Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 4 ஆம் நாளுக்கான [17 ஏப்ரல் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 06.30 - 07.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். தொழில் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு உயரிய பதவி உயர்வு கிடைக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டு. புதிய நண்பர்களின் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்திலும், பணியிடத்திலும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். திருமண உறவில் உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். எல்லா காரியத்திலும் வெற்றி நிச்சயம் உண்டு. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

குடும்பத்தில் உள்ளவர்களிடம் சலசலப்பு ஏற்படலாம். பொறுமையுடனும், நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எல்லா காரியத்தையும் கவனத்தோடு கையாள்வது நல்லது. சிறந்த முயற்சியோடு கையாள்வதன் மூலம் வெற்றி நிச்சயம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தது நிறைவேறாமல் போகலாம். எதிலும் ஆழ்ந்த சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். ஏமாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் சற்று பொறுமையைக் கடைபிடித்தல் நல்லது. உடன் வேலை செய்பவர்களிடம் சண்டை ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரம் சிறப்பாக உள்ளது. எதிர்பாலினத்தவரின் அன்பு கிடைக்கும். பொருளாதாரம் மேம்பாடு அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அமைதியுடன் செயல்பட்டால், நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ற பலனைப் பெறுவீர்கள். செய்ய நினைக்கும் காரியங்கள் சிறப்பாக நடக்கும். போட்டியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். போட்டித் தேர்வில் வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட கால கனவுகள் நினைவாகும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. எல்லோருடனும் அன்பு காட்டுவீர்கள். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். எல்லா முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இதுவரை இருந்த குழப்பங்கள் விலகி விடும். கணவன், மனைவியிடையே அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உறவினர்கள் வழி நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று சிறப்பான நாள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறுவீர்கள். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். உறவினர்கள் வழி நன்மை பெறுவீர்கள். புதிய முயற்சிகள் அனுகூலமான பலன்களைத் தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். உங்களது வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் விலகும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

இன்று உங்களுக்கு கஷ்டங்கள் நிறைந்த சூழல் இருந்தாலும், சாதகமான நாளாக அமைகிறது. அதிக கவனம் தேவை. சரியான நேரத்தில் பணி செய்ய முடியாத நிலை ஏற்படலாம். உயர் அதிகாரிகளுடன் பேசும் போது, கவனத்துடன் பேச வேண்டும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால், பிரச்சனை ஏற்படலாம். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

கொடுத்த கடன்கள் அனைத்தும் திரும்பப் பெறுவீர்கள். தந்தை வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறலாம். உறவினர்களின் வழி நன்மை கிடைக்கும். பொருளாதார மேம்பாடு உண்டு. வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வரவு கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கி நிம்மதி அடைவீர்கள். செலவுகள் குறையும். நீண்ட காலமாக எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நீங்கள் எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சகோதரர்கள் மூலம் பணவரவு கிடைக்கும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனை கேட்டு, முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சி வெற்றியைத் தேடிக் கொடுக்கும். மனைவியுடன் இருந்து வந்த சலசலப்புகள் விலகி விடும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகலாம். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசுவதற்கு முன் வார்த்தைகளில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

இன்று தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எதிர்பாராத பணவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் முயற்சிக்கு ஏற்ற பலன் பெறுவீர்கள். குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் பிறக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நாள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் மேன்மை பெறுவீர்கள்.  ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

தலைக்கு மேல பிரச்சனை வரப்போகுது.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 17.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டு உயர்வதற்கான வழியைத் தேடுவீர். மற்றவர்களுடன் இருந்த பிரச்சனைகள் விலகி விடும். வெளிநாட்டுப் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். உடல்நலம் சிறப்பாக உள்ளது. இன்று அனுகூலமான நாளாக அமையும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் பெறுவீர்கள். கூடுதல் லாபம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்