Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : சுறுசுறுப்பான நடத்தையால் இவருக்கு நல்ல பணப்புழக்கம் பிறக்கும்.. 29.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : சுறுசுறுப்பான நடத்தையால் இவருக்கு நல்ல பணப்புழக்கம் பிறக்கும்.. 29.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (23.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- பயணம்

ரிஷபம்- நிம்மதி

மிதுனம்- புகழ்

கடகம்- வெற்றி

சிம்மம்- லாபம்

கன்னி- உழைப்பு

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:30- 5:00 வரை 

Nalaya Rasi Palan : சுறுசுறுப்பான நடத்தையால் இவருக்கு நல்ல பணப்புழக்கம் பிறக்கும்.. 29.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

மனதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், இன்று திட்டமிட்ட படி அலுவலக வேலை நடக்கும். வேலை தேடுபவருக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. நிதி நிலை ஓரளவு நன்றாக உள்ளது. 

காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வெளிப்படையான பேச்சினால் புரிதல் உண்டாகும். குடும்பத்தினர் உடன் வெளியூர் செல்லும் தருணம் உண்டாகும். மன உறுதி அதிகமாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. பயணம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : சுறுசுறுப்பான நடத்தையால் இவருக்கு நல்ல பணப்புழக்கம் பிறக்கும்.. 29.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கையில் இருக்கும் பணப்புழக்கம் திருப்தியான நாளாக மாற்றும். வேலையில் கவனம் கூடும், புதிய பணிகள் உருவாகும். வியாபாரத்தில் புதிய ஆர்டர் கிடைக்கும். வளமான செல்வ நிலை உண்டு. 

காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும், ரொமேட்டிக்கான பேச்சு வார்த்தை உண்டு. கணவன் மனைவி உறவில் நட்பு அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : சுறுசுறுப்பான நடத்தையால் இவருக்கு நல்ல பணப்புழக்கம் பிறக்கும்.. 29.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களின் மனம் சற்று அமைதியைத் தேடும், ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் அதிக நேரம் செலவிட வேண்டியதாக இருக்கும். பணம் அதிகமாக செலவாகும். 

குடும்ப பிரச்சனையை தீர்க்க வழி பிறக்கும். வீட்டில் வெளிப்படையாக நடப்பீர், குடும்பத்தினர் உடன் நெருக்கம் அதிகமாகும். நட்பு வட்டாரத்தின் ஆலோசனை நல்ல பலன் அளிக்கும்.  ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், ஓய்வு கிடைக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : சுறுசுறுப்பான நடத்தையால் இவருக்கு நல்ல பணப்புழக்கம் பிறக்கும்.. 29.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று மனதில் பல எதிர்மறை எண்ணங்கள் தோன்றும், தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் நட்பாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். புதிய வேலையை தள்ளி வைப்பது நல்லது. நிதி நிலையில் வரவு குறையும், சேமிப்பு அடிபடாது. 

குடும்ப வாழ்க்கை சிந்தித்து பேசினால் பிரச்சனை இல்லை. உங்கள் உணர்ச்சிவசமான நடத்தை வீட்டில் சலசலப்பை உருவாக்கும்.  ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை 

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : சுறுசுறுப்பான நடத்தையால் இவருக்கு நல்ல பணப்புழக்கம் பிறக்கும்.. 29.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், திருப்திகரமான பணப்புழக்கம் இருக்கும். நீங்கள் பணியிடத்தில் காட்டும் ஆர்வம் உங்களின் மதிப்பை கூட்டும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு கூடும். 

குடும்பத்தினர் உடன் பொறுமையாக செல்ல வேண்டும். சில வாக்குவாதம் சண்டையாக மாறக்கூடும். காதல் வாழ்வில் தகவல் தொடர்பு கூடும். உடலில் கை, கால் வலி போன்ற பிரச்சனை இருக்கும்.  லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : சுறுசுறுப்பான நடத்தையால் இவருக்கு நல்ல பணப்புழக்கம் பிறக்கும்.. 29.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று பரபரப்பான நாளாக இருக்கும், பணியிடத்தில் அதிக நேரம் செலவிடுவீர். அயராது உழைக்கும் குணம் அதிகமாக இருக்கும். நிதி நிலையில் வரவும் செலவும் சமமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், இல்லற வாழ்வில் கணிசமாகப் பழகும் தன்மை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல மாற்றம் இருக்கும், ஆர்வத்துடன் படிப்பர். ஆரோக்கியத்தில் சளி, காய்ச்சல், தலைவலி போன்ற உடல் கோளாறு பிறக்கும்.  உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (29.11.2022, செவ்வாய்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்