Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று விழிபிதுங்கும் நிலை தான்... 27.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று விழிபிதுங்கும் நிலை தான்... 27.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 11 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (27.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- எதிர்ப்பு

விருச்சிகம்- லாபம்

தனுசு-  சிரமம்

மகரம்- அசதி

கும்பம்- பகழ்

மீனம்- பெருமை

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (27.11.2022, செவ்வாய்)

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று விழிபிதுங்கும் நிலை தான்... 27.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சற்று நிதானமாக இருப்பது நல்லது. உங்களின் வேடிக்கையான பேச்சு மறைமுகமான எதிர்ப்பை உருவாக்கும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் சிறப்பான வளர்ச்சி உண்டு. செல்வம் அதிகமாக செலவாகும். 

விட்டில் உள்ளவரிடம் தகவல் தொடர்பு குறையும். தனிமையாகப் பொழுதைக் கழிக்க மனம் ஏங்கும்.  நண்பர்கள் மூலம் சிறிய ஊடல் பிறக்கும், பொறுமையாக இருக்க வேண்டும்.  ஆரோக்கியம் நன்றாக உள்ளது. எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று விழிபிதுங்கும் நிலை தான்... 27.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று லாபகரமான நாளாக இருக்கும், பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணியிடத்தில் பொறுமையாக இருக்க வேண்டும், மேலதிகாரியுடன் மோதல் ஏற்படலாம்.  பண வரவு உண்டு, செலவும் உண்டு. 

குடும்ப வாழ்க்கையில் அனுசரித்து செல்ல வேண்டும். திருமண முயற்சி கைகூடும். சுற்றத்தாரின் மூலம் ஆதாயம் உண்டு. உடலில் சருமம் சார்ந்த தொல்லைகள் வரும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று விழிபிதுங்கும் நிலை தான்... 27.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களின் அனுசரணையான போக்கு தொழிலில் உண்டாகும் தவறுகளை சரி செய்யும். ஆனாலும் திட்டமிட்டபடி செயல்பட அதிகம் மெனக்கெட வேண்டும். வரவைவிட செலவு அதிகமாகும், செலவை சமாளிக்க நிதி உதவி கிடைக்கும்.

உங்கள் கடுமையான பேச்சு குடும்பத்தில் ஒரு தூரத்தை உருவாக்கும். கல்வியில் ஆர்வம் குறையும். நண்பர்களிடம் கலந்து பேசி சில முடிவுகள் எடுப்பீர். முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனை உண்டாகும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3 

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று விழிபிதுங்கும் நிலை தான்... 27.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்கள் வழக்கமான வேலையை முடிக்க அதிக நேரம் உண்டாகும். அலுவலகத்தில் ஏற்படுத்திய மாற்றம் இன்று நல்ல மதிப்பு அளிக்கும். நிதி நிலை உயரும், பணத்தைத் தக்க வைக்க சரியான நேரமாகும்.

வீட்டில் சகஜமான பேச்சு வார்த்தை இருக்கும். கல்வியில் ஆர்வம் கூடும், ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட வலி உண்டாகும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று விழிபிதுங்கும் நிலை தான்... 27.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் செழிப்பான நாளாக இருக்கும், தொழிலில் உங்கள் மதிப்பு கூடும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். திருப்திகரமான பணப்புழக்கம் உண்டு. 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வெளிப்படையான பேச்சு வீட்டில் ஒருவருக்கு நல்ல உறவை உருவாக்கும். காதல் வாழ்வில் சில விவாதங்கள் இருக்கும். உடல்நலத்தில் திடீர் கோளாறு ஏற்படும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று விழிபிதுங்கும் நிலை தான்... 27.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதியதாக வேலை தேடும் மீன ராசிக்காரருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். 

கணவன் மனைவி உறவு இன்பமாக இருக்கும், உங்களின் பேச்சு குடும்பத்தினரை மகிழ்ச்சியடைய செய்யும். காதல் வாழ்வில் நெருக்கம் அதிகமாகும். குடும்பத்தினரின் ஆசை நிறைவேற்ற முடியும். நண்பர்களுக்கு உதவி செய்வீர். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. பெருமை!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்