Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்; தாத்தா, அப்பாவையே மிஞ்சிய தரமான சம்பவம்!

kanimozhi Updated:
நாளை அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்; தாத்தா, அப்பாவையே மிஞ்சிய தரமான சம்பவம்! Representative Image.

2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதம் முறையாக களமிறங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அபாரமாக வெற்றி அடைந்த போதே அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் ஏற்கனவே திமுக மீது வாரிசு அரசியல் முத்திரை விழுந்திருந்ததால், அவசரம் காட்டாத முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதியை அமைச்சர் ஆக்கும் முடிவினை தள்ளிவைத்திருந்தார். மக்களிடையே உதயநிதிக்கு நல்ல வரவேற்பு இருந்த போதும், படிப்படியாக அவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதே திமுகவின் திட்டமாக இருந்தது. 

நாளை அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்; தாத்தா, அப்பாவையே மிஞ்சிய தரமான சம்பவம்! Representative Image

எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்:

அமைச்சராகிறார் உதயநிதி:

தற்போது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல தரப்பில் இருந்தும் கேட்கப்பட்டு வந்த கேள்வியான “உதயநிதி அமைச்சராகிறாரா?” என்பதற்கு ‘ஆம்’ அதிகாரப்பூர்வ பதில் கிடைத்துள்ளது. திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14ம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாளை அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்; தாத்தா, அப்பாவையே மிஞ்சிய தரமான சம்பவம்! Representative Image

நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இது தொடர்பாக ஆளுநரின் செயலர் ஆனந்த ராவ் வி.பாட்டீல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழக முதல்வர் பரிந்துரையின்படி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை, தமிழக அமைச்சரவையில் சேர்க்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் டிச. 14-ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது" என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

நாளை அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்; தாத்தா, அப்பாவையே மிஞ்சிய தரமான சம்பவம்! Representative Image

எந்த துறை ஒதுக்கீடு?

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செய லாக்கத் துறை ஆகியவை ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் சட்டமன்றத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள அறையை சீரமைக்கும் பணியும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சேகர் பாபு, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நாளை அவர்களது ஆசை நிறைவேற உள்ளது. 
 
நாளை அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்; தாத்தா, அப்பாவையே மிஞ்சிய தரமான சம்பவம்! Representative Image

அப்பா, தாத்தாவை மிஞ்சிய உதய்:

இதனிடையே, நாளை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தனது தந்தை மு.க.ஸ்டாலின், தாத்தா கலைஞர் கருணாநிதி ஆகியோரை எல்லாம் முந்திக்கொண்டு அசத்தலான காரியத்தை செய்துள்ளார். ஆம், திமுக தோன்றிய காலத்தில் இருந்தே அக்கட்சியில் படிப்படியாக வளர்ந்து வந்த கலைஞர் கருணாநிதி முதன் முறையாக 1957ம் ஆண்டு எம்.எல்.ஏ. ஆனார். அதன் பின்னர் 10 ஆண்டுகள், அதாவது 1967ம் ஆண்டு தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 

நாளை அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்; தாத்தா, அப்பாவையே மிஞ்சிய தரமான சம்பவம்! Representative Image

இதைவிட ஸ்டாலின் எம்.எல்.ஏ.-வில் இருந்து அமைச்சராக தனது தந்தையிடம் புரோமோஷன் பெற 17 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதாவது 1989ம் ஆண்டு முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினரான மு.க.ஸ்டாலின், 2006ம் ஆண்டு அமைச்சரானார். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற உதயநிதி ஸ்டாலின், 18 மாதங்களில் அமைச்சராக பதவியேற்க உள்ளது சோசியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்