Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : ரிஷப இனி முன்னேற்றப் பாதை தான்....!

Manoj Krishnamoorthi November 08, 2022 & 19:00 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : ரிஷப இனி முன்னேற்றப் பாதை தான்....!Representative Image.

ரிஷப ராசிக்காரரே உங்களுக்கு ஜென்மத்தில் செவ்வாய் வக்கிரமாக உள்ளது. மேலும் 12 இல் இராகு , 6 இல் கேது, 7 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை, மகரத்தில் சனி மற்றும் 11 இல் குரு  அமைந்துள்ளது.  இவ்வாறு கார்த்திகை மாதம் இருக்கும் கிரக நிலையால் ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் பலன் பற்றி அறிய பின்தொடரவும்.  

கார்த்திகை மாத ராசிபலன் 2022- ரிஷபம் (Karthigai Matha Rasi Palan 2022 In Tamil)

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : ரிஷப இனி முன்னேற்றப் பாதை தான்....!Representative Image

ரிஷபம்

பொது பலன்:  

லாப ஸ்தானத்தில் குரு மற்றும் பாக்கிய ஸ்தானத்தில் சனி  இருப்பதால் மனதில் இருக்கும் கவலை நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். தொழிலில் இருக்கும் தடைகள் நீங்கும், புதிய வேலை கிடைக்கும். பல நாள் ஆசைகள் நிறைவேறும் தருணமாக இருக்கும். 

குடும்ப  வாழ்க்கை:

வீட்டில் தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மூலம் எதிர்பாராத நன்மைகள் உண்டு, குழந்தை பாக்கியம் உண்டு. உங்கள் முக்கியத்துவம் குடும்பத்தில் அதிகரிக்கும். ஆடம்பர செலவு அதிகரிக்கும்.  

தொழில்: 

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் கார்த்திகை 19 ஆம் தினத்திற்கு பின் 7 ஆம் வீட்டிலிருந்து 8 ஆம் வீட்டிற்கு வருகிறார். எனவே முக்கியமான தொழில் முடிவுகளை எடுத்து கொள்வது முதற்பாதியில் எடுத்து கொள்வது நல்லது. 

தொழில் ஸ்தானத்தில் பெரிய வளர்ச்சி இருக்காது, ஆனால் முன்னேற்ற பாதியில் தான் செல்லும். பொறுமையாக மட்டும் இருக்க  வேண்டும். சனியின் பார்வை சாதகமாக இருப்பதால் புதிய வேலை அளிக்கும்.  நிதி நெருக்கடி ஓரளவு குறையும், கடன் தொல்லை உருவாகலாம். கல்வியில் ஆர்வம் கூடும். 

உடல்நலம்: 

ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும், மூட்டு வலி, சளி, அடி வயிறு தொல்லை போன்றவை உருவாகும்.  

சந்திராஷ்டமம்:

நவம்பர்  25, 26, 27 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்