Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Viruchigam : விருச்சிக ராசிக்கு டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்... சாதகமா....? 

Manoj Krishnamoorthi Updated:
December Month Tamil Rasi Palan 2022 Viruchigam : விருச்சிக ராசிக்கு டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்... சாதகமா....? Representative Image.

விருச்சிக ராசிக்காரரே 2022 டிசம்பரில் உங்களுக்கு ஜென்மத்தில் சூரியன் அமர்ந்திருக்கிறார். மேலும் ராசியில் இருக்கும் புதன் மற்றும் சுக்கிரன், டிசம்பர் 2 அன்று புதனும் டிசம்பர் 5 ஆம் தேதியன்று சுக்கிரனும் 2 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி செய்கிறது. அத்துடன்  3 இல் சனி மற்றும் 5 இல் குரு, 6 இல் இராகு, 7 இல் செவ்வாய், 12 இல் கேது, இருப்பது என்ன மாதிரியான பலன்  அளிக்கும் என்பதை அறிய வேண்டுமா..! இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

டிசம்பர் மாத ராசிபலன் 2022- விருச்சிகம் (December Month Tamil Rasi Palan 2022 Viruchigam )

December Month Tamil Rasi Palan 2022 Viruchigam : விருச்சிக ராசிக்கு டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்... சாதகமா....? Representative Image

விருச்சிகம்

பொது பலன்:

உங்களுக்கு சூரியன் ஜென்மத்தில் இருப்பதால் இனிமையான மாதமாக அமையும்.  தொழில் சார்ந்த சிந்தனைகள் மட்டுமே ஓங்கி இருக்கும். வக்கிரமாக இருக்கும் செவ்வாய் அதிக கோபம் அளிக்கும். 

குடும்ப  வாழ்க்கை:

குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது, ஆனால் ராசிநாதன் செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் எல்லாம் இருந்தும் வெறுமை உணர செய்யும். திடீர் திருமணம் உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியும். குடும்பத்தினரை ஆனந்தமாக வைக்க அயராது பாடுபடுவீர். ஆன்மீக ஸ்தலம் செல்ல வாய்ப்பு உருவாகும். 

தொழில்: 

5 இல் குரு இருந்து 11 ஆம் வீட்டை பார்ப்பதால்  தொழில் ஸ்தானத்தில் பிரச்சனை இருக்காது. ஆனால் சுமுகமான பணப்புழக்கம் இருக்கும். செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் தொழிலில் ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் வேலையை செய்தால் பிரச்சனை வராது. 

புதிய வேலை மாற்றம் உண்டு. கல்வியில் திட்டமிட்டபடி செயல்பட முடியும், உயர்கல்வி சார்ந்த தீர்க்கமான முடிவை எடுக்க முடியும். பொருளாதாரம் ஓரளவு நன்றாக உள்ளது.

உடல்நலம்:

வக்கிரமான செவ்வாய் மனதளவில் வருத்தம் அளிக்கும்.  மனநிலையில் பதட்டம் அதிகமாக இருக்கும் அமைதியாக இருக்க தியானத்தில் ஈடுபட வேண்டும், ஆனால் ஆரோக்கியத்தில் பாதிப்பு இருக்காது. 

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 9, 10

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்