Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : கஷ்டத்திலிருந்த மிதுன ராசிக்கு இனி பொற்காலம் தான்....!

Manoj Krishnamoorthi November 09, 2022 & 10:15 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : கஷ்டத்திலிருந்த மிதுன ராசிக்கு இனி பொற்காலம் தான்....!Representative Image.

மிதுன ராசிக்காரரே 12 இல்  வக்கிரமாக  இருக்கும் செவ்வாய் மற்றும் 5 இல் கேது, 6 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை, மகரத்தில் சனி மற்றும் 10 இல் குரு, 11 இல் இராகு இருப்பதால் 2022 கார்த்திகை மாதம் என்ன பலன் அளிக்கும் என்பதை கீழே பார்ப்போம்.  

கார்த்திகை மாத ராசிபலன் 2022- மிதுனம் (Karthigai Matha Rasi Palan 2022 In Tamil)

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : கஷ்டத்திலிருந்த மிதுன ராசிக்கு இனி பொற்காலம் தான்....!Representative Image

மிதுனம்

பொது பலன்:  

இத்தகை நாட்களாக இருந்த நிலையற்ற தன்மை இனி நீங்கும். தொழில் ஸ்தானம் சிறப்பாக செயல்படும், நிலையான அங்கீகாரம் கிடைக்கும். செல்வ நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய விஷயங்களை கற்கும் நிலை உண்டாகும்.  

குடும்ப  வாழ்க்கை:

குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வீட்டில் பெரியவரின் ஆசி கிடைக்கும். வாழ்க்கை துணையின் மூலம் செலவு ஏற்படும். நண்பர்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடு செய்ய முடியும், புதிய நட்பு கிடைக்கும். திருமண பந்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.  

தொழில்: 

குருவின் வக்கிர நிவர்த்தி உங்களுக்கு தொழிலில் வளர்ச்சி அளிக்கும். புதனின் சாதக நிலை வருமானத்தை உயர்த்தும். கல்வியில் இருந்த மந்த நிலை நிச்சியம் மாறும். பணியில் திடீர் மாற்றம் உண்டாகும்.  தொழிலில் புதிய முயற்சி சாதகமாகும். நிதி நிலையில் வரவு அதிகமாக இருக்கும், வரவுக்கு ஏற்ற செலவு ஏற்படலாம்.  

உடல்நலம்: 

வயதான மிதுன ராசிக்காரர்களுக்கு சிறிய உடல் உபாதைகள் வரும். மாதத்தின் பிற்பகுதியில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொலைதூர பயணத்தால் உடல்நலத்தில் கோளாறு உண்டாகலாம், பயணங்களை தவிர்த்து கொள்ளவும்.  

சந்திராஷ்டமம்:

நவம்பர்  27, 28 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்