Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீபாவளி ஸ்பெஷல்! வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

Nandhinipriya Ganeshan October 17, 2022 & 19:00 [IST]
தீபாவளி ஸ்பெஷல்! வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..Representative Image.

தீபாவளி பண்டிகை என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பட்டாசும் பலகாரமும் தான். பல பண்டிகைகள் வருடம் முழுவதும் வந்தாலும் தீபாவளிக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றைய நாள் நேரமாக எழுந்து எண்ணெய் வைத்து நீராடி, புதுத்துணி அணிந்து, வீட்டில் தீபம் ஏற்றியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடுவோம். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக தீபாவளி அவ்வளவு சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இருப்பினும், இந்த வருடம் (அக்டோபர் 24, 2022) மகிழ்ச்சிக்கும் கொண்டாடத்திற்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி, நம்ம கதைக்கு வருவோம். தீபாவளி வந்துவீட்டாலே அனைவரது வீட்டிலும் பல விதமான பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், அனைவருக்கும் பிடித்த உப்பு சீடை எப்படி சுவையாக செய்வது என்று பார்க்கலாம். 

தீபாவளி ஸ்பெஷல்! வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..Representative Image

தேவையானப் பொருட்கள்:

பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்

ஓமம் - 1/2 டீஸ்பூன்

பச்சரிசி - 300 கிராம்

கட்டிப் பெருங்காயம் - சிறுதுண்டு

உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன் (வறுத்து அரைத்தது)

வெள்ளை எள்ளு - 1 டீஸ்பூன் (வறுத்தது)

சிவப்பு மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

தேங்காய் துருவல் - சிறிதளவு

தீபாவளி ஸ்பெஷல்! வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..Representative Image

செய்முறை:

➤ முதலில், பச்சரிசியைக் கழுவி தண்ணீர் வடித்து, நிழலில் காய விடுங்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதை அரைத்து, மாவைச் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். 

➤ பின்னர், கட்டிப் பெருங்காயத்தை பொடித்து சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, அடுப்பில் வாணலியை வைத்து பச்சரிசி மாவை எண்ணெய் எதும் விடாமல் சிவக்க வறுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். 

➤ பின்பு, அதில் மிளகாய் விழுது, வெண்ணெய், ஓமம், உப்பு, எள்ளு, பொட்டுக்கடலை மாவு, தேங்காய் துருவல், உளுத்தம் மாவு, மற்றும் பெருங்காயக் கரைசலையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

➤ அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் ஐந்து ஐந்து உருண்டைகளாக பொரித்து எடுத்தால் ஓமம்-உப்பு சீடை ரெடி.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்