Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kara Boondi Recipe In Tamil: மொறு மொறுனு கார சாரமான காரா பூந்தியை இப்படி செஞ்சி பாருங்க...

Gowthami Subramani October 22, 2022 & 19:00 [IST]
Kara Boondi Recipe In Tamil: மொறு மொறுனு கார சாரமான காரா பூந்தியை இப்படி செஞ்சி பாருங்க...Representative Image.

ஸ்வீட்-க்கு அடிமையாகும் நபர்கள் எப்படி இருக்கின்றனரோ, அது போலவே கார சாரமாகச் சாப்பிடுவதையும் சிலர் பழக்கமாக வைத்திருப்பர். ஸ்வீட் சாப்பிடும் போது கூட ஒரு சில பேருக்கு திகட்டக் கூடும். ஆனால், காரம் சாப்பிடும் நபர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் திகைக்காது என சாப்பிட்டுக் கொண்டே இருப்பர். பொதுவாக மழைக் காலங்களில் பெருமளவில் கார சாரமாக சாப்பிடுவதையே விரும்புவர். அது போல, பண்டிகைக் காலங்களிலும் ஸ்வீட், காரம் வெரைட்டிகளில் புதிதாக என்ன செய்யலாம் என யோசித்து, வகை வகையாக தயாரிப்பார்கள். அந்த வகையில், எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய காராபூந்தியை எப்படி தயாரிக்கலாம் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Kara Boondi Recipe In Tamil: மொறு மொறுனு கார சாரமான காரா பூந்தியை இப்படி செஞ்சி பாருங்க...Representative Image

தேவையான பொருள்கள்

கடலை மாவு – 2 கப்

அரிசி மாவு – 4 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

சோடா உப்பு – 1 சிட்டிகை

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – ½ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

Kara Boondi Recipe In Tamil: மொறு மொறுனு கார சாரமான காரா பூந்தியை இப்படி செஞ்சி பாருங்க...Representative Image

செய்முறை

முதலில் காராபூந்தி செய்வதற்கு மேலே கொடுக்கப்பட்ட பொருள்களை, தேவையான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் படி, முதலில் ஒரு கப் எடுத்துக் கொண்டு கடலை மாவு 2 கப், அரிசி மாவு 4 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில், 1 சிட்டிகை அளவில் பெருங்காயத்தூள், சோடா உப்பு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இத்துடன், மஞ்சள் தூள் 1 சிட்டிகை அளவில் எடுத்துக் கொண்டு, மிளகாய் தூள் அரை டீஸ்பூன் சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மேலே கூறப்பட்ட அனைத்தையும் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

பின் தனியாக கடாய் ஒன்றை எடுத்து நன்றாக எண்ணெயைக் காய வைக்க வேண்டும்.

பூந்தி செய்வதற்கென கரண்டி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஓட்டை இருக்குமாறு கரண்டி ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.

பிறகு கலந்து வைத்த மாவை, அந்த கரண்டியில் ஊற்றி தேய்த்து விட்டால் குட்டி குட்டியாக மாவு எண்ணெயில் விழும்.

பூந்தி போட்ட பிறகு, அதனை நன்றாக கலக்கி விட வேண்டும்.

பிறகு கொஞ்சம் வேந்த பின், பூந்தியை எடுத்துத் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

இன்னொரு கடாயை எடுத்துக் கொண்டு சிறிது நெய் ஊற்றி (எண்ணெய் கூட பயன்படுத்தலாம்) முந்திரி, வேர்க்கடலை, கறிவேப்பிலை போன்றவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

இதனை வேக வைத்து எடுத்துக் கொண்ட காரா பூந்தியில் சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான காரா பூந்தி தயாராகி விடும்.

Kara Boondi Recipe In Tamil: மொறு மொறுனு கார சாரமான காரா பூந்தியை இப்படி செஞ்சி பாருங்க...Representative Image

தீபாவளி சிறப்பு கட்டுரைகள்....!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! 

 

 

Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....! 


தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!

Representative Image.

 

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் சுவையான தேங்காய் லட்டு ரெடி..

Representative Image.

 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

Representative Image.

 

 

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்… அதுவும் தீபாவளி தினத்தில்... எங்கு தெரியுமா..?

Representative Image.

 

நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?

Death of Narakasura - Who controlled all the kingdoms on Earth

 

 

பிரமிக்க வைக்கும் தீபாவளி மேக்கப்ஸ்… இந்த தீபாவளிக்கு இப்படி டிரை பண்ணுங்க…

Representative Image.

 

 

தித்திக்கும் தீபாவளி வாழ்த்து படங்கள் மற்றும் கவிதைகள்..

Representative Image.

இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!

Representative Image.

உங்க பார்ட்னருக்கும், உங்களுக்கும் ஒரே டிசைன், கலர்ல… தீபாவளிக்கு அசத்துங்க…

Representative Image.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்