Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,117.20
-631.22sensex(-0.87%)
நிஃப்டி21,846.20
-209.50sensex(-0.95%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்...

UDHAYA KUMAR September 22, 2022 & 14:02 [IST]
பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்... Representative Image.

பொன்னியின் செல்வன் பார்ட் 1 திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், நாவல் குறித்தும், திரைப்படம் குறித்தும் நிறைய சந்தேகங்களும், கேள்விகளும் மக்களுக்கு இருக்கும். அதனை விளக்கும் வகையில், அந்தந்த கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் வாருங்கள். 
 

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்... Representative Image

What is the story Ponniyin Selvan about?

பொன்னியின் செல்வன் குறித்து தெரியாதவர்கள், முதலில் கேட்கும் கேள்வி இதுதான். பொன்னியின் செல்வன் யாருடைய கதை.. எந்த மாதிரியான கதை.. உண்மைக் கதையா, வரலாற்றில் நடைபெற்ற நிகழ்வா? இப்படி பலரும் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான பதிலைக் காண்போம்

ராஜ ராஜ சோழன் எனும் அருள்மொழிவர்மனின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்த நாவல்தான் இந்த பொன்னியின் செல்வன். ராஜ ராஜ சோழனின் தந்தை, அண்ணன் மரணம், அவர்களுக்குப் பிறகு என்ன நடந்தது, ராஜ ராஜ சோழன் எப்படி ஆட்சிக்கு வந்தார், முடி சூட்டினார் என்பதுதான் கதை. இந்த நாவலை எழுத தொடங்கும் முன்பாக கல்கி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். வரலாற்று உண்மைகளைத் தழுவி சில கற்பனை கதாபாத்திரங்களை புனைந்து எழுதிய வரலாற்றுப் புதினம் இது. 

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்... Representative Image

Who is the villain of Ponniyin Selvan?

பொன்னியின் செல்வன் என்பது சோழ சாம்ராஜ்யத்தின் கதை என்பது விளங்கியிருக்கும். எப்படி ஒரு நாட்டின் அரசனுக்கு பல்வேறு திசைகளிலிருந்தும் எதிரிகள் இருப்பார்களோ அதேபோல்தான், ராஜ ராஜ சோழனுக்கும். இதுமட்டுமின்றி அவரின் தந்தையின் எதிரிகள், ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள், என சோழ சாம்ராஜ்யத்துக்கு பல எதிரிகள் இருந்தனர். அந்த வகையில், பொன்னியின் செல்வனில் குறிப்பிடத்தக்க வில்லன்களாக,  மோகன் ராமன்,  கிஷோர், ரியாஷ் கான் ஆகியோர் வில்லன்களாக காட்டப்படுகிறார்கள். 

மோகன் ராமன் - அனிருத்தா பிரம்மராயர் கதாபாத்திரத்திலும், கிஷோர் - ரவிதாசன் கதாபாத்திரத்திலும்,  ரியாஷ் கான் - சோமன் சாம்பவன் வேடத்திலும் நடித்திருக்கிறார்கள். 

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்... Representative Image

Is Ponniyin Selvan a true story?

1950 - 1954 காலக்கட்டத்தில்,  வாராந்திர இதழில் தொடராக பதிவிடப்பட்ட இந்த கதை, பின் 1955ம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலாக வெளியிடப்பட்டது. மொத்தம் 5 பாகங்கள் கொண்ட புத்தகமாக இது இருக்கிறது. 

சோழ சாம்ராஜ்யத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட கால வரலாற்றையும், சில கற்பனை புனைவுகளையும் இணைத்தே இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. இதில் வரும் பல சம்பவங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவைதான். சுவாரஸ்யத்துக்காக சில கற்பனை காட்சிகளும் இணைக்கப்பட்டிருக்கிறது. 

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்... Representative Image

How many Ponniyin Selvan books are there?

5 பகுதிகள் கொண்ட இந்த நாவல் 5 புத்தகங்களாக வெளிவந்துள்ளது. மொத்தம் 2130 பக்கங்களைக் கொண்டது இந்த நாவல். 

முதல் பகுதியின் முதல் சில பக்கங்களிலேயே நாம் பொன்னியின் செல்வன் கதைக்குள் நுழைந்துவிடுவோம். அவர்களில் ஒருவராக, அந்த காலக்கட்டத்துக்குள் நுழைந்து, அங்கே ஒரு பார்வையாளராக நடப்பவற்றுக்கு சாட்சியாக நின்று கொண்டிருப்போம். 

