Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 23 ஆம் நாளுக்கான [06 ஏப்ரல் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பணியிடத்தில் சகபணியாளர்களிடம் இருந்த சங்கடம் விலகும். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். பணவரவு உண்டு. சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபங்கள் உங்கள் மனதை குளிர்விக்கலாம். துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். சகோதர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் கழித்து பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புண்டு. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பரந்த மனம் உள்ளவராக, நல்லது செய்பவராக இருங்க. இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். ஆனால், சில போராட்டங்களுக்கு பிறகே அது சாத்தியம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் சகஊழியர்கள் உங்களுடைய வேலையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் முதலில் சில தடைகள் வந்தாலும் பின்னர் முன்னேற்றம் காணப்படும். துணையிடம் இருந்த பிரச்சனை விலகி, உங்களின் மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்து தள்ளுவார். சிலருக்கு முன்னோர்கள் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி வந்து சேரும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். உங்களுடைய இலக்கை அடைய  கொஞ்சம் கடினமாக உழைக்க நேரிடும். கொடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து முடித்து, மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுபகாரிய செலவுகள் ஏற்படும். திடீர் விருந்தனர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணம் உருவாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கையில் புதுப்புது மாற்றங்கள் ஏற்படலாம். ருமண வாழ்க்கையில் அன்பு, ஒற்றுமையும் ஏற்படும். சில செலவுகள் இருக்கும் ஆனால் பயனுள்ள விஷயத்திற்காகவே இருக்கும். கவலை வேண்டாம். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எதிர்பாலினத்தவரால் சிக்கல் உண்டு. பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வார்கள். தனிமையாக இருப்பது போன்று உணர்வீர்கள். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்த்துக்கூடிய நாளாகவும் இருக்கும். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும். தேவையில்லாத சிந்தனை மூலம் தூக்கமின்மை ஏற்படும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

ரொம்ப சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது. பணியில் பதட்டம் காணப்படும். நிதானத்தோடு செயல்பட வேண்டும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் காணப்படும். உறவினர்கள், நண்பர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பெண்கள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவு இருமடங்காக இருக்கும். அனாவசிய செலவை தவிர்க்கவும். தொழிலில் லாபத்தை பெற உழைக்க வேண்டியிருக்கும். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. நினைத்த காரியம் நிறைவேற இழுத்தடிக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பணஉதவிகள் எளிதில் கிடைக்கும். ஆசைப்பட்ட விஷயம் எதிர்பாராமல் கிடைக்கும். இதனால், நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பு. மந்தமாக இருந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பரிசும் பாராட்டும் கிடைக்கும் நாள். சிலருக்கு குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் மனதில் அவ்வப்போது வந்துபோகும். நீதிமன்ற வழக்குகள் சாதகமான பலனை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். யாருக்காவும் உங்களுடைய முயற்சியை விட்டுக்கொடுக்காதீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி வந்தடையும். ஆனால், உங்களிடம் ஏதாவது உதவியை எதிர்பார்ப்பார்கள். காதலர்களுக்கு இடையில் இருந்த சண்டை முடிவுக்கு வரும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சிலருக்கு தொழில் சார்ந்த பயணங்கள் ஏற்படும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 3

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உங்கள் விருப்பங்கள் எந்த தடையுமின்றி நிறைவேறும். தொலைத்துரத்தில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். இதனால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. பணப்புழக்கம் சீராக இருக்கும். இருந்தாலும் செலவு செய்யும் போது கவனத்தோடு இருப்பது நல்லது. சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியிடத்தில் திறமையாக செயல்படுவீர்கள். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புண்டு. கவலைப்படுவதையும், உணர்ச்சி வசப்படுவதையும் தவிர்த்து மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும். எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும். அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். பணியிடத்தில் கவனக்குறைவால் தவறுகள் எழ வாய்ப்புள்ளது. பெரிய பிரச்சனையை தவிர்க்க எச்சரிக்கையாக இருங்கள். யாரிடமும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புதிய நபரால் காதலர்களுக்கிடையே பிரச்சனை வரும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உங்களுடைய அனுசரனையான அணுகுமுறை வெற்றியை தேடி தரும். வீட்டில் ரொம்ப நாட்களாக நின்று போயிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். இதனால் மனதில் ஒரு நிம்மதி உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் சந்தோசமான தருணத்தை அனுபவிப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்து நடந்துக் கொள்ளவும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

வேலை செய்யும் இடத்தில் சவால்கள் நிறைய இருக்கும். ரொம்ப கவனத்தோடு நம்பிக்கையோடு பணியை செய்யுங்க. உங்களின் திறமைகளை நீங்களே அறியும் நாள். எதிர்பாராத நேரத்தில் பணஉதவி உங்களை தேடி வரும். தொழில், வியாபாரத்தில் நீங்க நினைத்தபடி லாபம் இருக்கும். புதிய நபரால் அனுகூலம் கிட்டும். தடைப்பட்டு நின்ற சுபக்காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். பணவரவு தாராளமாக உண்டு. சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். விலங்குகளினால் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு, உஷார். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரத்தை பொறுத்த வரை அற்புதமாக இருக்கும். துணையின் விருப்பப்படி நடந்துக்கொள்வதன் மூலம் நல்லுறவு மேம்படும். கடன் பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு ஆறுதலான நாள். பழைய பாக்கிகள் வசூலாகும். எலியும் பூனையுமாய் இருந்த கணவன் – மனைவிக்குள் நல்ல புரிதல்கள் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாகவே உள்ளது. நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்