Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Dhanusu : தனுசு ராசிக்கு கஷ்டங்கள் தீர்ந்து நிம்மதி எட்டி பார்க்கும் நேரமா...!

Manoj Krishnamoorthi Updated:
December Month Tamil Rasi Palan 2022 Dhanusu : தனுசு ராசிக்கு கஷ்டங்கள் தீர்ந்து நிம்மதி எட்டி பார்க்கும் நேரமா...!Representative Image.

டிசம்பர் 2022 இல்   தனுசு ராசிக்கு ராசியின் அதிபதி குரு வக்கிர நிவர்த்தியாகினார்.  வக்கிர நிவர்த்தியான குரு சுகஸ்தானத்தில் உள்ளது. மேலும் 2 இல் சனி மற்றும்  5 இல் இராகு, 6 இல் செவ்வாய், 11 இல் கேது, சஞ்சாரம் கொள்கிறது. அத்துடன் 12 இல் இருக்கும் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று புதன் மற்றும் டிசம்பர் 5 ஆம் தேதி அன்று  ஜென்மத்தில் பெயர்ச்சி செய்கிறது. பின்னர் சூரியன் டிசம்பர் 16 அன்று தனுசு ராசிக்கு வருவார் இதனால் தனுசு ராசிக்கு என்ன நடக்கும் என்பதை அறியலாம்.

கார்த்திகை மாத ராசிபலன் 2022- தனுசு (December Month Tamil Rasi Palan 2022 Dhanusu)

December Month Tamil Rasi Palan 2022 Dhanusu : தனுசு ராசிக்கு கஷ்டங்கள் தீர்ந்து நிம்மதி எட்டி பார்க்கும் நேரமா...!Representative Image

தனுசு

பொது பலன்:

ஜென்மத்தில் இருக்கும் புதனின் சாதகமான பார்வை ராசிநாதன் குருவின் மீது இருப்பது நன்மை ஆகும். தொழிலில் மிக சிறந்த பலன் உண்டு. மேலும், சூரியன் ஜென்மத்திற்கு வருவது அசாதாரண செயலை எளிதில் முடிக்கும் திறன் அளிக்கும்.  

குடும்ப  வாழ்க்கை:

2 ஆம் வீட்டில் இருக்கும் சனி அடுத்த மாதம் பெயர்ச்சி கொள்வதால் இதுவரை குடும்பத்தில் இருண்ட சிறிய சச்சரவுகள் மறையும். இல்லற வாழ்வில் நிம்மதி இருக்கும். திருமண முயற்சியில் தடைகள் அதிகமாக வரும். காதல் வாழ்க்கை  விட்டுக்கொடுத்து போகும் அனுசரணை இருக்கும். 

தொழில்: 

ஜென்மத்தில் இருக்கும் புதன் மற்றும் 4 ஆம் வீட்டில் இருக்கும் குரு சந்திப்பது நல்ல பலமாக அமையும்.  புதனின் சாதகமான பார்வை தொழிலை சுமுகமாக வைக்கும். பணியை மாற்ற நினைப்பவர்கள் முயற்சி செய்யலாம்.  கல்வி நிலையில் அடுத்து படிக்க வேண்டியதை தெளிவாக திட்டமிடுவீர். போதுமான அளவு பணப்புழக்கம் கையில் இருக்கும்.  

உடல்நலம்:

உடல்நலத்தில் பெரிய பாதிப்பு இருக்காது. மனமும் உடலும் புத்துணர்ச்சியாக இலட்சியத்தை அடைய முயற்சி செய்யும். 

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 11, 12, 13

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்