Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : பொறுமையாக இருந்தால் இன்று நல்ல நாள்.... 24.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : பொறுமையாக இருந்தால் இன்று நல்ல நாள்.... 24.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 8 ஆம் நாள் வியாழன்கிழமை (24.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- முயற்சி

விருச்சிகம்- வீரம்

தனுசு- நிறைவு

மகரம்- வருத்தம்

கும்பம்- சாந்தம்

மீனம்- வெற்றி

நல்ல நேரம்

காலை:  10:45- 11:45 வரை

மாலை: -

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (24.11.2022, வியாழன்)

Nalaya Rasi Palan : பொறுமையாக இருந்தால் இன்று நல்ல நாள்.... 24.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பார்த்த நிலையை அடைய மீண்டும் மீண்டும் முயலும் நிலை இருக்கும். தொழிலில் சலிப்பு உண்டாகும். மனதில் நம்பிக்கை குறையும். நிதி நிலையில் திட்டமிடல் மிகமிக அவசியம். 

வீட்டில் கோபப்படுவீர், குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்யக் கடினமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, திடீர் மருத்துவ செலவு உண்டாகும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : பொறுமையாக இருந்தால் இன்று நல்ல நாள்.... 24.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்களின் மனதில் துணிச்சல் அதிகமாக இருக்கும். புதுமையான முயற்சி செய்வதில் ஆர்வம் அதிகமாகும். பணி நிமித்தமான பலரின் சந்திப்பு கிடைக்கும். சிறப்பான நிதி நிலை உண்டு. 

குடும்ப வாழ்க்கை திருப்தி இருக்கும். வீட்டில் உள்ளவர்களின் அக்கறை இன்பம் அளிக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். ஆரோக்கியத்தில் நிதானம் தேவை. வீரம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : பொறுமையாக இருந்தால் இன்று நல்ல நாள்.... 24.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அனுகூலமான நாளாகும், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில் நல்ல லாபம் அளிக்கும். வேலை அழுத்தம் ஓய்வு நேரத்தைக் குறைக்கும். குறைந்த அளவு வரவு இருந்தாலும் சேமிக்க முடியும். 

வீட்டில் நேரம் ஒதுக்க முடியாது, சிலர் குடும்பத்தில் இருந்து தொலைதூர பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். உடல்நலத்தில் அமைதியின்மையால் தொந்தரவு இருக்கும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : பொறுமையாக இருந்தால் இன்று நல்ல நாள்.... 24.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று கல்வி, தொழில், செல்வ நிலை என அனைத்தும் நன்றாக இருந்தும், மனம் கிடைக்காத ஒன்றை நினைத்து வருத்தம் கொள்ளும். பணியில் திறமைக்கு ஏற்ற வெகுமதி உண்டு. 

குடும்பத்தினர் உடன் கருத்து மோதல் உண்டாகும், அமைதி காப்பது நல்லது. குடும்ப செலவு அதிகரிக்கும், புதிய பொருள் வாங்கும் நிலை உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, வயிறு சார்ந்த தொல்லை உண்டாகும். வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5 

Nalaya Rasi Palan : பொறுமையாக இருந்தால் இன்று நல்ல நாள்.... 24.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களின் வேகமான செயலாற்றல் இன்று பணியை எளிமையாக்கும். உங்கள் தொழில் ஸ்தானம் ஓரளவு வளர்ச்சி கொள்ளும். பணியை முடிக்க உதவி கிடைக்கும். பணப்புழக்கம் உண்டு. 

குடும்பத்தில் நல்லுறவு இருக்கும். வீட்டில் முக்கியமான உரையாடல் ஏற்படும். காதல் வாழ்வு திருமணமாக மாறும். உடல்நலம் நன்றாக உள்ளது. சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : பொறுமையாக இருந்தால் இன்று நல்ல நாள்.... 24.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இத்தனை நாட்களாக மனதிலிருந்த தொல்லை உங்களுக்கு அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆலோசனையால் சரியாகும். தொழில் மாற்றம் ஏற்படலாம். பண விரையம் உண்டாகும். 

வீட்டில் அகந்தையான நடத்தை சண்டையாகும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உடலில் கால் வலி மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனை மிகப்பெரிய தொந்தரவு அளிக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்