Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Rishabam : செவ்வாயின் வக்கிரம் ரிஷபத்து என்னதான் நடக்கும்..?

Manoj Krishnamoorthi Updated:
December Month Tamil Rasi Palan 2022 Rishabam : செவ்வாயின் வக்கிரம் ரிஷபத்து என்னதான் நடக்கும்..?Representative Image.

ரிஷப ராசிக்காரரே டிசம்பர் மாதம் ஜென்மத்தில் செவ்வாய் வக்கிரமாக உள்ளது. மேலும் 12 இல் இராகு , 6 இல் கேது, 8 இல் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, 9 இல்  சனி மற்றும் 11 இல் குரு  அமைந்துள்ளது. மாதத்தின் பாதி நாள் சூரியன் 7 இல் இருக்கும் பிற்பகுதியில் 8 இல் இருக்கும்.  இவ்வாறு சஞ்சாரம் கொண்டுள்ள கிரக நிலையால் ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத ராசிபலன் 2022-  ரிஷபம் (December Month Tamil Rasi Palan 2022 Rishabam)

December Month Tamil Rasi Palan 2022 Rishabam : செவ்வாயின் வக்கிரம் ரிஷபத்து என்னதான் நடக்கும்..?Representative Image

ரிஷபம்

பொது பலன்: 

வழக்கமான வாழ்வில் திடீர் மாற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சி பாதையில் செல்லும். ஆன்மீக எண்ணம் கூடும். நிதானமாக இருந்தால் பிரச்சனையில் மாட்டாமல் இருக்கலாம். பணப்புழக்கம் இருக்கும்.  

குடும்ப  வாழ்க்கை:

புதனின் பார்வை குடும்ப ஸ்தானத்தை பார்ப்பது குடும்பத்தில் இட மாற்றம் அளிக்கும். காதல் வாழ்வில் வாக்குவாதம் விரிசல் உருவாக்கும். 8 இல் சூரியன் இருப்பதால் திருமண பந்தம் உண்டாவதில் தாமதம் உண்டாகும். 11 இல் இருக்கும் குரு குழந்தை பாக்கியம் அளிக்கும். 

தொழில்: 

தொழில் திருப்திகரமாக இருக்கும். வேலைகள் சுமுகமாக செல்லும் தடைகள் கடந்து வளர்ச்சி பாதையில் செல்லும். சந்திரன் உச்சமாக இருப்பதால் அவசரமாக செயல்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும். கல்வி நிலையை பொறுத்தவரை பலவித குழப்பம் இருக்கும், நிதானமாக செயல்பட வேண்டும். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது. 

உடல்நலம்: 

8 இல் சூரியன் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு பழக்கத்தால் உடல்நலக் கோளாறு ஏற்படும்.

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 22, 23, 24 

 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்