Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 17 ஆம் நாளுக்கான [31 மார்ச் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 12.30 - 01.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

அதிர்ஷ்டமான நாள். கடினமான பணிகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆசைப்பட்ட பொருள் வாங்குவீர்கள். பெண்கள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் நாள். கணவன், மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரித்தே காணப்படும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எதிர்பாராத பணவருகையால் பல நிதி சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சிலர் நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். பழைய நினைவுகளால் மனதில் ஒருவிதமான தவிர்ப்பு, குழப்பமான சூழல் நிலவும். ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்க துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். நேரம் உங்களுக்கு சாதகமானதாக இல்லாததால், மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். நினைத்த காரியம் நிறைவேற தடங்கல் ஏற்படும். கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணம் மேற்கொள்வீர்கள். சிலர் குடும்ப சூழலுக்காக கடன் வாங்குவீர்கள். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பணவரவு திருப்திகரமானதாக இருக்கும். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சந்தோஷத்திற்கு குறை இருக்காது. விழா அல்லது விருந்துகளுக்கு சென்று மகிழ்வீர்கள். யாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பெயர் தெரியாவதர்களிடம் அனாவசியை பேச்சை தவிர்ப்பது உத்தமம். பணியிடத்தில் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். விருப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். குடும்ப வாழ்க்கை சிறப்பு. மந்தமாக இருந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆசைப்பட்ட விஷயம் எதிர்பாராமல் கிடைக்கும். துணையின் விருப்பத்தை நிறைவேற்றி காட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பரிசும் பாராட்டும் கிடைக்கும். பொருளாதாரத்தை பொறுத்த வரை அற்புதமாக இருக்கும். நண்பர்களுடன் வெளியில் சென்றுவர வாய்ப்புக் கிடைக்கும். கடன் பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு ஆறுதலான நாள். பழைய பாக்கிகள் வசூலாகும். எலியும் பூனையுமாய் இருந்த கணவன் – மனைவிக்குள் நல்ல புரிதல்கள் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

சுபச் செய்திகள் மனமகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்பாராத தனவரவால், சேமிப்பு உயரும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும். குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சில செலவுகள் இருக்கும் ஆனால் பயனுள்ள விஷயத்திற்காகவே இருக்கும். கவலை வேண்டாம். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். திறமைகளை வெளிபடுத்த வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கல்வி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். எதிர்பாலினத்தவரிடம் பேசும்போது பேச்சில் கவனம். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்ப்பது நல்லது. கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  யாரிடமும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சிலருக்கு அவ்வப்போது சிறு காரியத் தடைகள் ஏற்படலாம். துணையிடம் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். ஆக மொத்தம் பிரச்சனை மிகுந்த நாள். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. நோய்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

சுமாரான நாள். இருந்தாலும், நம்பிக்கை இழக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும். சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கடனாக கொடுத்த பணம் கைக்கு கிடைக்க இழுத்தடிக்கும். எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். குடும்பத்தினரிடம் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தோடு இருப்பது நல்லது. நண்பர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். பெண்கள் மனதிற்கு பிடித்த பொருளை வாங்குவீர்கள். சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வார். உடன்பிறந்தவர்களிடம் இருந்து நீங்க எதிர்ப்பார்த்தைவிட அதிகமான ஆதரவு கிடைக்கும். பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். காலில் அடிபட வாய்ப்புள்ளது நடக்கும்போது கவனம் தேவை. வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். ஈகை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

விருந்தினர் வருகையால், குடும்பத்தில் சந்தோசம் பெருகும். இருந்தாலும் செலவுகளும் அதிகரித்து காணப்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். புதிய முயற்சிகள் தடைபடும். எனவே, முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. வியாபாரம் சுமாராகவே இருக்கும். சிலருக்கு அஜாக்கிரதை காரணமாக பண நஷ்டம் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களுடன் சண்டை ஏற்படும் நாள். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும்.. குறிப்பா இந்த ராசியினர்.. | Tomorrow Rasi Palan in Tamil | 31.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தனவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் லாபம் சிறப்பாகவே இருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். புதிய பெண்களிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும். பணியிடத்தில் திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர்கள். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புது நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் நாளாக இருக்கும். சகோதரனின் நடவடிக்கைகள் கோபத்தை ஏற்படுத்தலாம், அனுசரித்து போவது நல்லது. சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்