Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 08 ஆம் நாளுக்கான [22 மார்ச் 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கி, சாதகமான சூழ்நிலை காணப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணவரது சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த சில சிக்கல்கள் விலகும். எந்த காரியத்தையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். காதலர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சில காரியங்களில் தடைகளை கண்டு அதன்பின் வெற்றி காண்பீர்கள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். பணியிடத்தில் நேர்மையாக நடந்து, மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபாரத்தில் பொருளாதார உயர்வு ஏற்படும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் உருவாகும். எதிர்காலம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பணியிடத்தில் அனைத்தும் சுமூகமாக நடைபெறும். அறிமுகம் இல்லாத எதிர்பாலினத்தவரிடம் பேசுவதை தவிர்க்கவும்.  எலியும் பூனையுமாய் இருந்த கணவன் - மனைவிக்குள் நல்ல புரிதல்கள் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். மூத்த சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

கடின முயற்சியால் சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. தொழிலில் லாபம் இரட்டிபாகும், இதனால் சேமிப்பை உயர்த்த முடியும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். எந்த செயலையும் உறுதியுடன் செயலாற்றுவீர்கள். அனைவரிடமும் நட்பாக பழகுவீர்கள். துணையிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு நீண்ட ஆசைப்பட்ட பொருள் வாங்கக்கூட யோகம் உண்டு. நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களிடம் கோபத்தை குறைத்துக்கொண்டு விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும், இதனால் மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் அவ்வளவாக இருக்காது. ஏமாற்றம் மிகுந்த நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளவும். துணையுடன் பேசுவதை தவிர்ப்பது நல்லது. முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

விவசாயம் சார்ந்த தொழிலில் லாபம் மேம்படும். எந்த காரியத்திலும் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் அஜாக்கிரதை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் மதிப்பு மேம்படும். உங்க திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கண் மற்றும் பல் சார்ந்த பிரச்சனை ஏற்படலாம். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். சிலருக்கு புதிய பொருள் வாங்குவது சம்பந்தமான எண்ணங்கள் ஈடேறும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். எதை பேசும்போதும் கவனமாக பேச வேண்டும். நண்பர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லது. பயணத்தின் போது பணத்தை தொலைக்க வாய்ப்புள்ளது பார்த்து ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். மலைசார்ந்த இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

விருப்பத்தை அடைவதில் சில தடைகளை சந்திக்கலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை முக்கியம். தந்தைவழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணியில் எச்சரிக்கையும் நிதானமும் வேண்டும். எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்க வேண்டாம். வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

தன்நம்பிக்கை அதிகரிக்கும் நாள். கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். எல்லா செயலும் சுறுசுறுப்புடனும், தைரியத்துடனும் ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சிலருக்கு பரிசுக்கூட கிடைக்க வாய்ப்புள்ளது. பல நாட்களாக இழுத்தடித்த சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். வாகன பயணத்தின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். நிதிநிலைமை அற்புதமாக இருக்கும். கைமாறாக வாங்கிய பணம் திரும்ப கிடைக்கும். கணவன், மனைவி இடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பணியிடத்தில் பணிசுமை அதிகரிக்கும். கவனக்குறைவால் தவறுகள் எழ வாய்ப்புள்ளது. பெரிய பிரச்சனையை தவிர்க்க எச்சரிக்கையாக இருங்கள். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். பணவிஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். செலவுகள் தேடி வரும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினர் மற்றவர்களை நம்பி ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்..  | Tomorrow Rasi Palan in Tamil | 22.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். பணவரவு உண்டு. சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபங்கள் உங்கள் மனதை குளிர்விக்கலாம். அனைத்து விஷயத்திலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பீர்கள். பணியிடத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்