Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

Nandhinipriya Ganeshan October 16, 2022 & 10:00 [IST]
தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. Representative Image.

தீபாவளி வந்துவிட்டாலே நமக்கு முதலீல் நினைவுக்கு வருவது ஸ்வீட்டும், பட்டாசும் தான். அதுவும் ஸ்வீட் என்றாலே அது குலாப் ஜாமூன் தான். இதன் பெயரை சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறும். அந்தளவிற்கு இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. நாவில் வைத்ததுமே கரைந்து போகும் இந்த குலாப் ஜாமுன் செய்முறையில் சின்ன பிழை ஏற்பட்டாலும் இதன் சுவை முற்றிலுமாக மாறி விடும். அதனால், குலாப் ஜாமுன் செய்யும் போது எப்போதும் மிகவும் கவனத்துடன் மாவின் பக்குவம் மாறாமல் பிசைவது மிகவும் முக்கியம். இப்போதெல்லாம் கடைகளிலேயே இன்ஸ்டண்ட் குலாப் ஜாமுன் மிக்ஸ் கிடைக்கிறது, அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது நீங்கள் வீட்டில் தயாரித்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 1 கப்

தண்ணீர் - 11/2 கப்

குங்குமப்பூ - சிறிதளவு

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

பால் - 1 லிட்டர்

பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்

மைதா மாவு - 1/4 கப்

எண்ணெய் - தேவையான அளவு

பாதாம், முந்திரி, பிஸ்தா - தேவையான அளவு

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. Representative Image

செய்முறை:

➤ முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர், 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி, சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து மிதமான தீயில் வைத்து 5-6 நிமிடம் கொதிக்க வையுங்கள். ரொம்ப கொதிக்க வைத்தால் பாகு ஆறியதும் சர்க்கரை திட்டு திட்டாக இருக்கும். எனவே, கம்பி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

➤ இப்போது மற்றொரு அடி கனமான பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் பேன் ஒன்றை அடுப்பில் வைத்து, பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள். 

➤ பால் சுண்டி வரும் வரை பாத்திரத்தின் ஓரத்தில் சேர்ந்து வரும் ஏடுகளை உள்ளே எடுத்து எடுத்து போட்டு, நன்றாக கொதிக்க வையுங்கள், இப்போது பால் நன்றாக திறண்டு பால்கோவா போல் ஆகிவிடும். ரொம்பவும் இறுக்கமாக இல்லாமல் சற்று தளர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

➤ அடுப்பை அனைத்துவிட்டு பால்கோவாவை நன்றாக ஆறவிடவும். பின்னர் அத்துடன் மைதா மாவு, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது உள்ளங்கையில் நெய் தடவிக்கொண்டு அந்த மாவை கையால் நன்றாக பிசைந்து மாவின் மேலே லேசாக நெய் தடவி 2 நிமிடம் வைத்துவிடுங்கள்.

➤ பின்னர், ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் சிம்மில் வைத்துவிட்டு, அந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக வெடிப்பு இல்லாமல் மென்மையாக பிடித்து எண்ணெய்யில் பொன்னிறமாக போட்டு பொறித்து எடுத்து சர்க்கரை பாகில் அப்படியே போட்டுவிடுங்கள்.

➤ சர்க்கரை பாகு ரொம்ப ஆறிவிட்டால், மிதமாக சூடு செய்துக்கொள்ளவும். அப்படி எல்லா மாவையும் உருண்டை பிடித்து பொறித்து எடுத்து கொடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, உருண்டை பிடிக்கும்போது ரொம்ப அழுத்தம் கொடுத்து பிடிக்ககூடாது. மென்மையாக வெடிப்பு இல்லாமல் பிடிக்க வேண்டும். 

➤ இப்போது அதில் பாதாம், பிஸ்தா, முந்திரியை பொடியாக நறுக்கி தூவிவிடுங்கள். உடனே மூடி வைக்கக்கூடாது. காற்று போகுமாறு இடைவெளி விட்டு மூடி வைக்கவும். 2 மணி நேரம் ஊறவைத்த பின்னர் பரிமாறவும். சுவையான பால் குலாப் ஜாமூன் ரெடி.. 

குறிப்பு: ஒருவேளை நீங்கள் இன்ஸ்டண்ட் குலாப் ஜாமுன் மிக்ஸ் வாங்கி உபயோகித்தால், பவுடரை கலக்கும்போது காய்ச்சின பாலை பயன்படுத்துங்கள். பலரும் தண்ணீர் சேர்த்து மாவை பிசைவார்கள் அப்படி செய்தால் குலாப் ஜாமுன் மென்மையாக வராது. எனவே, பாலை ஊற்றி மாவை பிசையுங்கள். 

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்