Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sani Peyarchi 2023 To 2026 : சனியின் பார்வையால் பண நெருக்கடியில் மாட்டப்போகும் ராசிக்காரர்கள்....! கவனமாக இருங்க!

Manoj Krishnamoorthi Updated:
Sani Peyarchi 2023 To 2026 : சனியின் பார்வையால் பண நெருக்கடியில் மாட்டப்போகும் ராசிக்காரர்கள்....! கவனமாக இருங்க!Representative Image.

சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என நாம் கேட்டு இருப்போம்.  சனி பகவான் கர்ம வினையைச் சரிவரத் தீர்க்கும் தர்ம தேவன் ஆவார். மகரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 17.01.2023 முதல் ஏப்ரல் மாதம் 2025 வரை கும்பத்தில் பெயர்ச்சி செய்கிறார்.  இதனால் சில ராசிக்காரருக்கு சாதகமான பலன் அமையாது, முக்கியமாக பணக் கஷ்டம் உண்டாகும் நிலையும் ஏற்படும். இந்த 2023 சனி பெயர்ச்சியில் நிதானமாக இருக்க வேண்டியவர்கள் யார் என்பதை கீழே காண்போம். 

சனி பெயர்ச்சி 2023 கவனமாக இருக்க வேண்டிய ராசி (Sani Peyarchi 2023 To 2026)

Most Read: சனி பாதிப்பை குறைக்க செய்ய வேண்டிய பரிகாரம்

Sani Peyarchi 2023 To 2026 : சனியின் பார்வையால் பண நெருக்கடியில் மாட்டப்போகும் ராசிக்காரர்கள்....! கவனமாக இருங்க!Representative Image

கடகம்

அட்டம சனி காலத்தில் பொதுவாக சொல்லும்படியான பலன் இருக்காது. தொழிலில் புதிய மாற்றமும் செய்ய வேண்டாம், அது வீண் பிரச்சனையைத் தடுக்கும்.  முக்கியமாக இந்த காலகடட்த்தில் பணியில் சவாலான தருணங்களை சந்திக்க நேரிடும். பண இழப்பு ஏற்படும், எனவே பணத்தை நிதானமாக செலவிட வேண்டும்.  குடும்பத்தில் வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும்.  ஆரோக்கியத்தில் தொல்லைகள் அளிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. 

Sani Peyarchi 2023 To 2026 : சனியின் பார்வையால் பண நெருக்கடியில் மாட்டப்போகும் ராசிக்காரர்கள்....! கவனமாக இருங்க!Representative Image

சிம்மம்

துணிச்சலான நடத்தைக்கு சொந்தக்காரனான சிம்ம ராசிக்காரருக்கு சனியின் பார்வை ஜென்மத்தில் அமைகிறது, எனவே இந்த காலகட்டத்தில்  தேவையில்லாத சொல்லுக்கு ஆளாவீர்.  தொழிலில் வேலை பழு அதிகமாகும், சில கசப்பான அனுபவங்கள் வந்து மறையும். அதிகமாக உழைக்க வைக்கும் சனி உங்களுக்கு ஓரளவு  நிலையான  செல்வத்தை அளிக்கும். அதை சேமித்து கொள்வது புத்திசாலித்தனமாகும். கண்டக சனி இருப்பதால் உடல்நலத்தில் அதிக கவனம் வேண்டும்.

Sani Peyarchi 2023 To 2026 : சனியின் பார்வையால் பண நெருக்கடியில் மாட்டப்போகும் ராசிக்காரர்கள்....! கவனமாக இருங்க!Representative Image

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரரே உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி இருப்பதால் சில தொந்தரவு வரும். ஆனால் சமாளிக்கும் மனப்பக்குவம் கூடவே இருக்கும். செய்யும் செயலில் தடைகள் ஏற்பட்டு தான் நிறைவேற்றும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் பாதிப்பு இல்லை என்றாலும் பல செலவுகளை உருவாக்கும். சில சமயம் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும். 

Sani Peyarchi 2023 To 2026 : சனியின் பார்வையால் பண நெருக்கடியில் மாட்டப்போகும் ராசிக்காரர்கள்....! கவனமாக இருங்க!Representative Image

மகரம்

பாத சனி என்பது தன், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதாகும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு காலில் தான் பிரச்சனை வரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். இதில் இரு ஆறுதல் என்னவென்றால் தொழிலில் அனுபவித்த தொல்லைகள் சற்று குறையும். வீட்டில் உள்ளவர்களுடன் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.  

Sani Peyarchi 2023 To 2026 : சனியின் பார்வையால் பண நெருக்கடியில் மாட்டப்போகும் ராசிக்காரர்கள்....! கவனமாக இருங்க!Representative Image

கும்பம்

சாதுரியமாக செயல்படும் உங்களுக்கு ஜென்ம சனி இருப்பதால்  பணப்பரிவர்த்தனையில் நிதானமாக இருக்க வேண்டும். தொழில் ஸ்தானத்தில் திருப்தியற்ற நிலையே இருக்கும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வயதான கும்ப ராசிக்காரருக்கு உடல் பல தொந்தரவு அளிக்கும். வீட்டில் சில மன வருத்தம் அளிக்கும், திருமணத் தடை ஏற்படும். மொத்தத்தில் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் சமாளிக்கலாம். 

Sani Peyarchi 2023 To 2026 : சனியின் பார்வையால் பண நெருக்கடியில் மாட்டப்போகும் ராசிக்காரர்கள்....! கவனமாக இருங்க!Representative Image

மீனம் 

மீன ராசிக்காரரே இத்தனை நாட்களாக லாப சனியாக இருந்த சனி பகவான் இனி ஏழரை சனியாக பயணிக்க உள்ளார். எனவே, பணம் அதிகமாக விரையம் ஆகும். இந்த காலகட்டத்தில் கோபம் அதிகமாக வரும், பொறுமை கடையுங்கள். தொழிலில் அகல வைப்பதைத் தவிர்த்து கொள்வது நல்லது.  வீட்டில் கருத்து மோதல் ஏற்படும். உணவு பழக்கத்தினால் ஆரோக்கிய பிரச்சனைகள் அளிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்