Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Kadagam : அட்டம சனியின் ஆரம்பத்தால் டிசம்பரில் கடகத்துக்கு ஆபத்தா..?

Manoj Krishnamoorthi Updated:
December Month Tamil Rasi Palan 2022 Kadagam : அட்டம சனியின் ஆரம்பத்தால் டிசம்பரில் கடகத்துக்கு ஆபத்தா..?Representative Image.

கடக ராசிக்காரரே 2022 டிசம்பர் 2 அன்று புதன் மற்றும்  டிசம்பர் 5 அன்று சுக்கிர பெயர்ச்சி நிகழவுள்ளது. மேலும் 4 இல் கேது, 6 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை, 7இல் சனி மற்றும் 9 இல் குரு, 10 இல் இராகு, 11 இல் செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் 2022 டிசம்பர் மாதம் என்ன நிலை உண்டாகும் என்பதை அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

டிசம்பர் மாத ராசிபலன் 2022- கடகம் (December Month Tamil Rasi Palan 2022 Kadagam)

December Month Tamil Rasi Palan 2022 Kadagam : அட்டம சனியின் ஆரம்பத்தால் டிசம்பரில் கடகத்துக்கு ஆபத்தா..?Representative Image

கடகம்

பொது பலன்: 

தொழிலில் வழக்கமான நிலை தான் இருக்கும். தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தால் இந்த மாதம் அமைதியாக செல்லும். செலவை சமாளிக்கும் அளவு பணம் கையில் இருக்கும். 

குடும்ப  வாழ்க்கை:

கணவன் மனைவி உறவில் சண்டைகள் வந்துவந்து மறையும், கருத்து வேறுபாடு இருக்கும்.  காதல் வாழ்வில் விடவும் முடியாத குழப்பமான நிலை தான் இருக்கும். திருமண முயற்சி செய்யலாம்.

தொழில்: 

செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் பணியிடத்தில் சில மனக்கசப்புகளை அளிக்கும். வேலை அழுத்தம் இருக்கும் ஆனால் குருவின் சாதகமான பார்வை தொழில் சுமுகமாக எடுத்து செல்லும். நிதி நிலையில் பெரிய நெருக்கடி இருக்காது. கல்வி நிலையில் சக மாணவர்கள் மூலம் சிறிய இடையூறு உண்டாகும். 

உடல்நலம்: 

உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இருக்காது. அவ்வப்போது சில சிறிய உபாதைகள் உண்டாகி மறையும். ஆனால் தெளிவான மனநிலை மட்டும் இருக்காது, ஒருவித குழப்பத்துடனே இருப்பீர். 

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 1, 27, 28, 29

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்