Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : மனம் எதிர்பார்த்த நிம்மதி இருக்கும்.. ஆனால் ? 27.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : மனம் எதிர்பார்த்த நிம்மதி இருக்கும்..  ஆனால் ? 27.11.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 11 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (27.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- மேன்மை

ரிஷபம்- நலம்

மிதுனம்- சினம்

கடகம்- வரவு

சிம்மம்- இரக்கம்

கன்னி- நட்பு

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 3:15- 4:15 வரை 

Nalaya Rasi Palan : மனம் எதிர்பார்த்த நிம்மதி இருக்கும்..  ஆனால் ? 27.11.2022 ராசிபலன்! Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம்  இருக்கும்,  பணியின்போது ஏற்படும் தவறுகளை சரி செய்ய உதவி கிடைக்கும். செலவைக் குறைக்க பல புதிய யோசனைகள் அரங்கேறும். 

வாழ்க்கை துணையுடன் சலிப்பு ஏற்படும், சிறிய வாக்குவாதம் தோன்றும். உடலில் கால் வலி போன்ற பிரச்சனை இருக்கும், மருத்துவர் ஆலோசனை இருக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : மனம் எதிர்பார்த்த நிம்மதி இருக்கும்..  ஆனால் ? 27.11.2022 ராசிபலன்! Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் நிதானமான நடத்தை கடந்த சில நாட்களாக நடந்த பிரச்சனையை சரி செய்ய வழி தேடும்.  பண வரவு உண்டு, நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். 

திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது, உங்கள் நகைச்சுவையான பேச்சு  அன்யோன்யத்தைக் கூட்டும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நலம்!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : மனம் எதிர்பார்த்த நிம்மதி இருக்கும்..  ஆனால் ? 27.11.2022 ராசிபலன்! Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனம் ஒருநிலையில் இருக்காது, எதிர்காலத்திற்கான திட்டம் மனதில் குழப்பத்தை விதைக்கும். இறை பிரார்த்தனை நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும், செலவை சமாளிக்கும் நிதி நிலை உண்டு. 

குடும்பத்தில் உங்கள் நடத்தை மற்றவருக்கு வருத்தம் அளிக்கும், முன்கோபம் உறவில் விரிசலை உருவாக்கும். உடல் சோர்வாக இருக்கும், ஓய்வு எடுப்பது ஆரோக்கியத்துக்கு நன்மையாகும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : மனம் எதிர்பார்த்த நிம்மதி இருக்கும்..  ஆனால் ? 27.11.2022 ராசிபலன்! Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் ஏற்படும் நம்பிக்கை புதிய சிந்தனைகளை ஊக்குவிக்கும். வியாபாரத்தில் துணிச்சலாக செயல்படும் பக்குவம் பிறக்கும். மேலும், எதிர்பாராத பண வரவு உண்டு, தேவைகளை சரிக்கட்ட முடியும்.  

குடும்பத்தில்  சகஜமாக இருப்பீர். உங்களின் இனிமையான பேச்சு குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமையும்.  உறவினர் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்கள் மூலம் திடீர் பாராட்டு கிடைக்கும்.  வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்:  6

Nalaya Rasi Palan : மனம் எதிர்பார்த்த நிம்மதி இருக்கும்..  ஆனால் ? 27.11.2022 ராசிபலன்! Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் கனிவான பேச்சு வியாபாரத்தில் அமோகமான வெற்றி கிடைக்கும். சக பணியாளர் உடன் நட்பு உருவாகும். வழக்கத்தை விட அதிகமாக பணம் சேரும், அதிகமான செலவுகள் இருக்கும். 

காதலர்களின் பேச்சு வார்த்தையில் நெருக்கம் கூடும், உறவு பலமாகும். வீட்டில் அன்பாக நடப்பீர். உதவும் குணம் அதிகமாக இருக்கும்.  உடலுக்கு ஓய்வு தேவைப்படும்.  இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : மனம் எதிர்பார்த்த நிம்மதி இருக்கும்..  ஆனால் ? 27.11.2022 ராசிபலன்! Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் அலைச்சல் அதிகமாக இருக்கும். வியாபார ரீதியாக பலரின் சந்திப்பு கிடைக்கும். அனுபவம் வாய்ந்த மனிதர்களின் அறிவுரை பலமாக அமையும். செல்வ நிலையில் சரியான திட்டமிடல் வேண்டும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், வீட்டில் உள்ளவர்களுடன் நட்பான அணுகுமுறை மலரும். சமூகத்தில் இன்று உங்கள் மீது மதிப்பு கூடும். உறவினர் வருகை உண்டு. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 5

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (27.11.2022, ஞாயிறு)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்