Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 73,059.25
-340.53sensex(-0.46%)
நிஃப்டி22,184.25
-88.25sensex(-0.40%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : ஜென்மத்தில் இராகு மேஷ ராசிக்கு என்ன தான் நடக்குமோ..?

Manoj Krishnamoorthi November 08, 2022 & 18:30 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : ஜென்மத்தில் இராகு மேஷ ராசிக்கு என்ன தான் நடக்குமோ..?Representative Image.

மேஷ ராசிக்காரரே உங்களுக்கு ஜென்மத்தில் இராகு உள்ளது. மேலும் 2 இல் செவ்வாய் வக்கிரம், 7 இல் கேது, 8 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை, மகரத்தில் சனி மற்றும் 12 இல் குரு  அமைந்துள்ளது. இத்தகைய கிரக நிலை மாற்றத்தால் கார்த்திகை மாதம் என்ன பலன் கிடைக்கும் என அறிய இந்த பதிவை பின்தொடரவும்.  

கார்த்திகை மாத ராசிபலன் 2022- மேஷம் (Karthigai Matha Rasi Palan 2022 In Tamil) 

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : ஜென்மத்தில் இராகு மேஷ ராசிக்கு என்ன தான் நடக்குமோ..?Representative Image

மேஷம்

பொது பலன்:  

ராசி நாதன் செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் தடைப்பட்ட முயற்சிகளை முடிக்க முடியும். ஆனால் வெற்றி பெற அதிகமாக போராட வேண்டியதாக இருக்கும். நிதி நிலை ஓரளவு நன்றாக இருக்கும். புதிய மாற்றங்கள் நிகழும்.

குடும்ப  வாழ்க்கை:

வாழ்க்கை துணையின் மூலம் ஆதரவு உண்டு. பேச்சின் மூலம் வீட்டில் மன வருத்தம் ஏற்படலாம், பொறுமையாக இருப்பது நல்லது.  காதல் வாழ்வில் நிதானமாக செயல்பட வேண்டும், தகவல் தொடர்பில் சிக்கல் வரலாம். 

தொழில்: 

மாதத்தின் முற்பகுதியில் இருக்கும் தொழில் தடை பிற்பகுதியில் இலகுவாக குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும், புதிய வேலை கிடைக்கும். தொழில் மாற்றம் உண்டாகும். 

உங்கள் ராசிக்கு 8 ஆம் வீடான விருச்சிகத்தில் சூரிய சுக்கிரன் புதன் சேர்க்கை அமைந்திருப்பதால்  பலவித சிரமங்கள் தொழிலில் ஏற்பட்டு மறையும். செல்வ நிலையில் ஓரளவு வரவு உண்டாகும் ஆனால் சேமிக்க முடியாது. 

உடல்நலம்: 

ஆரோக்கியத்தில் முதுகு மற்றும் நரம்பு சார்ந்த தொல்லைகள் இருக்கும்.  மருத்துவர் ஆலோசனை தேவைப்படும். குடும்பத்தில் குழந்தைகளுக்கும் ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும். 

சந்திராஷ்டமம்:

நவம்பர் 22, 23, 24 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்