Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

Nandhinipriya Ganeshan October 18, 2022 & 09:00 [IST]
தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..Representative Image.

அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தீபாவளி வந்தாச்சி. தீபாவளி என்றாலே ஸ்வீட் தான் நினைவுக்கு வரும். ஸ்வீட் என்றாதும் முதலில் லட்டு தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த லட்டிலும் மோதிலட்டு தான் அதிகம் விரும்பப்படும் ஸ்வீட். துளி எண்ணெயில்லாமல் சுவையான மோதிலட்டு அல்லது மோத்திசூர் லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.  

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..Representative Image

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 2 கப்

பால் - 2 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

கேசரி பவுடர் - 1 சிட்டிகை

கடலை மாவு - 2 கப்

பால் - 1/2 லிட்டர்

நெய் - 3 கப்

பாதாம், பிஸ்தா - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..Representative Image

செய்முறை:

➤ முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் அளவு சர்க்கரையை போட்டு, அதில் தண்ணீர் 3 கப் ஊற்றி, நன்றாக உருக வைத்துக் கொள்ளவும். பின் அதில் 2 டீஸ்பூன் அளவிற்கு பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

➤ 5 நிமிடம் கழித்து மேலே நுரை போல் வரும். அந்த நேரத்தில் 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து, நிறத்திற்கு கேசரிப் பவுடர் கொஞ்சமாக சேர்த்து, நன்கு கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக சேர்த்தாலே அதிக நிறத்தை தரக்கூடியது கேசரி பவுடர் எனவே, பார்த்து கவனமாக போட வேண்டும். இப்போது பாகு ரெடி.

➤ பூந்தி செய்வதற்கு, மற்றொரு பாத்திரத்தில் 2 கப் கடலை மாவையும், 1/2 லிட்டர் பாலையும் ஊற்றி கட்டி இல்லாமல் மென்மையாக கரைத்துக் கொள்ளவும். பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 - 3 கப் நெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு ஓட்டையாக இருக்கும் கரண்டியை எடுத்து, அதன் ஓட்டையில் நாம் கரைத்து வைத்திருந்த கடலை மாவு கலவையை ஊற்றவும்.

➤ நீங்க ஊற்ற ஊற்ற மாவு துளி துளியாக நெய்யில் விழுந்து, பூந்தி போன்று பொரியும். அதை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதேபோல் மீதமுள்ள மாவையும் பூந்தி பொரித்து எடுத்துக் கொள்ளவும். பூந்தி ரெடி.

➤ இப்போது, பொரித்து வைத்துள்ள பூந்தியை தட்டில் போட்டு, அதன் மேல் வெதுவெதுப்பான சர்க்கரை பாகுவை ஊற்றி பரப்பி விடுங்கள். பின்பு, அதை லட்டு போன்று சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் பாதாம், பிஸ்தாவை வைத்து அலங்கரித்தால், சுவையான மோத்திசூர் லட்டு சுவைக்க தயார். 

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்