முதல் இரு பக்கங்கள் படித்து முடித்ததும் பல கேள்விகள் நம் மனதில் எழும். வார இதழில் தொடராக வந்ததால், ஒவ்வொரு வாரமும் பல டுவிஸ்ட்கள் டர்ன்களுடன் முடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருந்தது. அதுவே நாவலாக மாற்றும்போது இதன் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. 

யாரும் 10, 20 பக்கங்கள் படித்துவிட்டு புத்தகத்தை கீழே வைக்க முடியாது. அடுத்தது என்ன, என்ன நடக்கப்போகிறது என்ற கேள்வி மண்டையைப் போட்டு உசுப்பும். இதுவே பொன்னியின் செல்வனின் வெற்றி. 

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்... Representative Image

What is the best love story in Ponniyin Selvan?

வந்தியத்தேவன் - மணிமேகலை

அருண்மொழி வர்மன் - வானதி

அருண்மொழி வர்மன் - நந்தினி 

வந்தியத்தேவன் - குந்தவை 

இப்படி இந்த நாவலில், காதல் கதைகள் இருக்கின்றன.  சிலர் இதில் வானதி, அருண்மொழி வர்மன் காதலை சிலாகிப்பார்கள், சிலர் மணிமேகலையின் காதலை, இன்னும் சிலரோ குந்தவை - வந்தியத்தேவன் காதலை. ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. மூன்றும் வேறு வேறு வகையில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இதில் குந்தவை  - வந்தியத்தேவன் - மணிமேகலை  முக்கோண காதல் கதை.  

பூங்குழலி கதாபாத்திரம் சேந்தன் அமுதன் காதல் கதையும் இதில் உண்டு. இப்படி எண்ணற்ற காதல் கதை இருப்பதால் எது சிறந்தது என்பது அவரவர்க்கு விருப்பமானது. 
 

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்... Representative Image

Is Ponniyin Selvan worth reading?

தமிழில் நாவல், கதைகள் படிக்க விரும்புபவர்களுக்கு நிச்சயமாக படிக்க வேண்டி பரிந்துரைக்க வேண்டிய கதை இது. 

Who is the heroine of Ponniyin Selvan movie?

ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா, ஜெய சித்ரா

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்... Representative Image

Who is hero in Ponniyin Selvan story?

 

வந்தியத்தேவன். நம்மை கதைக்குள் அழைத்துச் செல்பவனே இவன்தான். கல்கி வந்தியத் தேவனின் வாயிலாகவே நம்மை அனைவரையும் சந்திக்க வைக்கிறார்.  நாவலைப் படிப்பவர்களுக்கு தானும் வந்தியத்தேவன் என்பதைப் போல உணர்வு ஏற்படும்.

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்... Representative Image

 How long will it take to read Ponniyin Selvan?

 

நான்கரை மணி நேரத்துக்குள் இந்த நாவலை சராசரியாக வாசிக்கும் பழக்கம் இருக்கும் ஒருவர் முடித்து விட முடியும். 
 

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்... Representative Image

Who is the most important character in Ponniyin Selvan?

 

ராஜ ராஜ சோழன் எனும் அருண்மொழி வர்மன். இவர்தான் பொன்னியின் செல்வன். இவர்தான் கதையின் நாயகனாக இருக்க வேண்டியது. ஆனால் வந்தியத்தேவன் இவரை ஓவர் டேக் செய்வான். ஆனாலும் வரலாற்றில் பொன்னியின் செல்வன் என்றால் ராஜ ராஜ சோழன்தான். 
 

பொன்னியின் செல்வனும் பத்து கேள்விகளும்... Representative Image

Why is Ponniyin Selvan famous?

கல்கி தான் காரணம். அவரின் கதையும், எழுத்தும் அப்படி ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளது. பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல், வார இதழில் வெளியான போதே இதனைத் தேடி தேடி படித்து, தொகுத்து வைத்திருந்தவர்கள் பலர். அன்றைய காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்களுக்கு நிகராக ஒரு கூட்டம் கல்கியின் ரசிகர்களாக இருந்தது. விசயம் என்னவென்றால், அந்த கூட்டம் இப்போது வரை பொன்னியின் செல்வனை படித்துக் கொண்டிருக்கிறது. வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் பொன்னியின் செல்வனை தவற விடுவது கிடையாது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்