Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,895.62
247.00sensex(0.34%)
நிஃப்டி22,410.75
74.35sensex(0.33%)
USD
81.57
Exclusive

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. | Foods to Avoid in Five Month of Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. | Foods to Avoid in Five Month of Pregnancy in TamilRepresentative Image.

Second Trimester of Pregnancy Tamil: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. | Foods to Avoid in Five Month of Pregnancy in TamilRepresentative Image

இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பத்தின் போது ஹார்மோன்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும்போது உங்களுக்கு உணவின் மீதான ஏக்கம் அதிகரிக்கும். இதனால், பல வகை உணவுகளை சாப்பிடவும் ஆசை வரும். ஆனால், கர்ப்பத்தின் போது எந்த அளவிற்கு ஆரோக்கியமான  உணவுகளை சாப்பிடுகிறோமோ, அந்த அளவிற்கு சில உணவுகளை தவிர்ப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அந்தவகையில், கர்ப்பத்தின் 5வது மாதத்தில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சில உணவுப்பொருட்களை பற்றி தெரிந்துக்கொள்வோம். இவ்வகை உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் நன்மை பயக்கும். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. | Foods to Avoid in Five Month of Pregnancy in TamilRepresentative Image

பழங்கள்:

என்னாது பழமா? பொதுவாக பழங்கள் என்றாலே ஆரோக்கியமானது தானே. அதையும் சாப்பிடக்கூடாது? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. பழங்கள் ஆரோக்கியத்தில் களஞ்சியம் தான். இருந்தாலும் அவற்றில் சில விளைவுகளும் இருக்கின்றன. குறிப்பாக, அன்னாசி பழம், பப்பாளி, மாதுளை ஆகியவை. இந்த வெப்பமண்டல பழங்களை முழு கர்ப்ப காலம் வரையிலும் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இத்தகைய பழங்கள் கருச்சிதைவிற்கும் வழிக்கும். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. | Foods to Avoid in Five Month of Pregnancy in TamilRepresentative Image

ஃபாஸ்ட்புட் உணவுகள்:

ஃபாஸ்ட்புட் உணவுகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும், அவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இவ்வகை உணவுகள் சுகாதாரமற்றதாக இருப்பதோடு, ஒரு கர்ப்பிணிக்கு விஷம் போல வேலை செய்கின்றன. எனவே, உங்க குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக இந்த கொழுப்புப் பொருட்களை விட்டு விலகி இருங்கள். அதேபோல், குக்கீஸ், சிப்ஸ், மிட்டாய்  போன்றவற்றை தவிர்த்திடுங்கள். ஏனென்றால், இவற்றில் செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். இவை உடலில் இரத்த சர்க்கரை அதிகப்பதோடு, சர்க்கரை நோய்க்கும் வழிவகுக்கும். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. | Foods to Avoid in Five Month of Pregnancy in TamilRepresentative Image

டீ & காபி:

டீ மற்றும் காபி அனைவருக்கும் பிடித்த எனர்ஜி டிரிங். ஆனால், இவற்றில் அதிகளவு காஃபின் இருக்கின்றன. அதிகப்படியான காஃபின் குழந்தைக்கும் சரி உங்களுக்கும் சரி மிகவும் ஆபத்தானது. எனவே, உங்களுக்கு காபி மற்றும் டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், ஒரு நாளை 2 கப் டீ அல்லது காபி மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். அதிகமாக வேண்டாம். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. | Foods to Avoid in Five Month of Pregnancy in TamilRepresentative Image

குளிர்பானங்கள்:

நாவிற்கு சுவையாகவும், உடலுக்கு இதமானதாகவும் இருப்பதால், குளிர்பானங்களை பலருக்கும் பிடிக்கும். ஆனால், இவை நம் உடலில் கெட்ட கலோரிகளை சேர்க்கும் என்று யாரும் அறிந்துக்கொள்வது கிடையாது. இம்மாதிரியான கார்பனேற்றப்பட்ட பொருட்கள் செரிமான பிரச்சனைகளை உருவாக்குகின்றன. அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான கலோரிகள் உடல் எடையை அதிகரிக்கும். இவை அனைத்தும் நீங்க நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுப்பதில் சிக்கலை உண்டாக்கக்கூடியவை. எனவே, குளிர்பானங்கள் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். அதற்கு பதிலாக பழச்சாறு குடிக்கலாம். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. | Foods to Avoid in Five Month of Pregnancy in TamilRepresentative Image

ஆல்கஹால்:

ஒரு சில பெண்களுக்கு மது அருந்தும் பழக்கும் இருக்கும். ஆனால், கர்ப்பத்தின் போதும் அதையே பின்பற்றி வந்தால், குறைப்பிரசவம் கூட ஏற்படலாம். சில சமயங்களில் கருச்சிதைவுக்கும் கூட வழிவகுக்கலாம். எனவே, உங்களுடைய நலனுக்காவும் குழந்தையின் நலனுக்காவும் அவற்றை தவிர்த்துடுங்கள். அதேபோல தான் புகைப்பிடித்தலும். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. | Foods to Avoid in Five Month of Pregnancy in TamilRepresentative Image

பச்சை முட்டை:

முட்டை என்பது ஒரு ஆரோக்கியமான உணவுப்பொருட்கள். ஒரு தேவையான புரதச்சத்தை கொடுப்பதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தினமும் 2 வேக முட்டை சாப்பிட வேண்டும். அதேபோல், கர்ப்பிணி பெண்களுக்கும் முட்டை ஒரு இன்றியமையாத ஊட்டச்சத்து உணவாகும். இருந்தாலும், பச்சை முட்டை அல்லது ஹால்ப் பாயில் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. நன்றாக வேக வைத்த முட்டை மட்டுமே உடலுக்கு நல்லது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்