Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 31 ஆம் நாளுக்கான [14 மே 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 03.30 – 04.30 வரை

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனதளவில் இருந்து வந்த கவலைகள் அனைத்தும் நீங்கி விடும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் எண்ணிய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிர்வாகப் பணிகளில் உங்கள் திறமைகள் வெளிப்படும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் கிடைக்கும். திருத்தலம் சென்று வருவதன் மூலம் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி விடும். உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கீர்த்தி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

இணைய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. முதலீடு செய்யும் போது ஆழ்ந்து சிந்தித்து நிதானமாக செயல்பட வேண்டும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தங்களுடைய சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படலாம். ஆன்மீகம் சார்ந்த பயணங்கள் மேற்கொள்வதால் மன அமைதி உண்டாகும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். செய்கின்ற முயற்சியில் புதுவிதமான சூழ்நிலைகள் ஏற்படலாம். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பிரபலங்களின் அறிமுகத்தால் எதிர்பாராத மாற்றங்களைப் பெறுவீர்கள். தொலைத்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சியில் சிந்தித்து செயலாற்றுவது நல்லது. புதிய நபர்களின் ஆதரவால் பலன்கள் பெறுவீர்கள். புதிய நண்பர்கள் தேடி வருவர். நிர்வாகத் திறமைகள் அனைத்தும் வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில விஷயங்களால் மனக்கவலை உண்டாகலாம். எதிலும் சிந்தித்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நீங்கள் செய்யும் செயலில் மந்தத்தன்மை ஏற்படலாம். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் நிறைந்து காணப்படும். எதிர்பாராத ஆதாயம் தாமதமாக கிடைக்கும். பணியிடத்தில் வேலையாட்களிடம் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது நல்லது. தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவைத் தவிர்த்து சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் அதிக கவனம் தேவை. நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பணி காரணமாக வெளியூர் செல்வதற்கான யோகம் வரும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் எழும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். அரசு சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நட்பு வட்டாரங்கள் பெருகி நன்மைகள் உண்டாகும். குடும்பத்துடன் வெளியில் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். காப்பீடு தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றக்கூடிய காலமாக அமைகிறது. நண்பர்களின் ஒத்துழைப்பு பலமாக இருக்கும். எந்த காரியத்திலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டிய நாள். தொழில் சார்ந்த விஷயத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

 

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

கணவன், மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நெருக்கம் அதிகரிக்கம். கொடுக்கல், வாங்கலில் திருப்தி கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். இதுவரை இருந்து வந்த மந்தத்தன்மை விலகி நன்மைகள் உண்டாகும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவதால் வெற்றி நிச்சயம் உண்டாகும். புதுவிதமான கலைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் விலகி மன அமைதி ஏற்படும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

 

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

மனதிற்குப் பிடித்த சில மாற்றங்கள் உண்டாகலாம். இவற்றால் நன்மை கிடைக்கும். நீண்ட காலமாக இருந்து வந்த கடன் பிரச்சனைகள் விலகி விடும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் அக்கறை காட்டுவீர்கள். உடனிருப்பவர்களின் அன்பால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழிலில் உங்கள் முயற்சியால் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பயனற்ற சிந்தனைகள் விலகி குழப்பம் ஏற்பட்ட் நீங்கும் நிலை ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சிறு மற்றும் குறுந் தொழில்களில் லாபம் ஈட்டுவீர்கள். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள். கல்வி தொடர்பான விஷயத்தில் மாணவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயத்தில் மனம் அதிக ஈடுபாட்டுடன் காணப்படும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் செல்வம் பெருகும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. தனம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

இளைய சகோதரர் வழி அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. இருப்பினும், அனுகூலம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நன்மை பிறக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செய்ய வேண்டிய செயல்களில் கருத்துடனும், கவனத்துடனும் செயல்படுவது நல்லது. வேலையிடத்தில் உடனிருப்பவர்களை விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

வித்தியாசமான சிந்தனைகளால் தடைகளை அகற்றி வெற்றி காண்பீர்கள். சிறு மற்றும் குறுந்தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்படும் சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் புதிய தன்னம்பிக்கை எழும். இதன் மூலம், கடினமான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவம் பெறுவீர்கள். எதிர்பாராத பயணங்களால் நன்மை உண்டாகும். கணவன், மனைவி இடையே இருந்த எதிர்ப்புகள் விலகி புரிதல் உண்டாகும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

நண்பர்களிடத்தில் பிரச்சனை உண்டாகலாம்.. பாத்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்க தான்..!| 14.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சி உண்டாகும் நாள். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். உங்கள் முயற்சியின் காரணமாக எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். இழுபறியானவை அனைத்து விஷயங்களும் விரைவில் நடைபெறும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செய்வதற்கான சூழல் உண்டாகும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்