Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 22 ஆம் நாளுக்கான [05 ஏப்ரல் 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 9.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் லாபம் ஏறி, இறங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன் பிறந்தவர்களின் வழியாக சுபசெய்திகள் வீடு தேடி வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். எழுத்து சம்பந்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். வாகனத்தில் செல்லும்போது பொறுமை வேண்டும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சற்று சுமாரான நாளாக தான் இருக்கும். குடும்பத்திடன் கோபத்தை காட்டிவிட வேண்டாம். ஒரு புதிய நபர்களால் வியாபாரத்தில் சின்ன தடுமாற்றம் ஏற்படும் ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ளவும். எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை உண்டாக்கலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மற்றவர்களை பற்றி குறைக்கூறுவதை தவிர்ப்பதன் மூலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். துணையின் செயல் கோபத்தை ஏற்படுத்தும், அமைதி காக்கவும். பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி விசிவிடாதீர்கள், அப்பறம் அவஸ்தை பட வேண்டிருக்கும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பணிகளை விரைவாகவும் திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு, வங்கியிருப்பு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். மனைவி அல்லது காதலியுடன் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு வருமானம் அமோகமாக இருக்கும். மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தொழிலில் நண்பர்களுடன் இணைந்து பல சவால்களை முறியடித்து நல்ல லாபம் அடைவீர்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலர் தங்களுடைய பிள்ளைகளின் படிப்பிற்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். காதலர்களுக்கு இடையே அன்பும், பாசமும், புரிதல்களும் அதிகரிக்கும் நாள். சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் எல்லாம் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடம் மாறுதல் கிடைக்கும். எந்த தொழிலில் இறங்கினாலும் வெற்றி உங்களுக்குதான். செலவு செய்யும்போது மட்டும் கொஞ்சம் சிக்கனம் தேவை. அலுவலகத்தில் இருந்து பிரச்சனைகள் தீரும். உங்களால் முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுங்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போக வாய்ப்புள்ளது. துணையுடன் அகந்தை பேச்சை குறைத்துக்கொள்ளவும். கீர்த்தி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசும்போது சற்று கவனத்தோடு பேசுங்கள். இல்லையெனில் அதுவே நட்பை முறித்துவிடும். குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும். வாகன பயணத்தின்போது நிதானம் தேவை. பணவிஷயத்தில் ஏமாற்றமடைய வாய்ப்புள்ளது ரொம்ப எச்சரிக்கையாக இருக்கவும். வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சலை ஏற்படுத்தும். அக்கம்பக்கத்தினரால் சின்ன சலசலப்பு ஏற்படும். சுதாரித்துக் கொள்ளவும். சிலருக்கு பிடித்த இடங்களுக்கு செல்வதில் தடை ஏற்படும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

சவால்கள் நிறைந்த நாள். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால், மனதில் டென்ஷன் அதிகமாகும். வெளிப்புற வேலைகள் களைப்படைய செய்யும். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். பணியிடத்தில் சகஊழியர்களிடையே திறமையை நிரூபிக்க போட்டி போட்டு வேலை செய்வீர்கள். குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும், முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம், கவனமாக இருக்கணும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பணவரவு திருப்தியை கொடுக்கும். இதனால், பல சிக்கல்களில் இருந்து மீண்டு வருவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த தேவைகள் அனைத்தும் நிறைவடையும். உங்கள் அன்புகுரியவரிடம் இருந்து எதிர்பாராத பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சகஊழியர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வரும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். திடீர் விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

மேலதிகாரிகள் உங்களின் பணித்திறனை பார்த்து பாராட்டுவார்கள். புதிய தொழில் செய்ய உதவிகள் தேடி வரும். இவ்வளவு நாளாக வீணாக கிடந்த நிலம் நல்ல விலைக்கு போகும். ஒரு சிலருக்கு காதல் மனைவியையே கறம் பிடிக்கும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்கு உதவியை வாரி வழங்குவீர்கள். இதனால், உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். தெரியாதவர்களிடன் அநாவசியமாக பேச வேண்டாம். இருப்பினும், பெரிய அளவிலான பண முதலீட்டை தவிர்ப்பது நல்லது. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

இவ்வளவு அலையோ அலைனு அலஞ்சி, எல்லாவற்றிற்கும் ஒரு கும்பிடு போட்டு மகிழ்ச்சியுடனும் மன நிம்மதியுடனும் நாளை செலவழிப்பீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு பல நிதி சிக்கல்களை நீக்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். ஆரோக்கியத்தை பொறுத்த வரை சூப்பரோ சூப்பர். துணையின் விருப்பத்தை நிறைவேற்றி காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள். சிலருக்கு  நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். விருப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியான சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும்.. சவால்கள் நிறைந்த நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 05.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு அவர்களே வந்து பேசுவார்கள். எதிர்பாராத பண வரவுகள் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கிறது. உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையை பொறுத்த வரையில் ஆஹா. சிலருக்கு வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். அன்புக்குரியவர்களுக்கு பரிசு வாங்கிக் கொடுப்பீர்கள். விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் குடும்பத்திலும், பிற இடத்திலும் உங்களின் மதிப்பு உயரும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்