Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி  மாதம் 26 ஆம் நாளுக்கான  [09 ஏப்ரல் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 10.30 – 11.30 வரை

மாலை: 01.30 – 02.30 வரை

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

நீங்கள் நினைத்தது போல எல்லாம் நன்றாக அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் நல்ல வளர்ச்சியடையும், லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பில் ஈடுபடுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண் : 9

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியடையும். புது தொழில் ஆரம்பிக்க எண்ணம் வரும். வியாபாரத்தில் மற்ற நாட்களை விட வரவு அதிகமாக இருக்கும். போட்டி சம்மந்தமான நிகழ்வுகளில்  செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் மன கவலையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக  இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பதவி உயர்விற்காக காத்திருந்தால் அதுவும் கை கூடி வரும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  

அதிர்ஷ்ட எண் : 1

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் என்று முன்னோர்கள் கூறுவது போல உங்களுக்கு எல்லாம் நல்லதா நடக்கும். எதிர்காலம் சம்மந்தமாக எடுக்கப்போகும் முடிவுகளை நிதானமாக யோசித்து எடுங்கள். உயர் கல்வி குறித்து பல எண்ணங்கள் வரும். இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் வரலாம். தொழில் ரீதியாக பயணம்  சந்தர்ப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். முதலீடு செய்பவராக இருந்தால் கவனத்துடன் செய்லபட வேண்டும். சொத்து வாங்கும் அம்சம் உள்ளது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண் : 3

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வரும். யாருக்காகவும் உங்களுடைய லட்சியத்தை விட்டுக் கொடுக்காதீர்கள். தொழில் வளர்ச்சி சம்மந்தமான யோசனை வரும், அதற்காக பயணம் செல்லும் வாய்ப்பும் உள்ளது. தண்ணீர் இருக்கும் இடத்திற்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. நல்ல லாபகரமான நாளாக அமையும். தனம்!

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 

அதிர்ஷ்ட எண் : 4

 

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

ஏதேனும் மன உளைச்சலில் இருந்திருப்பார்கள். ஆனால் அதில் இருந்து வெளியே வந்து மகிழ்ச்சியாக இருக்கும் சூழல் ஏற்படும். குடும்பத்தினரால் கவலைகளை மறந்து நிம்மதியாக இருப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மனதில் கவலை இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து மகிழுங்கள். மற்றவர்களைப் பற்றி நினைத்து உங்களின் நேரத்தை வீணடிக்காதீர்கள். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்  

அதிர்ஷ்ட எண் : 7

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உங்கள் நண்பர்களால் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. யாரேனும் உதவி என்று கேட்டு வந்தால் தீர விசாரித்து உதவுங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். ஒன்னும் இல்லாத விஷயத்திற்காக உறவினர்கள் சண்டை போட வாய்ப்புள்ளது. அதற்கெல்லாம் கவனம் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கை விட்டு போகலாம். அதற்கு கவலை படாமல் உங்களின் முயற்சியை எடுத்துக்கொண்டே இருங்கள். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்  

அதிர்ஷ்ட எண் : 3

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

நண்பர்களின் ஆதரவால் பெரிய காரியத்தை செய்து முடிப்பீர்கள். படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். யாரெல்லாம் உங்களை இழிவாக நினைத்தார்களோ அவர்கள் உங்கள் ஆதரவை நாடி வருவார்கள். தொழில் ரரீதியாக நல்ல முன்னேற்றம் அமையும். சொத்து வாங்கும் அம்சம் உள்ளதால் கவனத்துடன் முதலீடு செய்யுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் உடல் நிலையில் கவனம் தேவை.  வீட்டில் பெரியவர்களால் மனக் கவலை ஏற்படலாம். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்  

அதிர்ஷ்ட எண் : 8

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நீங்கள் வந்துவிடும் என்று நினைத்த விஷயங்கள் உங்களை வந்து சேராமல் போகலாம். ஆனால் முயற்சி எடுக்கும் வரை உங்களை ஜெயிக்க யாரும் இல்லை. உங்களுக்கு ஆதரவாக சிலர் உங்களுடன் இருக்கிறார்கள். அதனால் எந்த ஒரு கஷ்டம் வந்தால் துவண்டு போகாமல் போராடிக்கொண்டே இருங்கள். நிச்சயம் ஒரு நாள் நீங்கள் வெற்றிப் பெறுவதை அனைவரும் பார்ப்பார்கள். உங்களுடைய பிள்ளைகளால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் சிக்கல் இருக்கலாம், ஆனால் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டாம். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்  

அதிர்ஷ்ட எண் : 1

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

இதனை நாளாக தொழிலில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வர போகிறது. தொழில் வளர்ச்சியடையும் வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கான உழைப்பை நீங்கள் செலுத்த வேண்டியது அவசியம். உங்களிடம் சிலர் ஆதாயத்திற்காக நட்பு பாராட்டுவார்கள். அவர்களுடன் சற்று கவனமாக இருப்பது உத்தமம். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. அப்படி இருந்தால் குடும்பத்தையும் அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக இருங்கள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்  

அதிர்ஷ்ட எண் : 8

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மற்றவர்களிடம் இரக்கம் காட்டுவது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்கு நம் முதலில் உதவி செய்யும் இடத்தில் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்கள் தங்கள் வேலையை உங்களிடம் நகர்த்தி விட முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். படிப்பில் உங்களுக்கு போட்டியாக இருப்பவர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். தொழில் ரீதியாக உங்களுக்கு எதிரியாக இருப்பவர்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்  

அதிர்ஷ்ட எண் : 6

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இல்லை என்ற வருத்தம் இருக்கலாம். குடும்பத்தில் அனைவரும் உங்களை உதாசினம் படுத்தலாம். ஆனால் உங்கள் துணையின் ஆதரவுடன் அவற்றை கடந்து வருவீர்கள். உங்கள் துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். இடமாற்றத்திற்கான அம்சம் உள்ளது. பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பியுங்கள். வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்  

அதிர்ஷ்ட எண் : 4

இத்தனை நாளா நடக்கலையேன்னு நினைச்சது கட்டாயம் நடக்கும்...| 09 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

கடினமான வேலையையும் உங்களுடைய விவேகத்தால் முடித்து விடுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு சீக்கிரம் வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களை நினைத்து பெற்றோர்கள் பெருமிதம் கொள்வார்கள். படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். உங்களுடைய வேலையில் கவனமாக இருப்பீர்கள். இடமாற்றத்திற்கான அம்சம் உள்ளது. மனதில் ஏதோ யோசனையுடன் இருப்பீர்கள். அவை எல்லாம் கூடிய விரைவில் சரியாகி விடும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்  

அதிர்ஷ்ட எண் : 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்