Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 01 ஆம் நாளுக்கான [14 ஏப்ரல் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். வருமானம் அதிகமாகும் வாய்ப்பு உருவாகும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க உதவி கிடைக்கும். நெருங்கிய நண்பர்களின் உதவியுடன், தொழிலில் இரட்டிப்பு லாபம் ஈட்டுவீர்கள். பிள்ளைகளால் பாராட்டு கிட்டும். ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். இருப்பினும் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். கூர்மையான பொருட்களை கையாலும் கவனம் தேவை. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

திறமையை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும். குடும்ப உறுப்பினர்களிடையே உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இழுபறியாக இருந்த தனவரவு வந்து சேரும். நினைத்தது நிறைவேறும் நாள். சிலரின் மூலம் வாழ்க்கை பாடம் கற்றுக் கொள்வீர்கள். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பூர்வீக சொத்து விவகாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு உருவாகும். வியாபாரம் எப்பவும் போல இருக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொலைதூர செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும். பயிர், மனை இவற்றால் லாபம் ஏற்படும். புதிய நண்பர்களால் நன்மை உண்டு. சிலருக்கு வாழ்க்கையில் புதுப்புது மாற்றங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு மிகுந்து ஒருவருக்கொருவர் அனுசரித்து பேரின்பம் அடைவர். எதிர்பாராத உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நண்பர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். பணிபுரியும் இடத்தில் சகபணியார்களுக்கு உதவி செய்வீர்கள். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுத்தடித்த காரியம் திடீரென்று நடந்து முடியும். மனதளவில் இருந்த குழப்பம் விலகும் நாள். தாயுடன் இருந்த மனக்கசப்பு விலகும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

தனவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பெற்றோரிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். சொந்த செய்வோருக்கு அனுகூலமான நாள். குடும்பத்தில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எந்த செயலையும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்வீர்கள். நண்பர்களுடன் இருந்து மனக்கசப்பு விலகி, அன்பு அதிகரிக்கும். சிலருக்கு மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். கனவுகள் நிறைவேறும் நாள். சிலர் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால், குடும்பத்தில் சந்தோசம் பெருகும். திய வாடிக்கையாளர்களின் வருகையால் சுமாராகவே இருந்த வியாபாரம் சூடு பிடிக்கும். தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

ஒரு சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாக பலனை தரும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை மேம்படும். சிலர் மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். சுபகாரியங்கள் சம்பந்தமான முயற்சிகள் ஈடேறும். பூர்வீக சொத்து விவகாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் பேசும்போது மட்டும் எச்சரிக்கையோடு இருக்கவும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். பெயர் தெரியாதவர்களால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த நிலையிலும் பொறுமையை மட்டும் இழந்துவிட கூடாது. இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். சகோதரர்களால் அலைச்சல் உண்டு. பணவரவு சிறப்பாக இருக்காது. குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். உங்க பொறுமையை சோதிக்கும் நாள் என்றே சொல்லலாம். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். துணையின் விருப்பப்படி நடந்துக்கொள்வதன் மூலம் நல்லுறவு மேம்படும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதி தரும். இழுபறியான தனவரவு கைக்கு கிடைக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

அஜாக்கிரதையால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். பணஉதவி கிடைப்பதில் காலத்தாமதம் ஏற்படும். இதனால் ஏமாற்றம் அடைவீர்கள். சினம் கொள்வதை தவிர்க்கவும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் தடை வரும். பொறுமை முக்கியம். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். சிலருக்கு தொழிலில் எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்படும். சுமாரான நாளாக தான் இருக்கும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த தமிழ் புத்தாண்டு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? | Tomorrow Rasi Palan in Tamil | 14.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பெயர் தெரியாவதர்களிடம் அனாவசியை பேச்சை தவிர்ப்பது உத்தமம். தொழிலில் லாபத்தை பெற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும் நாள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். சிறு தூர பயணம் செய்ய வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பு. பணியிடத்தில் புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்புண்டு. தாய்வழி பந்தங்களிடமிருந்து சுபச்செய்தி வந்து சேரும். இருப்பினும், விலங்குகளால் ஆபத்து உண்டு. உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்