Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023

Gowthami Subramani Updated:
இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 25 ஆம் நாளுக்கான [08 ஏப்ரல் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.  

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham 

அசாதாரண செயல்களையும் சாதாரணமாக முடிக்கக் கூடிய திறன் உருவாகும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ஒற்றுமை காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை சற்று தள்ளி வைப்பது நல்லது. மன உளைச்சல் உண்டாகலாம். எனவே, பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்களைக் கையாள்வது சிறப்பைத் தரும். உத்தியோகத்தில் ஊழியர்களுடன் சலசலப்பு ஏற்படலாம். எனவே, பொறுமையோடு செயல்பட்டு காரியத்தில் வெற்றி காணலாம். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 9 

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam 

இன்றைய நன்னாளில் வருமானம் சிறப்பாக உள்ளது. நண்பர்களின் மூலம் பண வரவு பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். இதுவரை இருந்த கடன் தொந்தரவுகள் விலகி விடும். கடன் கொடுப்பது, கடன் வாங்குவது முதலியவற்றைத் தவிப்பது நல்லது. வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.  அதிக மதிப்பு கொண்ட பொருள்களை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும். உடல் நலம் சீராக உள்ளது. லாபம்!  

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம் 

அதிர்ஷ்ட எண்: 4

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam 

பொறுமையோடு இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். எதிலும் வேகமாக முடிவெடுக்க வேண்டாம். எந்த காரியத்திலும் இறங்கும் முன் அதிக நேரம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணியாட்களை சற்று கவனமுடன் கையாள்வது சிறந்தது. உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள். எல்லா விஷயத்தையும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். உடல் நலத்தைப் பொறுத்த வரை அதிக கவனம் தேவை. சிந்தனை! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5 

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உங்களது நீண்ட கால கனவுகள் நிறைவேறும். எதிர்பால் நண்பர்களிடம் இருந்து ஆதாயம் கிடைக்கும். உறவினர்களிடம் அன்புடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவியிடையே  இருந்த பிரச்சனைகள் விலகி அன்பு பெருகும். பொறுமையுடன் நிதானத்துடனும் செயல்பட்டு காரியத்தில் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் நட்பு உண்டாகும். இது ஆதாயத்தைத் தரும். கால் வலி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது. அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்:2

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நீண்ட நாள்களாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உடன் பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் உண்டு. சிறு தூர பயணங்கள் மாற்றத்தைக் கொடுக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெல்லும் திறன் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். விற்பனை சார்ந்த துறைகளில் உங்களது திறமைகள் வெளிப்படும். அரசு வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். கஷ்டமான செயல்களையும் எளிதாக செய்து முடிக்கும் திறன் உண்டு. இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்:  1

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

இன்று புதிய நண்பர்கள் கிடைப்பர். உங்களின் பேச்சுத் திறமையால் சொத்து மதிப்பு அதிகரிக்கும். எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவீர்கள். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் அடைவீர்கள். அலைச்சல் இருக்காது. பணி செய்யும் இடத்தில் உயர்ந்தவராகக் கருதப்படுவீர்கள். உங்களின் திறமைகள் மூலம் பணியிடத்தில் சிறப்பு கிடைக்கும். நல்ல அனுகூலமான பயன்கள் கிடைக்கும் நாள். பொருளாதார சேர்க்கை உண்டாகும். இதுநாள் வரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

குடும்பத்தாரிடம் பேசும் போது கவனமுடன் பேச வேண்டும். கணவன், மனைவியிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கடன் கொடுத்து உதவும் சூழ்நிலை ஏற்படும். மனதில் ஏற்பட்ட சிந்தனைகள் மூலம் சோர்வு ஏற்படலாம். மற்றவர்களின் கருத்தையும் ஆராய்ந்து செயல்படுவது நல்லது. புதிய துறை சார்ந்து தேடுவீர்கள். மாணவர்களின் கற்றல் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய சிந்தனையைத் தூண்டி விடும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

இழுபறிகள் நீங்கி, பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அதிக வருமானம் கிடைக்கும். சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை உண்டு. பழைய நினைவுகளை கூர்ந்து ஆலோசிக்க வேண்டாம். இதனால் சுறுசுறுப்பற்று காணப்படுவீர்கள். கணவன், மனைவியிடையே அனுசரித்து செல்வது சிறப்பு. பணியிடத்தில் சரியான நேரத்திற்குள் வேலையைச் செய்து முடிப்பீர்கள். உங்களது திறமைக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். ஆடம்பர பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. கீர்த்தி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

இன்னைக்கு உங்களுக்கு சிறப்பான நாள். இது வரை இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்கக் கூடிய மனப்பக்குவம் கிடைக்கும். உங்களுடைய சாதுரியமான பேச்சுக்களால் வளர்ச்சி அடைவீர்கள். உயர்கல்வியில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு பிறப்பதால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உண்டாகும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பொருளாதார சேர்க்கைக்கு வழி வகுப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த ஏற்ற இறக்கங்கள் குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய சிந்தனைகள் உருவாகும். உயரதிகாரிகளின் ஆதரவால், உங்களுக்கு பயன் கிடைக்கும். நிர்வாகத் திறமையின் மூலம் வெற்றி காண்பீர்கள். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

இழுபறிகள் அனைத்தும் விலகி நன்மைகள் பிறக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் மூலம் நன்மை கிடைக்கும். உடனிருப்பவர்களின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மனப்பான்மை கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் இனிதே நடக்கும்.  ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் அதிக நாட்டம் பிறக்கும். இதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இதில் நீங்க கவனமா இல்லனா, பெரிய இழப்பு நேரிடும்.. எச்சரிக்கையா இருக்கணும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 08.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam 

குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்சனைகள் விலகி உறவு மேம்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதார வரவு மேம்படும். இதற்கு மேல் செல்ல செலவுகள் உண்டாகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படலாம். இதன் மூலம் நன்மை உண்டாகும். சுகம்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்