Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022

UDHAYA KUMAR Updated:
டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022Representative Image.

தமிழ் சினிமா இந்த வருடம் தான் கொஞ்சம் தலை நிமிர்ந்து பல நல்ல திரைப்படங்களைக் கொடுத்து லாபகரமானதாக மாறி இருக்கிறது. கொரோனா லாக்டவுன் விளைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட திரைத்துறை மீண்டு இப்போது திரைத்துறையை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன. 

இந்த வருடம் வெளியான படங்களில் நல்ல கதை தேர்வு, சிறந்த நடிப்பின் அடிப்படையில் நடிகர்களின் பட்டியலை இங்கு கொடுத்துள்ளோம். தமிழின் டாப் 10 சிறந்த நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்களா?  வாருங்கள் 

டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022Representative Image

ஆர் ஜே பாலாஜி

 

வீட்ல விஷேசங்க படத்தின் மூலம் இந்த வருடத்தின் சிறந்த நடிகர் பட்டியலில் 10வது இடத்துக்கு வந்துள்ளார் நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் நடிப்பு மற்ற நடிகர்களைப் போல அல்லாமல் தனித்துவமாக இருப்பது தொடங்கி, பெரிய அளவில் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக எதிர்த்த வீட்டு பையன் போல நடிப்பதும் இவர் சிறப்பு. 

வீட்ல விஷேசங்க படத்தின் ஒரிஜினல் ஹிந்தி படத்தில் ஆயுஷ்மான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை ஆர்.ஜே.பாலாஜி மிக வித்தியாசமாக தனது பாணிக்கு செய்திருக்கிறார். அதற்கே ஒரு கைத்தட்டல் கொடுக்க வேண்டும். இதுமட்டுமின்றி அந்த படத்தின் விளம்பரத்துக்காக ஓடி ஆடி நிற்க நேரமின்றி அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை எல்லாமே அவருக்கு டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இடம் கொடுக்க வைத்திருக்கிறது. 

டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022Representative Image

பிரதீப் ரங்கநாதன்

 

சொல்லுங்க மாமா குட்டி, அடிச்சான்பாரு அடிச்சான்பாரு மாமாகுட்டி, ஃபோன வையிடா ****** என்கிற திரும்ப திரும்ப பேசும் வசனங்களை அவர் உச்சரித்ததற்காகவே அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கலாம். இந்த வருடம் வெளியான படங்களிலேயே மிகச் சிறந்த காமெடி படமாக அமைந்தது மட்டுமின்றி, அதில் எந்த அளவுக்கு சமூக கருத்தை சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு இறங்கி சொல்லியிருப்பது பாராட்டதலுக்கு உரியது. 

இளம் வயது நாயகனாக தன் மீது இருந்த நம்பிக்கையை தயாரிப்பாளர்களிடம் கூறி அவர்களை இதற்கு சம்மதிக்க வைத்து படத்தை எடுத்து கொடுத்து வெற்றியையும் பெறச் செய்ததால் இவருக்கு 9வது இடம்

டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022Representative Image

அஜித்

 

முதல் இரு இடங்களில் எதிர்பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஆனால் இது சிறந்த நடிகர்கள் 2022ன் பட்டியல். அதுமட்டுமின்றி இந்த படத்துக்காக அஜித் பெரிய அளவில் சிரத்தை மேற்கொள்ளவில்லை. பெரிய அளவில் எதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. கதைதான் இந்த படத்தின் வெற்றியைத் தீர்மானித்தது. அதுமட்டுமின்றி அஜித்குமாரின் 100 சதவிகித திறனும் இந்த படத்தில் வெளிப்பட்டதாக நாங்கள் கருதவில்லை. அவரின் முழுத்திறமையையும் காட்டி வேற லெவலுக்கு படம் செய்ய முடியும் என்ற காரணத்தினால் அவருக்கு 8வது இடம்.
 

டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022Representative Image

விக்ரம்

 

பொன்னியன் செல்வன் படத்தில் அவர் ஏற்று நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்துக்காக மட்டுமே இந்த இடம். இதுமட்டுமின்றி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கோப்ரா படத்தில் இவரது நடிப்பு பிரமாதம்தான் என்றாலும் முழுப் படமும் திருப்தியைத் தரவில்லை. வழக்கமான அதே நடிப்பையே திரும்ப திரும்ப காண்பிப்பதால் கொஞ்சம் அதிருப்தியாகவே இருக்கிறது. 

டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022Representative Image

விஜய்

 

பீஸ்ட் படத்தில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய். ஆனாலும் படத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யாததன் காரணமாக இவருக்கு இந்த இடம்

டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022Representative Image

விஜய் சேதுபதி

 

விக்ரம் படத்தில் ஏற்படுத்திய ஹைப் ஒரு காரணம் என்றாலும் விஜய் சேதுபதி ஒரு சிறந்த நடிகர் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். அதுமட்டுமின்றி விக்ரம் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. 

டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022Representative Image

சூர்யா

 

ரோலெக்ஸ் எனும் மாயச் சொஎல் தான் விக்ரம் படத்துக்கு அப்படி ஒரு கூட்டத்தை கூட்டி வந்தது என்றே சொல்லலாம். கமல்ஹாசனின் தம்பியாக நட்புக்காக அவர் செய்து கொடுத்த பாத்திரம் அடுத்து அவரது சொந்த தம்பி கார்த்தியின் கைதி படத்தில் திரும்ப வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவின் நடிப்பு துருதுருவென அவர் நடந்துகொள்ளும் விதம் நன்கு பேசப்பட்டது. 

டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022Representative Image

கார்த்தி

 

கார்த்தி மிகவும் வித்தியாசமான கதைத் தேர்வை கொண்டிருக்கிறார். விருமன் படத்தில் கிராமத்து இளைஞராக அசத்தினார், பொன்னியின் செல்வனின் பழங்காலத் தமிழராக வீரனாக நடித்து புகழ் பெற்றார், தற்போது வெளியான சர்தார் படத்தில் பல கெட்டப்களில் தோன்றி ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இந்த அத்தனை படங்களிலும் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. 

டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022Representative Image

தனுஷ்

 

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத ஹிட் கொடுத்து அசரடிப்பவர்தான் தனுஷ். இந்த பட்டியலில் இவருக்கு முதலிடமே கொடுக்கலாம். திருச்சிற்றம்பலம் படத்தில் அவரின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பு மாறன் எனும் படத்தில் நடித்தன் காரணமாக பின்தங்கியிருக்கிறார். அப்போதும்கூட ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி மற்ற இடத்திலிருப்பவர்கள் முன்னேறி இருக்கிறார்களே தவிர, நடிப்பின் அடிப்படையில் கமல்ஹாசனுக்கு இணையான இடத்தை தனுஷுக்கு வழங்கலாம்

டாப் 10 நடிகர்கள் பட்டியல் தமிழ் 2022 | Top 10 actors in tamil 2022Representative Image

கமல்ஹாசன்

நடிப்பின் அசுரன், கலைக் கடவுள் தூக்கி வைத்துக் கொண்ட பிள்ளை, உலக நாயகன் என அனைவராலும் போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள் தன் கலையுலக வரலாற்றிலேயே இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்ததில்லை என அவரே பேசும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது விக்ரம் திரைப்படம். தனது திறமைகள் அனைத்தையும் கொட்டி இந்த படத்தில் அவர் நடிக்க மட்டுமே செய்தார்.  இந்த வருடத்தில் கமல்ஹாசனுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு நடிப்பில் அசத்தியது கார்த்தியும், தனுஷும் மட்டுமே. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்