Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : சந்தோஷத்திற்கு மேல் சந்தோஷம் தான்.... 7.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 06, 2022 & 13:35 [IST]
Nalaya Rasi Palan : சந்தோஷத்திற்கு மேல் சந்தோஷம் தான்.... 7.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் நாள் திங்கட்கிழமை (7.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- விருத்தி

விருச்சிகம்- கவனம்

தனுசு- ஆக்கம்

மகரம்- பயணம்

கும்பம்- பாசம்

மீனம்-  உயர்வு

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (7.11.2022,  திங்கள்)

Nalaya Rasi Palan : சந்தோஷத்திற்கு மேல் சந்தோஷம் தான்.... 7.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் ஏதோ இழந்ததுபோல மனதில் கவலை தென்படும். பணியில் நாட்டம் இருக்காது, வியாபாரம் மந்தமாகும். கல்வியில் ஆர்வம் குறையும், சக மாணவர்களின் தூண்டுதல் மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.  நிதி நிலையில் செலவு ஓங்கும்.

குடும்பத்தில் அதிக நேரம் செலவிட விரும்புவீர்.  காதல் வாழ்வில் அக்கறை அதிகமாகும். புதிய ஞானம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. விருத்தி!

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : சந்தோஷத்திற்கு மேல் சந்தோஷம் தான்.... 7.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று செய்யும் செயலில் வழக்கத்தை விட அதிக நிதனமாக செயல்படுவீர். தொழிலில் புதிய முயற்சியைத் தயங்காமல் எடுப்பீர், சில முக்கியமான ஆவணங்களில் கையெழுத்து போட வேண்டியதாக இருக்கும். பண விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது. 

குடும்பத்தில் நேரம் செலவிட முடியாது. மாணவர்களுக்கு கல்வி சார்ந்த சந்தேகம் தீர்வு காணும்.  நண்பர்களுடன் இருக்க நினைப்பீர். உடல்நலத்தில் வயிறு சார்ந்த தொல்லை உண்டாகும், முறையான உணவு பழக்கம் தேவை. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : சந்தோஷத்திற்கு மேல் சந்தோஷம் தான்.... 7.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் புத்துணர்ச்சியாக இருப்பீர்.  புதிய செயலில் ஆர்வம் தோன்றும். வெகுதூர பயணம் பற்றி சிந்தனை தோன்றும். வியாபாரத்தில் புதிய திட்டத்தின் மூலம் நல்ல விளைவு கிடைக்கும். பண வரவு உண்டு.

குடும்பத்தில் நிம்மதி இருப்பீர். காதல் வாழ்வில் இன்பமான உரையாடல் இருக்கும்.  மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சுறுசுறுப்பாக இருக்கும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: மெருன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : சந்தோஷத்திற்கு மேல் சந்தோஷம் தான்.... 7.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று லட்சியத்தின் மேல் வரும் பயம் கடுமையாக உழைக்கச் செய்யும். அலுவலகத்தில் மும்மரமாக வேளை செய்வீர். சக பணியாளர் உதவி தேவைப்படும். வரவும் செலவும் சமமாக இருக்கும். 

வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். திடீர் பயணம் உண்டாகும், சிலர் ஆன்மீக ஸ்தலம் செல்ல நினைப்பர். காதல் வாழ்க்கை திருமண பந்தமாக மாறும் சூழ்நிலை வரும். உடல் சோர்வாக காணப்படும், ஓய்வு தேவைப்படும். பயணம்!

அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்

அதிர்ஷ்ட எண்:  8

Nalaya Rasi Palan : சந்தோஷத்திற்கு மேல் சந்தோஷம் தான்.... 7.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அனைவரிடமும் பாசமாக நடந்து கொள்ளுவீர், மனம் திருப்தியாக இருக்கும். பணியில் இருந்து சிறிய ஓய்வு எதிர்பார்ப்பீர். பண விரையம் அதிகமாக இருக்கும், நிதி சார்ந்த திட்டமிடல் வேண்டும்.

குடும்பத்தினர் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகும்.  நண்பர்களிடம் சகஜமாக பழகுவீர், புதிய யோசனை ஓய்வு நேரத்தில் கிடைக்கும். எதிர்பாராத விருந்தினர் வருகை இருக்கும். மாலை நேரத்தில் உடலில் சிறுசிறு வலி உண்டாகும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : சந்தோஷத்திற்கு மேல் சந்தோஷம் தான்.... 7.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை வீடு தேடி வரும்.  நல்ல வழிகாட்டல் கிடைக்கும், அதனால் தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வேலையை ஆர்வமாக செய்வீர். நல்ல நிதி நிலை இருக்கும்.

குடும்பத்தினர் உடன் வெளிப்படையாக இருப்பீர். காதலர்களுள் நல்ல புரிதல் உண்டாகும். தெளிவான மனநிலை உடல்நலத்தை சுறுசுறுப்பாக வைக்கும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்