Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : கார்த்திகை மாதத்தில் போராட்டங்கள் எல்லாம் வெற்றி தான்...!

Manoj Krishnamoorthi November 09, 2022 & 11:00 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : கார்த்திகை மாதத்தில்  போராட்டங்கள் எல்லாம் வெற்றி தான்...! Representative Image.

கடக ராசிக்காரரே 2022 கார்த்திகை மாதம் 17 ஆம் நாள்  புதன் மற்றும் 19 ஆம் நாள்  சுக்கிர பெயர்ச்சி நிகழவுள்ளது. உங்கள் ராசிக்கு 4 இல் கேது, 5 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை, 7இல் சனி மற்றும் 9 இல் குரு, 10 இல் இராகு, 11 இல் செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் 2022 கார்த்திகை மாதம் என்ன நிலை உண்டாகும் என்பதை அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

கார்த்திகை மாத ராசிபலன் 2022- கடகம் (Karthigai Matha Rasi Palan 2022 In Tamil)

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : கார்த்திகை மாதத்தில்  போராட்டங்கள் எல்லாம் வெற்றி தான்...! Representative Image

கடகம்

பொது பலன்: 

போராட்டமான வாழ்க்கையை நடத்தும் உங்களுக்கு இந்த மாதம் 17 பிறகு நல்ல காலம் தான். பணப் பரிவர்த்தனை நன்றாக இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும், நல்ல அங்கீகாரம் கிடைக்கும். 

குடும்ப  வாழ்க்கை:

வீடு கட்டும் யோகம் உண்டு, பூர்விக வழியில் நன்மைகள் நடக்கும். சுப நிகழ்ச்சி கூடும். கணவன் மனைவி உறவில் இருக்கும் சங்கடங்கள் இருந்துகொண்டே இருக்கும், அமைதியாக காப்பது நல்லது. வீட்டில் ஏற்படும் கருத்து வேறுபாடு மற்றவர்கள் மூலம் பிரச்சனை சரியாகும். காதல் வாழ்க்கை திருமண பந்தமாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

தொழில்: 

தொழில் ஸ்தானத்தில் வேலைகள் மும்மரமாக நடக்கும். வெளிநாடு தொழில் செய்யும் அமைப்பு உள்ளது, பயணம் உண்டு. வியாபாரம் விருத்தியாகும். நிதி நிலையில் நிம்மதி உண்டாகும்.  கல்வி நிலை நன்றாக உள்ளது. அரசாங்கம் சார்ந்த காரியம் நிறைவேறும்.  

உடல்நலம்: 

4 இல் இருக்கும் கேது எலும்பு மற்றும் நரம்பு சார்ந்த தொல்லை அளிக்கும், ஆனால் 10 இல் இராகு இருப்பதால் ஆரோக்கியப் பிரச்சனை குணமாக்கும். 

சந்திராஷ்டமம்:

நவம்பர்  29, 30 & டிசம்பர் 1

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்