொந்தங்களுடன் அனுசரித்து நடக்கவும். பாத்திரம் சார்ந்த பணியில் லாபம் அதிகரிக்கும். விருத்தி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீளம்

அதிர்ஷ்ட எண்: 8

Part 2: துலாம் முதல் மீனம் ராசிக்கான இன்றைய ராசிப்பலனை பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்