Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : மற்றவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் இந்த ராசிக்காரருக்கு இப்படியொரு நிலையா... 7.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 06, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan : மற்றவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் இந்த ராசிக்காரருக்கு இப்படியொரு நிலையா... 7.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் நாள் திங்கட்கிழமை (7.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- சிக்கல்

ரிஷபம்- ஆதரவு

மிதுனம்-  லாபம்

கடகம்-  செலவு

சிம்மம்- ஆதாயம்

கன்னி- சுகம்

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasi Palan : மற்றவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் இந்த ராசிக்காரருக்கு இப்படியொரு நிலையா... 7.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பார்த்த செல்வம் வரும், ஆனால் சேமிக்க முடியாது. வேலையில் சிறிய சிக்கல் பெரிய தலைவலியாக இருக்கும்.  வியாபாரத்தில் புதிய ஆர்டர் வருவதில் தாமதம் உண்டாகும். மாணவர்க்ளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். 

குடும்ப வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும், வெளிப்படையான பேச்சு உறவில் மதிக்கப்படும். நண்பர்களுடன் உரையாட நேரம் ஒதுக்க முடியும். உடல்நலத்தில் பெரியளவு தொந்தரவு இருக்காது, உணவு பழக்கத்தால் செரிமான பிரச்சனை உருவாகும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : மற்றவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் இந்த ராசிக்காரருக்கு இப்படியொரு நிலையா... 7.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் உருவாகும் எதிர்ப்புகளை சமாளிக்க சக பணியாளர்கள் உதவியாக இருப்பர்.  இலக்கை ஒற்றுமையாக முடிப்பீர். வியாபாரத்தில் புதிய மனிதர் மூலம் நல்ல வளர்ச்சி உண்டு. பணப்புழக்கம் நன்றாக இருக்கும். 

வீட்டில் சகஜமாக இருப்பீர், இல்லற வாழ்வில் நட்பான நடத்தை இருக்கும். நண்பர்களுடன் அதிக நேர செலவிட முடியும். உடலில் கை கால் வலி ஏற்படும், ஓய்வு தேவைப்படும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : மற்றவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் இந்த ராசிக்காரருக்கு இப்படியொரு நிலையா... 7.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், எதிர்பாராத நேரத்தில் பண வரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னோடி கிடைப்பார். செல்வத்தை பெரிய இடத்தில் முதலீடு செய்வது பற்ரி யோசிப்பீர். 

காதல் வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருக்கும். மனதிற்கு விருப்பமானவர்களுடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நரம்பு சார்ந்த தொல்லை ஏற்படும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : மற்றவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் இந்த ராசிக்காரருக்கு இப்படியொரு நிலையா... 7.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்கள் செல்வாக்கு அதிகமாகும் ஆனால் செல்வ நிலையில் பெரிய செலவு உருவாகும். அலுவலகத்தில் புதிய வேலைகள் அதிகமாக எழும், பணியை முடிக்க சில திட்டங்களை வகுப்பீர். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது ஆராய்ந்து கொள்வது நன்மை அளிக்கும். 

குடும்ப வாழ்வில் நகைச்சுவையான பேச்சால் அனைவரையும் சந்தோஷப்படுத்துவீர். காதல் வாழ்வில் தகவல் தொடர்பு குறையும். நண்பர்களுடன் வெளியூர் செல்லுவீர். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : மற்றவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் இந்த ராசிக்காரருக்கு இப்படியொரு நிலையா... 7.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும், ஆனால் கிடைக்கும் செய்தி உங்களை ஆச்சரியமாக்காது. கல்வி ஸ்தானம் முன்னேற்றம் கொள்ளும், கடுமையான முயற்சி தேவைப்படும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும், அனைவருடனும் சகஜமாக பழகுவீர். நண்பர்கள் மூலம் தொழிலில் நன்மைகள் கிடைக்கும். உடலில் உஷ்ணம் சார்ந்த பிரச்சனை வரும், உணவு பழக்கத்தில் அக்கறை வேண்டும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : மற்றவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் இந்த ராசிக்காரருக்கு இப்படியொரு நிலையா... 7.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் தேவையில்லாத குழப்பங்கள் வரும். வழக்கமான வேலையில் கூட தவறு நிகழும். நிதானம் தடுமாறும், பணியிடத்தில் பதட்டமாக இருப்பீர். நிதி நிலையில் பெரிய பிரச்சனை இல்லை. 

குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்கும். வீட்டில் தனிமையில் இருக்க மனம் ஏங்கும். வீட்டில் பேச்சின் மூலம் சண்டை வரலாம், அமைதி காப்பது நன்மை. சுற்றத்தாரின் உதவி மனதிற்கு சுகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிய தொந்தரவு இருக்காது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (7.11.2022, திங்கள்) 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்