Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 18 ஆம் நாளுக்கான [01 ஏப்ரல் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்த்துவிடுங்கள். துணையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது, அனுசரித்து போவது நல்லது. அரசு சார்ந்த துறையில் பணிபுரிவோர்களுக்கு பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். சிலருக்கு பூர்விக சொத்து மூலம் பணவரவு உண்டு. புதிய முயற்சிகளில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கட்டிடம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உடல் அளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். லாபம் இரட்டிப்பாகும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பும் உள்ளது. கடன் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்படவும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணவரவு தாராளமாகவே இருக்கும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது, எனவே திட்டமிட்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சலசலப்பு உருவாகும். புதிய நபரால் குடும்பத்தில் புதிய பிரச்சனை வரும். சுபகாரியம் சம்பந்தமான விஷயங்களில் தடை வரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணவரவு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்காது. இருப்பினும், சமாளிப்பீர்கள். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

கனவுகள் நனவாகும் நாள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனை குறைந்து ஒற்றுமை மேம்படும். தூரத்து சொந்தம் வழியாக நல்ல செய்தி காதுக்கு வரும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை. பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். சாதுர்யமான பேச்சால் முன்னேற்றம் ஏற்படும் நாள். துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு கூடும். தானியம் சம்பந்தமான வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். தாய்வழி பந்தங்களால் ஆதாயம் உண்டு. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

கலை சார்ந்த துறையில் வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் கவனத்துடன் செயல்படுவது சிறந்தது. நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். வயதில் மூத்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். காதலர்களுக்கு இடையே இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டிய நாள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பாலினத்தவரால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வாழ்க்கை துணை பற்றிய சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். பணியிடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. செலவுகள் மிகுந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உறவினர் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும். பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டு உண்டு. சகஊழியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தொழிலில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் தனவரவு உண்டு. சண்டையால் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். தம்பதிக்குள் அன்பு, அக்கறை அதிகரிக்கும். திடீர் பயணத்திற்கு வாய்ப்புண்டு. சிலர் நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இருப்பினும், மற்றவர்கள் பேச்சை முழுமையாக நம்பினால் ஏமாற்றம் நிச்சயம். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உற்பத்தி தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கடனாக கொடுத்த பணம் வசூலாகும். வாகனத்தில் செல்லும் போது வேகத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திடீர் விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் ஏற்படும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள். புதிய முயற்சிகள் அதிர்ஷ்டமான பலன்களை தேடி தரும். பணியிடத்தில் கொடுத்த வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் நட்பாக பழகுவீர்கள். கணவரிடம் இருந்த மனக்கசப்பு விலகும். சுமாராக சென்று வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். ஃபோன் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். சுபக்காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். சகோதரர் வழியில் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு அனுகூலமான நாள். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

நண்பர்களும், குடும்பத்தினரும் உதவியாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்க நல்ல நாள். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். எதிர்பாலினத்தவரிடம் இருந்து இன்பச் செய்தி காத்திருக்கிறது. காதலர்களுக்கு அற்புதமான நாள். எதிர்பார்த்த உதவி எதிர்பாராமல் கிடைக்கும். சிறிய முதலீட்டின் மூலம் பெரிய லாபத்தை பார்ப்பீர்கள். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். ஆன்மீக வழிபாடு மனநிம்மதியை கொடுக்கும். ஏழைகளுக்கு உதவி செய்ய வாய்ப்பு கிடைக்கும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

ஏப்ரல் ஃபூல் நாளில் யாருக்கு ஏமாற்றம்..? | Tomorrow Rasi Palan in Tamil | 01.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பணியிடத்தில் கடின உழைப்புக்கு தகுந்து அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம் ஏற்படும். தன்நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். வீண் செலவுகள் வீடு தேடி வரும். இருந்தாலும் சமாளிப்பீர்கள். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தினரால் திடீர் சலசலப்பு வரலாம். சுதாரித்துக் கொள்ளுங்கள். தொழில் சார்ந்த முயற்சிகள் சாதமான பலன்களை கொடுக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்