Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 31 ஆம் நாளுக்கான [14 ஜூன்2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.30 – 10.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்படலாம். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். எதிர்பாராத சில பயணங்களால், அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படுவது சிறப்பு. இணையம் சார்ந்த செயல்பாடுகளில் அதிக கவனம் தேவை. தேவையற்ற சிந்தனைகள் மன நிம்மதியைக் கெடுக்கும். இது போன்ற விஷயங்களை ஆழ்ந்து சிந்திக்காமல் இருப்பது மன நிறைவைத் தரும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

மனதை வருடிய சில விஷயங்களுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். செய்யும் செயல்களில் ஒரு வித நெருக்கம் உண்டாகலாம். இருப்பினும், இவை அனைத்தும் நன்மையைத் தரக்கூடியதாக அமையும். திடீர் பயணங்களால், நன்மை உண்டாகலாம். முதலீடுகள் செய்வதில் உங்களின் நோக்கம் அதிகரிக்கும். மேலும், புரியாத செயல்பாடுகளில் உங்களுக்கு அதிக ஆர்வம் உண்டாகும். கடன் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். பொருளாதார வரவு அதிகரிக்கும். இருப்பினும், சிக்கனமாகச் செலவு செய்வது சிறப்பு. அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டும் நாளாக அமையும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வாழ்வில் புதிய இலக்குகளை வைத்து, அதை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். செல்வச் சேர்க்கை தொடர்பான விஷயங்களில், உங்களின் ஈடுபாடு அதிகரிக்கும். கலைப்பணிகளில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். சபைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில், மிகுந்த மதிப்புடனும், மரியாதையுடனும் செயல்படுவீர்கள். போட்டி, பந்தயம் போன்றவை உங்களுக்குச் சாதகமாக முடியும். எதிலும் நிதானத்துடனும் செயல்பட்டு, காரியங்களை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

விவசாயம் சார்ந்த துறையில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். உறவினர்களைப் பற்றிய புரிதல் அதிகமாகும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் விலகி ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். தாயார் வழியில் உங்களுக்கு ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகலாம். வாகன பயணங்களால், உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலை உண்டாகும். தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் செயல்பட்டு, எதிலும் வெற்றியை ஈட்டுவதற்கான சிறப்பான நாள். புதிய பணி தொடர்பான தேடுதலில் ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

 

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

புதிய தொழில்நுட்பத்தின் மீது அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார பணிகளில் நீங்கள் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகலாம். இதனால், புதிய அனுபவம் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். இழுபறியான காரியங்கள் அனைத்தையும் விரைவில் செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரப் பயணங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

சாதாரண செயல்களையும், மிகுந்த கவனத்தில் செய்ய வேண்டும். மனதில், ஒரு விதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். பழைய சிக்கல் சார்ந்தவற்றில் மிகுந்த கவனம் வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் மிகுந்த பொறுமையுடனும், நிதானத்துடனும் கையாள வேண்டும். பொருளாதார சரிவால், மனதில் அமைதியற்ற சூழல் ஏற்படலாம். விளையாட்டான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இதனால், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். உடனிருப்பவர்களிடம் வாக்குறுதி அளிப்பதில் சிந்தித்து செயல்படுவது நல்லது. சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

நண்பர்களின் மூலம், மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். சகோதரர்களால், ஆதாயமான வாய்ப்புகளைப் பெறுவீர். புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த குழப்பங்கள் விலகி நெருக்கம் அதிகமாகும். வழக்கு தொடர்பான விஷயத்தில், நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து செயல்படுவது நல்லது. உறவினர்களின் வழி மகிழ்ச்சி கிட்டும். தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டு. ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. கடன் தொடர்பாக இருந்த நெருக்கடிகள் விலகி தீர்வு காண்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் நாளாக அமைகிறது. உத்தியோகத்தில் சில மாற்றமான வாய்ப்புகள் உண்டாகலாம். புதுவிதமான இடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். இதனால், மனதில் அமைதியும், திருப்தியும் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் வழி ஆதாயம் காண்பீர்கள். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உங்களின் குண நலன்களில் மாற்றம் உண்டாகலாம். கல்வி சார்ந்த பணிகளில், முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். இதனால், நன்மை உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஈட்டுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுக்கும் தினமாக அமைகிறது. உடல் ஆரோக்கியத்தில் நலம் உண்டாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் செல்வாக்கும், மதிப்பும் உயர்ந்து காணப்படுவீர்கள். வியாபாரப் பணிகளில் துரிதமுடன் செயல்பட்டால், வெற்றி உண்டாகும். புதிய பயணங்களால், மாற்றம் ஏற்படலாம். அறக் காரியங்களில் உங்களுக்கான ஈடுபாடு அதிகமாக இருக்கும். கடன் தொடர்பாக இருந்த நெருக்கடிகள் அனைத்தும் விலகி விடும். உறவினர்களின் வழி அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி தொடர்பானவற்றில், உங்களின் ஆர்வம் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதில், எந்த காரியத்தையும் தைரியமாகச் செய்வதற்கான தன்னம்பிக்கை உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கலாம். தகவல் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காண்பீர்கள். மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கும் அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பாக இருந்த பிரச்சனைகள் விலகி தீர்வு உண்டாகும். பொருளாதார வரவு மேம்படும். இருப்பினும், சிக்கனமாகச் செலவு செய்வது முக்கியம் ஆகும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கவனமா இருக்கணும்..! | 14.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிப்பதில் சிந்தித்து செயல்பட வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் பெறுவீர்கள். கண் பார்வை சார்ந்த குறைபாடுகள் குறையும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை செய்வதில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணித துறையில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்