Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 30 ஆம் நாளுக்கான [13 ஏப்ரல் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

சில காரியங்களில் தடைகளை கண்டு அதன்பின் வெற்றி காண்பீர்கள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பயணங்களின் போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் சுமாராகவே இருந்த வியாபாரம் சூடு பிடிக்கும். காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். எந்த காரியத்தையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எல்லா பணிகளையும் குறித்த நேரத்தில் செய்து முடித்து, மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். காதலர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் உருவாகும். எதிர்காலம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எலியும் பூனையுமாய் இருந்த கணவன் - மனைவிக்குள் நல்ல புரிதல்கள் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.  இருப்பினும், கூட்டுத்தொழில் செய்வோர் கூட்டாளியை அனுசரித்து செல்வது நல்லது. அறிமுகம் இல்லாத எதிர்பாலினத்தவரிடம் பேசுவதை தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். மனதளவில் இருந்த குழப்பம் விலகும் நாள். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். இழுபறியாக இருந்த தனவரவு வந்து சேரும். சுப விரைய செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய பொருள் வாங்கும் யோகம் உண்டு. மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். அமைதியும் கட்டுபாடும் தேவைப்படும் நாள். பணியிடத்தில் பணிசுமை அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்க தடை, தாமதம் உண்டாகும். பெயர் தெரியாவதர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். நல்ல விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். சிலருக்கு நீண்ட ஆசைப்பட்ட பொருள் வாங்கக்கூட யோகம் உண்டு. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு, அரவணைப்பும் அதிகரிக்கும் நாள். பணவரவு தாராளமாகவே உள்ளது. எதிர்பாரா உறவினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போதும் நிதானம் தேவை. மனைவி வழி பந்தங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளுடன் சின்ன சலசலப்பு ஏற்படும். வார்த்தையில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவரின் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும், இதனால் மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் அவ்வளவாக இருக்காது. துணையுடன் பேசுவதை தவிர்ப்பது நல்லது. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். பணவரவு உண்டு. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து விஷயத்திலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பீர்கள். ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

இதுவரை இழுத்தடித்த பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். கடன் சம்பந்தமான பிரச்சனைகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பணியில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். கைமாறாக வாங்கிய பணம் திரும்ப கிடைக்கும். புதிய முயற்சியில் ஈடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். வம்புக்கு வருபவரிடம் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

தன்நம்பிக்கை அதிகரிக்கும் நாள். கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். எல்லா செயலும் சுறுசுறுப்புடனும், தைரியத்துடனும் ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

ஏமாற்றம் மிகுந்த நாள் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

விருப்பத்தை அடைவதில் சில தடைகளை சந்திக்கலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை முக்கியம். சுபகாரியம் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். தந்தைவழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணியில் எச்சரிக்கையும் நிதானமும் வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்